கேலரியில் வாட்ஸ்அப் புகைப்படங்கள் காட்டவில்லையா?- இதை மட்டும் செய்தாலே போதும்!

|

சமூகவலைதளங்களில் மிகவும் பிரதான பயன்பாடாக இருப்பது வாட்ஸ்அப். தகவல் பரிமாற்ற தளங்களில் மிகவும் பிரதானமாக இருப்பது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் தங்களது பயனர்களுக்கு பல்வேறு புதுப்புது அம்சங்களை வெளியிட்டு வருகிறது. பயனர்களின் தேவையை அறிந்து தொடர்ந்து அப்டேட்களை வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் மிகவும் மாறுபட்ட தகவல்தொடர்பு பயன்பாட்டு தளங்களில் ஒன்றாகும். பயனர்கள் மீடியாவை பகிரவும், ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளை பதிவிடவும் அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் வாட்ஸ்அப் படங்கள் கேலரியில் காட்டப்படவில்லை என்றால் அதற்கான தீர்வு குறித்து பார்க்கலாம்.

வாட்ஸ்அப் படங்கள், ஆவணக் கோப்புகள்

வாட்ஸ்அப் படங்கள், ஆவணக் கோப்புகள்

வாட்ஸ்அப்பில் படங்கள், ஆவணக் கோப்புகள் மற்றும் பல மீடியாக்களை பகிர்வதற்கு அனுமதிக்கிறது. இருப்பினும் சில சமயங்களில் வாட்ஸ்அப் படங்கள் தங்கள் கேலரியில் காட்டாத நிலை ஏற்படலாம். கேலரியில் காட்டப்படாத வாட்ஸ்அப் படங்கள் காட்டப்படாததற்கு பல காரணங்கள் இருக்கிறது. இந்த நிலை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் மாடல்கள் இரண்டிலும் இருக்கலாம். அதேசமயத்தில் இந்த சிக்கலை சரிசெய்வதற்கான முறைகளும் இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் வாட்ஸ்அப் படங்கள் சிக்கலை சரிசெய்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

வாட்ஸ்அப் படங்களை எவ்வாறு சரிசெய்வது

வாட்ஸ்அப் படங்களை எவ்வாறு சரிசெய்வது

ஆண்ட்ராய்டில் கேலரியில் காட்டப்படாத வாட்ஸ்அப் படங்களை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்து பார்க்கலாம். மீடியா விசிபிலிட்டி அம்சம் வாட்ஸ்அப்பில் வழங்கப்படும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். கேலரியில் காட்டப்படாத வாட்ஸ்அப் படங்களை எப்படி பார்க்கலாம். ஆண்ட்ராய்ட் சாதனங்களில் எப்படி இந்த சிக்கலை சரிசெய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

புகைப்படங்களை காட்டுவதற்கான வழிமுறைகள்

புகைப்படங்களை காட்டுவதற்கான வழிமுறைகள்

ஸ்டெப் 1: வாட்ஸ்அப் பயன்பாட்டை திறந்து செட்டிங்க்ஸ் பயன்பாட்டுக்குள் சென்று சேட்ஸ் என்பதை திறக்க வேண்டும்

ஸ்டெப் 2: அதில் Media Visibility toggle என்பதைத் தேர்ந்தெடுத்து அதை இயக்கவும். இந்த மாற்று விருப்பமானது அனைத்து வாட்ஸ்அப் தொடர்புகளுக்குமான மீடியா விசிபிலிட்டியை காண உதவும்.

ஸ்டெப் 3: இந்த செயல்பாடு முடிந்ததும் ஆண்ட்ராய்டு மொபைலில் கேலரி ஆப்ஸை திறந்து அதில் வாட்ஸ்அப் படங்கள் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

மீடியா நிலையை முடக்குவதற்கான விருப்பம்

மீடியா நிலையை முடக்குவதற்கான விருப்பம்

கூடுதலாக இதில் குறிப்பிட்ட தொடர்புகளுக்கு மீடியா நிலையை முடக்குவதற்கான விருப்பமும் உங்களுக்கு காட்டப்படும்.

ஸ்டெப் 1: வாட்ஸ்அப்பை ஓபன் செய்து மீடியா தெரிவு நிலையை முடக்க விரும்பும் குறிப்பிட்ட தொடர்பை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஸ்டெப் 2: செட்டிங் பயன்பாட்டை திறந்து தொடர்புகளை ஓபன் செய்து, மீடியா விசிபிலிட்டி நிலையை தேர்ந்தெடுக்கவும். அதில் வாட்ஸ்அப் படங்களை பெற விரும்பினால் ஆம் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லை என்றால் இல்லை என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கேலரியில் காட்டப்படாத படங்களை சரிசெய்வது எப்படி

கேலரியில் காட்டப்படாத படங்களை சரிசெய்வது எப்படி

கேலரியில் காட்டப்படாத படங்களை சரிசெய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

கேலரி சிக்கலில் காட்டப்படாத வாட்ஸ்அப் படங்களை சரிசெய்ய ஆண்ட்ராய்டு போன்களுக்கு சில வழிகள் இருக்கிறது. இதில் பயனர்கள் .nomedia என்ற கோப்பை நீக்க வேண்டும்.

உங்கள் ஃபோன் அல்லது எந்த சேமிப்பு பகுதிகளிலும் நோமீடியா கோப்புகள் இருக்கும் போது அதன் உள்ளட்டக்கம் ஆண்ட்ராய்டு கேலரி ஆப்ஸ்கள் மட்டுமின்றி எந்த மல்டிமீடியா ப்ளேயர்களிலும் காட்டப்படாது. இதற்கு .nomedia என்ற கோப்புறை சரிசெய்வதன் மூலம் சிக்கல் நீக்கப்படும். அதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

.nomedia என்ற கோப்புகள்

.nomedia என்ற கோப்புகள்

ஸ்டெப் 1: தங்கள் ஆண்ட்ராய்டு போனில் கோப்புகளை திறந்த செட்டிங்க்ஸ் என்பதற்கு செல்லவும்.

ஸ்டெப் 2: மறைக்கப்பட்ட மீடியா கோப்புகளை காட்டு என்பதை இயக்க வேண்டும்.

ஸ்டெப் 3: தங்கள் மொபைலில் அமைப்புகள் பயன்பாட்டை திறக்கவும். இதில் சேமிப்பகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஸ்டெப் 4: வாட்ஸ்அப் கோப்புறை தேர்ந்தெடுத்து அதில் மீடியாவை தேர்ந்தெடுக்க வேண்டும் பின் கடைசியாக வாட்ஸ்அப் படங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஸ்டெப் 5: இதில் .nomedia என்ற கோப்புகள் காட்டப்படும். அதில் வாட்ஸ்அப் பிரைவேட் கோப்புறைகளில் இருந்து .nomedia ஃபைல்களை நீக்கலாம்.

Best Mobiles in India

English summary
WhatsApp images not displayed in the gallery?- Here the simple steps to fix

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X