வாய்ஸ் மெசேஜ் போல.. WhatsApp இல் அறிமுகமான வீடியோ மெசேஜ் அம்சம்.. பயன்படுத்துவது எப்படி?
வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனமானது, மேம்பட்ட பயனர் அனுபவத்தை வழங்கும் புதிய அம்சங்களை வெளியிடுவதில் மிகவும் மும்முரமாக உள்ளது. சமீபத்தில் தான் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் பயனர்களுக்கு, தாங்கள் அனுப்பிய மெசேஜை திருத்த உதவும் எடிட் மெசேஜ் (Edit Message) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) வெர்ஷன்களில் வீடியோ மெசேஜ் (Video message) என்கிற புதிய அம்சத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப் வழியாக 60 வினாடிகள் வரை மேலும் குறுகிய வீடியோக்களை (60 Seconds Short Videos) பகிரும் திறனை வழங்கும்.

அதாவது டெக்ஸ்ட் மெசேஜ் (Text Message) மற்றும் வாய்ஸ் மெசேஜ் (Voice Message) அம்சங்களை போலவே, புதிய வீடியோ மெசேஜ் அம்சத்தின் வழியாக 60 வினாடிகள் வரை நீளும் சிறிய வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள முடியும்.
வீடியோ மெசேஜ் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி? வாட்ஸ்அப்பீட்டாஇன்ஃபோ (WABetaInfo) கூற்றுப்படி, உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டில், வீடியோ மெசேஜை பதிவு செய்யும் திறன் இயக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க எளிதான மற்றும் விரைவான வழி ஒன்று உள்ளது.
உங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள ஏதேனும் ஒரு சாட்டிற்கு (Chat) சென்று, அந்த சாட் பாரில் (Chat Bar) உள்ள மைக்ரோஃபோன் பட்டனை (Microphone Button) கிளிக் செய்யவும். அது வீடியோ கேமரா பட்டனாக மாறினால் உங்களால் வீடியோ மெசேஜை ரெக்கார்ட் செய்ய முடியும் என்று அர்த்தம்.
டெக்ஸ்ட் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை போலவே வாட்ஸ்அப்பின் புதிய வீடியோ மெசேஜ் அம்சமும் கூட எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டவை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது அனுப்புனர் மற்றும் பெறுநருக்கு இடையே நடக்கும் உரையாடலானது, வெளியே உள்ள யாராலும் அணுக முடியாது, வாட்ஸ்அப் நிறுவனத்தால் கூட அணுக முடியாது.
உங்களுக்கு வரும் வீடியோ மெசேஜை ஃபார்வேட் (Forward) செய்ய முடியுமா? தற்போது வரையிலாக அது சாத்தியமில்லை. இருப்பினும் 'வியூ ஒன்ஸ்' மோட்-ஐ (View Once Mode) பயன்படுத்தி அனுப்பப்படாத பட்சத்தில், உங்களுக்கு வரும் வீடியோ மெசேஜை ஸ்கிரீன் ரெக்கார்டிங் (Screen Recording) மூலம் உங்களால் சேமிக்க முடியும்.
தற்போது வரையிலாக இந்த அம்சம், வாட்ஸ்அப்பின் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது. அதாவது அனைவருக்கும் வந்துசேரும் முன் நடத்தப்படும் சோதனை கட்டத்தில் உள்ளதென்று அர்த்தம். இந்த அம்சத்தை அணுக விரும்பும் ஐஓஎஸ் பயனர்கள், 23.6.0.73 வெர்ஷனையும், ஆண்ட்ராய்டு பயனர்கள் 2.23.8.19 வெர்ஷனையும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications