உடனே Settings போங்க.. இதை கிளிக் பண்ணுங்க.. WhatsApp-ல் இனி ஒருத்தராலும் உங்க Location-ஐ பார்க்க முடியாது!
வாட்ஸ்அப்பில் ஐபி ப்ரொடெக்ட் (IP Protect) என்று அழைக்கப்படும் ஒரு புதிய ப்ரைவஸி அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே இந்த அம்சம் உங்கள் ஐபி அட்ரெஸ்-ஐ மறைக்க உதவுகிறது. இதனால் என்ன பயன்? இதை ஆன் (ON) செய்வது எப்படி? இதோ விவரங்கள்:
வாட்ஸ்அப் ஐபி ப்ரொடெக்ட் அம்சத்தை ;செய்தால் என்ன ஆகும்? இந்த அம்சத்தை நீங்கள் இயக்கியதும், வாட்ஸ்அப் வழியாக நீங்கள் செய்யும் அழைப்புகள் ஆனது டிவைஸ்களுக்குகளுக்கு இடையே நேரடியாக (Directly between Devices) இல்லாமல் வாட்ஸ்அப் சேவையகங்கள் (WhatsApp servers) மூலம் அனுப்பப்படும். இதனால் நமக்கு என்ன நன்மை என்று நீங்கள் கேட்கலாம்!

வாட்ஸ்அப் கால்கள் ஆனது வாட்ஸ்அப் சர்வர்கள் மூலம் நிகழும் போது, மற்றவர்களால் (அதாவது வாட்ஸ்அப் காலில் உள்ள பங்கேற்ப்பாளர்களால்) உங்களுடைய ஐபி அட்ரெஸ்-ஐ (IP Address) கண்டுபிடிக்க முடியாது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இது உங்கள் இருப்பிடத்தை (Location) கண்காணிப்பதை மிகவும் கடினமான காரியமாக மாற்றும்.
வாட்ஸ்அப் காலில் உள்ள மற்ற பங்கேற்பாளர்களிடமிருந்து உங்கள் ஐபி அட்ரெஸ்-ஐ மறைப்பதன் மூலம் இது உங்கள் தனியுரிமை (Privacy) பாதுகாக்கப்படுகிறது. மேலும் இது உங்கள் வாட்ஸ்அப் கால்களுக்கு கூடுதல் பாதுகாப்பையும் (Additioanl Security) சேர்க்கிறது. ஒட்டுமொத்தமாக, வாட்ஸ்அப்பில் மேலதிக ப்ரைவஸியை விரும்பும் அனைவருக்குமே இதுவொரு மிகச்சிறந்த அம்சமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஐபி அட்ரெஸை மறைக்க உதவும் வாட்ஸ்அப் ஐபி ப்ரொடெக்ட் அம்சத்தை ஆன் / எனேபிள் செய்வது எப்படி?
1. உங்கள் மொபைல் போனில் உள்ள வாட்ஸ்அப் செயலியை திறக்கவும்.
2. பின்னர் வாட்ஸ்அப்பிற்குள் உள்ளே, மேல் வலது மூலையில் உள்ள த்ரீ டாட்ஸ் ஐகானை (Three dots icon) கிளிக் செய்யவும்.
3. இப்போது செட்டிங்ஸ் (Settings) விருப்பத்திற்குள் செல்லவும்.
4. பின்னர் ப்ரைவஸி (Privacy) என்கிற விருப்பத்திற்கும் செல்லவும்
5. கீழ்நோக்கி ஸ்க்ரோல் (Scroll down) செய்ய கடைசியாக அட்வான்ஸ்டு (Advanced) என்கிற பிரிவ காண்பீர்கள், அதை கிளிக் செய்யவும்.
6. அதனுள் ப்ரொடெக்ட் ஐபி அட்ரெஸ் இன் கால்ஸ் (Protect IP address in calls) என்கிற விருப்பத்தை காண்பீர்கள்
7. அதன் அருகே உள்ள சுவிட்சை டாகில் செய்யவும் (Toggle on the switch).

அவ்வளவு தான், இப்போது உங்கள் வாட்ஸ்அப்பில் ஐபி ப்ரொடெக்ட் அம்சம் ஆன் / எனேபிள் செய்யப்பட்டு இருக்கும். இந்த அம்சம் இயக்கப்பட்டதும் வாட்ஸ்அப்பில் நீங்கள் அழைக்கும் நபர்களிடமிருந்து உங்கள் ஐபி அட்ரெஸ் மறைக்கப்படும். முன்னரே குறிப்பிட்டபடி இது உங்கள் லோக்கேஷனை கண்காணிப்பதை கடினமாக்கும்.
இந்த அம்சத்தை இயக்குவதின் மூலம் வாட்ஸ்அப் அழைப்புகளின் தரம் (WhatsApp Call Quality) சிறிதளவு பாதிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும். ஏனென்றால், உங்கள் கால்கள் டிவைஸ்களுக்கு இடையே நேரடியாக இல்லாமல் வாட்ஸ்அப் சேவையகங்கள் மூலம் அனுப்பப்படும். இது கால் குவாலிட்டியில் சிறிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
தற்போது இந்த அம்சம் பெரும்பாலான வாட்ஸ்அப் பயனர்களுக்கு அணுக கிடைக்கிறது. ஒருவேளை உங்களுக்கு இது இன்னமும் வந்து சேரவில்லை என்றால், நீங்கள் வாட்ஸ்அப்பின் பழைய வெர்ஷனை (Old Version) பயன்படுத்தி கொண்டிருக்கலாம். உடனே கூகுள் பிளே ஸ்டோருக்கு (Google Play Store) சென்று வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் (Update to Latest Version) ஆகவும்.
ஒருவேளை நீங்கள் வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பை தான் பயன்படுத்துகிறீர்கள் என்றால்.. அதாவது கூகுள் பிளே ஸ்டோரில் உங்களுக்கு எந்த அப்டேட்டும் கிடைக்கவில்லை என்றால்.. உங்களுக்கு இன்னும் அது அனுப்படவில்லை என்று அர்த்தம். ஆக ஒரு சில நாட்கள் காத்திருப்பது நல்லது. பொதுவாகவே வாட்ஸ்அப் அப்டேட்கள் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டே அனுப்பப்படும்.


Click it and Unblock the Notifications








