WhatsApp செயலியில் வருகிறது சூப்பர் அம்சம்: இனி ரொம்ப நேரம் தேட வேண்டியதில்லை!

|

வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் தொடர்ந்து அருமையான அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம்
கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

அதேபோல் மற்ற செயலிகளை விட அதிக பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த வாட்ஸ்அப் செயலி. அதாவது கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 24 லட்சம் கணக்குகளை வாட்ஸ்அப் நீக்கியதாக அதன் மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர் புகார்கள்,தவறான தகவல் பரப்புதல் போன்ற கணக்குகளும் இதில் அடக்கம்.

மெட்டா

மெட்டா

குறிப்பாக மெட்டாவுக்கு சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் IT விதிகளின் கீழ், வெளியிடப்பட்ட மாதாந்திர அறிக்கையில் இது குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் புத்தம் புதிய அம்சம் ஒன்று விரைவில் வெளிவர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்க்கலாம், கேட்கலாம், பேசலாம்: கம்மி விலையில் அறிமுகமான Ambrane Glares ஸ்மார்ட் கிளாஸ்!பார்க்கலாம், கேட்கலாம், பேசலாம்: கம்மி விலையில் அறிமுகமான Ambrane Glares ஸ்மார்ட் கிளாஸ்!

புதிய அம்சம்

புதிய அம்சம்

அந்த புத்தம் புதிய அம்சம் வாட்ஸ்அப் ஐஓஎஸ் பயனர்களுக்கு முதலில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்த புதிய அம்சம் என்னவென்றால், பழைய மெசேஜ்களை திரும்ப எடுத்து படிப்பதற்கு வசதியாகத் தேதி குறிப்பிட்டுத் தேடும் வகையில் 'காலண்டர் ஐகான்' அறிமுகம் செய்யப்பட உள்ளது.

FASTag பேலன்ஸை எப்படி SMS மூலம் அறிந்துகொள்வது? SBI பயனர்களுக்கு கிடைத்த புது வசதி.!FASTag பேலன்ஸை எப்படி SMS மூலம் அறிந்துகொள்வது? SBI பயனர்களுக்கு கிடைத்த புது வசதி.!

சோதனை

மேலும் இதுகுறித்து WABetaInfo கூறுகையில், சமீபத்தில் வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு யுபிஐ மூலம் பணம் அனுப்பும் வசதியை எளிதாக்கியது. அதேபோல் விரைவில் ஐஒஎஸ் பயனர்களுக்கு காலண்டர் ஐகான் அறிமுகம் செய்யப்பட உள்ளது எனவும், பின்பு முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் செயல்படுத்த அறிமுகம் செய்யப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் பெஸ்டான ஆல்ரவுண்டர் 5G போன் வேண்டுமா? அப்போ இந்த லிஸ்டை பாருங்க.!பட்ஜெட் விலையில் பெஸ்டான ஆல்ரவுண்டர் 5G போன் வேண்டுமா? அப்போ இந்த லிஸ்டை பாருங்க.!

வாட்ஸ்அப் பீட்டா

வாட்ஸ்அப் பீட்டா

குறிப்பாக வாட்ஸ்அப் பீட்டா iOS 22.0.19.73 மூலம் இந்த வசதியை பயன்படுத்தக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்துவது எப்படி என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

உஷார் மக்களே.! இப்படி ஒரு SMS உங்களுக்கு வந்தா அதை நம்பாதீங்க.! EB பில் மூலம் பண மோசடி!உஷார் மக்களே.! இப்படி ஒரு SMS உங்களுக்கு வந்தா அதை நம்பாதீங்க.! EB பில் மூலம் பண மோசடி!

வழிமுறை-1

வழிமுறை-1

அதாவது நீங்கள் உங்களது நண்பர்களுக்கு முன்பு அனுப்பிய மெசேஜை பார்க்க விரும்பினால், முதலில் அவர்களது சாட் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

யானையும் Appleம் ஒன்னு- இந்த வாட்சை ரிப்பேர் செய்யும் செலவிற்கு 3 Smart TV வாங்கிருவோம்..யானையும் Appleம் ஒன்னு- இந்த வாட்சை ரிப்பேர் செய்யும் செலவிற்கு 3 Smart TV வாங்கிருவோம்..

வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து அங்கு இருக்கும் காலண்டர் ஐகான் கிளிக் செய்தவுடன், காலண்டர் காண்பிக்கப்படும்.

யோசிக்காம இன்றே Realme C33 போனை வாங்கினால் விலை 8,999 மட்டுமே: என்ன செய்யணும் தெரியுமா?யோசிக்காம இன்றே Realme C33 போனை வாங்கினால் விலை 8,999 மட்டுமே: என்ன செய்யணும் தெரியுமா?

வழிமுறை-3

வழிமுறை-3

அதன்பின்பு நீங்கள் எந்த தேதியில் பேசிய மெசேஜ் வேண்டுமோ, அந்த தேதியை சரியாக குறிப்பிட்டு செலக்ட் செய்யலாம்.

Amazon இருக்க பயமேன்- எந்த பொருளையும் இப்ப வாங்காதீங்க.. மீறினால் ரொம்ப வருத்தப்படுவீங்கAmazon இருக்க பயமேன்- எந்த பொருளையும் இப்ப வாங்காதீங்க.. மீறினால் ரொம்ப வருத்தப்படுவீங்க

வழிமுறை-4

வழிமுறை-4

அதேபோல் இந்த காலண்டர் வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால், அதே சாட் பக்கத்தில் scroll செய்தால் போதும் காலண்டர்மறைந்துவிடும்.

தரமான சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 11: பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க.!தரமான சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 11: பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க.!

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு

நீங்கள் குறிப்பிட்ட தேதியில் பேசிய மெசேஜ் திரும்ப சென்று படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் இந்த அம்சம் முதலில் ஐஒஎஸ் பயனர்களுக்கு தான் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த அம்சம் எப்போது கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
WhatsApp Lets You Search Messages By Date: Here's How It Works: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X