வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்.. Restricted Chat அம்சம்.. 4 புதிய கட்டுப்பாடுகள்.. இதோ முழு விவரம்..
வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது தனிநபர் பாதுகாப்பை (Privacy) அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் 'ரெஸ்ட்ரிக்டட் சாட்' (Restricted Chat) என்ற புதிய அம்சத்தைச் சோதனை முறையில் அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
முன்பு பயன்பாட்டில் இருந்த அட்வான்ஸ்டு சாட் பிரைவசி (Advanced Chat Privacy) என்ற அமைப்பிற்குப் பதிலாக, இன்னும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் இந்த 'ரெஸ்ட்ரிக்டட் சாட் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா (Beta) பயனர்களுக்குப் பரிசோதனை முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

Restricted Chat அம்சத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவந்தால், குறிப்பிட்ட சாட்டில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தானாகச் சேமிக்கப்படாது. அதேபோல் சாட் விவரங்களை எக்ஸ்போர்ட் செய்யவோ, மெட்டா ஏஐ அம்சங்களைப் பயன்படுத்த முடியாது. மேலும் இந்த வசதி ஆன் செய்யப்பட்ட சாட்கள், வாட்ஸ்அப் வெப் உள்ளிட்ட பிற இணைக்கப்பட்ட சாதனங்களில் இயங்காது. முதன்மை செல்போனில் மட்டுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த வசதி அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் Restricted Chat அம்சத்தை ஆக்டிவேட் செய்ய ஒரு குறிப்பிட்ட நபருடனான உரையாடலில் Chat Info Screen என்ற அம்சத்தை ஆன் செய்ய வேண்டும். அதன்பின்பு அந்த சாட்-க்குள் பகிரப்படும் தகவல்களுக்குப் பின்வரும் 4 கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
1.புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்: 'Restricted Chat' வசதி ஆன் செய்யப்பட்ட சாட்டில் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் உங்கள் போனின் கேலரியில் தானாகச் சேமிக்கப்படாது. இதனால், தனிப்பட்ட உரையாடலில் பகிரப்படும் முக்கியமான கோப்புகள் போனில் தேவையில்லாமல் சேமிக்கப்படுவது தடுக்கப்பட்டு, உங்கள் தனியுரிமைக்கும் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும். குறிப்பாக இதன் மூலம் உங்கள் போனை மற்றவர்கள் வாங்கினாலும் அந்தத் தனிப்பட்ட கோப்புகளைப் பார்க்க முடியாது.
2.எக்ஸ்போர்ட் செய்ய முடியாது: தனியுரிமை மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 'Restricted Chat' வசதி செயல்படுத்தப்பட்ட சாட்டின் முழு உரையாடல் வரலாற்றையும் (Chat History) எக்ஸ்போர்ட் செய்ய முடியாது. அதேபோல், சாட்டில் உள்ள தகவல்களை மின்னஞ்சல் உள்ளிட்ட பிற வழிகளில் தனியாகப் பகிரும் வசதியும் இருக்காது.
3.மெட்டா ஏஐ பயன்படுத்த முடியாது: Restricted Chat வசதி செயல்படுத்தப்பட்டுள்ள தனிப்பட்ட உரையாடலில், வாட்ஸ்அப்பின் மெட்டா ஏஐ அம்சம் அல்லது பிற தானியங்கி ஏஐ (AI) டூல்களைப் பயன்படுத்த முடியாது. எனவே இதனால் உங்கள் தனிப்பட்ட தரவுகள் ஏஐ தொழில்நுட்பங்களால் வாசிக்கப்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்படுகிறது.

4. லிங்க்டு டிவைஸ்: Restricted Chat அம்சத்தின் முக்கியமான அம்சம் இதுதான். அதாவது நீங்கள் ரெஸ்ட்ரிக்டட் செய்த சாட்கள் வாட்ஸ்அப் வெப், டெஸ்க்டாக் அல்லது பிற டேப்லெட்டுகள் போன்ற இணைக்கப்பட்ட சாதனங்களில் (Linked Devices) காண்பிக்கப்படாது. உங்கள் முதன்மை செல்போனில் மட்டுமே இயங்கும்.
இன்றைய காலகட்டத்தில், சில மூன்றாம் தரப்பு செயலிகள் (Third-party apps) மற்றும் அதிகாரப்பூர்வமற்ற வாட்ஸ்அப் கிளைண்டுகள் 'Linked Devices' வசதியைப் பயன்படுத்தி பயனர்களின் தகவல்களை அணுக முயற்சிக்கின்றன. இதைத் தடுக்கும் வகையில், 'Restricted Chat' மூலம் பாதுகாக்கப்படும் சாட்கள் இணைக்கப்பட்ட சாதனங்களில் தெரியாது. அதாவது, உங்கள் வாட்ஸ்அப் கணக்கு வேறு கணினி அல்லது லேப்டாப்பில் திறந்திருந்தாலும், இந்த ரகசிய சாட்களை மற்றவர்கள் பார்க்கவோ, படிக்கவோ முடியாது.


Click it and Unblock the Notifications
