ஓஹோ.. இது தான் விஷயமா! லேப்டாப் வழியாக WhatsApp Call செய்ய முடியுமா? ஆம் என்றால் அதை செய்வது எப்படி?

|

மொபைல் போன் வழியாக வாட்ஸ்அப் கால் (WhatsApp Call) செய்வது போலவே, லேப்டாப் வழியாகவும் வாட்ஸ்அப் கால் செய்ய முடியமா? என்கிற கேள்விக்கான பதிலை நீங்கள் தேடியது உண்டா?

ஆம் என்றால்.. இந்த கட்டுரை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்!

லேப்டாப் வழியாக WhatsApp Call செய்ய முடியுமா?

லேப்டாப் வழியாக WhatsApp Call செய்ய முடியுமா?

பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் நிறுவனமான வாட்ஸ்அப், அதன் வாட்ஸ்அப் கால் (WhatsApp Call) அம்சத்தை அதன் அனைத்து தளங்களுக்கும் விரிவுபடுத்த உள்ளது.

ஆக இப்போதைக்கு முடியாது என்றாலும் கூட, கூடிய விரைவில் ஒரு லேப்டாப் வழியாக உங்களால் வாட்ஸ்அப் கால் செய்ய முடியும்!

ஒருவழியாக முடிவுக்கு வந்தது! WhatsApp-ல் Forward செய்யும் போது இருந்த முக்கிய குறை.. இனி இருக்காது!ஒருவழியாக முடிவுக்கு வந்தது! WhatsApp-ல் Forward செய்யும் போது இருந்த முக்கிய குறை.. இனி இருக்காது!

இதற்காக.. உங்கள் லேப்டாப்பில் என்ன ஓஎஸ் இருக்க வேண்டும்?

இதற்காக.. உங்கள் லேப்டாப்பில் என்ன ஓஎஸ் இருக்க வேண்டும்?

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, வாட்ஸ்அப் நிறுவனம் விண்டோஸ் 11 டிவைஸ்களில் பதிவிறக்கம் செய்யக்கூடிய டெஸ்க்டாப் ஆப்பின் வழியாகவே தனது வாட்ஸ்அப் கால் அம்சத்தை சோதனை செய்து வருகிறது.

இந்த அம்சம் தற்போது வரையிலாக சோதனை கட்டத்தில் மட்டுமே உள்ளது. ஆகையால் இது அனைத்து விண்டோஸ் 11 யூசர்களுக்கும் அணுக கிடைக்காது; சில டெஸ்டர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும்.

இது அறிமுகமானதும்.. லேப்டாப் வழியாக வாட்ஸ்அப் கால் செய்வது எப்படி?

இது அறிமுகமானதும்.. லேப்டாப் வழியாக வாட்ஸ்அப் கால் செய்வது எப்படி?

வாட்ஸ்அப்பில் "ரகசியமாக" சோதனை செய்யப்படும் புதிய அம்சங்களை பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு பெயர் போன WABetaInfo வழியாக கிடைத்த தகவலின்படி - டெஸ்க்டாப்பிற்கான (அதாவது லேப்டாப்பிற்கான) வாட்ஸ்அப் கால் அம்சமானது விண்டோஸிற்கான லேட்டஸ்ட் பீட்டா வெர்ஷனில் (2.2240.1.0) காணப்பட்டுள்ளது.

இந்த அம்சம், டெஸ்க்டாப் ஆப்பின் சைட்பாரில் (Sidebar) உள்ள சாட்ஸ் (Chats) மற்றும் ஸ்டேட்டஸ் (Status) செக்ஷன்களுக்கு இடையே அமைந்துள்ளது. அது மொபைல் ஆப்பில் காணப்படுவது போலவே ஒரு கால் ஐகானை காட்டுகிறது!

யாராச்சும் சொன்னா தானே தெரியும்! பெரும்பாலான SBI பயனர்களுக்கு தெரியாத ஒரு சீக்ரெட் சர்வீஸ்! என்னது அது?யாராச்சும் சொன்னா தானே தெரியும்! பெரும்பாலான SBI பயனர்களுக்கு தெரியாத ஒரு சீக்ரெட் சர்வீஸ்! என்னது அது?

அதை கிளிக் செய்த பின்னர்!

அதை கிளிக் செய்த பின்னர்!

டெஸ்க்டாப் வெர்ஷனின் லேட்டஸ்ட் பீட்டா அப்டேட் வழியாக அணுக கிடைக்கும் வாட்ஸ்அப் கால் அம்சத்தை கிளிக் செய்ததுமே.. சேர்ச் ஆர் ஸ்டார்ட் ஏ நியூ கால் (Search or Start a new call) என்கிற வாசகத்துடன் கூடிய சேர்ச் பாக்ஸ் தோன்றும்!

அதில் நீங்கள் அழைக்க விரும்பும் காண்டாக்ட் நம்பர் அல்லது பெயரை டைப் செய்து தேடலாம்; பின் அவர்களுக்கு வாட்ஸ்அப் கால் செய்யலாம்.

இதில் ஒரு குறை இருக்கிறது!

இதில் ஒரு குறை இருக்கிறது!

லேப்டாப் வழியாக நீங்கள் ஒரு வாட்ஸ்அப் கால் செய்யும் போது அது தொடர்பான விவரங்கள், அதாவது கால் ஹிஸ்டரி (Call History) ஆனது டெஸ்க்டாப்பில் மட்டுமே பிரதிபலிக்கும்; மொபைல் போனில் உள்ள ஆப்பில் பிரதிபலிக்காது.

இந்த குறை, அனைவருக்குமான அறிமுகத்தின் போது சரிசெய்யப்படலாம் அல்லது அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் கிடைக்கும் அடுத்தடுத்த அப்டேட் வழியாக நிவர்த்தி செய்யப்படலாம். ஆனால் இதெல்லாம் எப்போது நடக்கும் என்கிற கேள்விக்கு எந்த பதிலும் இல்லை!

இந்த விவரம் தெரிஞ்ச யாருமே 2023 ஆரம்பிக்கிற வரை.. புது Phone வாங்க மாட்டாங்க! என்னது அது?இந்த விவரம் தெரிஞ்ச யாருமே 2023 ஆரம்பிக்கிற வரை.. புது Phone வாங்க மாட்டாங்க! என்னது அது?

இதை உடனே 'ட்ரை' செய்ய விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இதை உடனே 'ட்ரை' செய்ய விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும்?

முன்னரே குறிப்பிட்டபடி, இது பீட்டாவில் மட்டுமே அணுக கிடைக்கிறது. ஒருவேளை இந்த அம்சத்தை உடனே சோதித்து பார்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், பீட்டா புரோகிராமின் கீழ் ரிஜிஸ்டர் செய்து, Microsoft Store வழியாக கிடைக்கும் லேட்டஸ்ட் பீட்டா அப்டேட்டை டவுன்லோட் செய்யவும்.

பீட்டா வெர்ஷன்கள் என்றாலே நிறைய பக்ஸ் (Bugs) இருக்கும் என்பதால், கவனமாக செயல்படவும். ஏனென்றால், அவைகள் உங்கள் ஆப்பின் செயல்பாட்டை பாதிக்கலாம்!

Best Mobiles in India

English summary
WhatsApp expanding calling feature on desktop app soon users able to make WhatsApp call using laptop

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X