WhatsApp யூஸ் பண்ணுறீங்களா? இன்னும் இது தெரியாம இருந்தா வேஸ்ட்.. சாட்டை எப்படி லைக் செய்து ஹைடு செய்வது?
வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களே கொஞ்சம் கவனியுங்க, உங்கள் வாட்ஸ்அப் சாட்டில் (Private WhatsApp Chat) உங்களுடைய தனிப்பட்ட சாட் பாதுகாப்பில்லாமல் இருக்கிறதா? உங்கள் தனிப்பட்ட சாட்டை மற்றவர் யாரும் படித்திடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமா? வாட்ஸ்அப் சாட்டை ஆர்கைவ் (WhatsApp Chat Archive) செய்து மறைத்து வைக்காமல், முழுமையான பாதுகாப்புடன் ஒவ்வொரு சாட்டையும் லாக் செய்து, ஹைடு செய்து மறைத்துவைக்க (How to hide WhatsApp chat) இப்போது ஒரு எளிமையான வழியை வாட்ஸ்அப் வழங்குகிறது. உங்கள் வாட்ஸ்அப் சாட் பாக்சில் இருக்கும் சாட்டை எப்படி ஹைடு செய்து, லாக் செய்வதென்று இப்போது பார்க்கலாம்.
உலகெங்கிலும் உள்ள ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் ஆப்ஸ் என்றால் அது வாட்ஸ்அப் தான். இதனால் தானோ என்னவோ, பர்சனல், அபிஷியல் என்று எல்லா சாட்களும் ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்துவிட்டன. இதனால், பர்சனல் சாட்களுக்கென்று ஒரு தனி இடம் இல்லாமல் போய்விட்டது. மறுபுறம், பர்சனல் சாட்களை மற்றவர்களிடம் இருந்து பாதுகாப்பாக வைக்கவும் வாட்ஸ்அப் இல் ஒரு தனி இடம் இல்லாமல் போனது.

WhatsApp யூஸ் பண்ணுறீங்களா? இன்னும் இது தெரியாம இருந்தா வேஸ்ட்:
இது பல கோடி பயனர்களுக்கு சிக்கலாக இருந்து வந்தது. இந்த சிக்கலை சரி செய்யும் விதமாக சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் பிரத்தியேகமான வாட்ஸ்அப் சாட் லாக் அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த வாட்ஸ்அப் சாட் லாக் அம்சம் இருப்பது பற்றி இன்னும் பல வாட்ஸ்அப் பயனர்களுக்கு தெரியவில்லை என்பதனால், இப்போது இந்த தகவலை உங்களுடன் மீண்டும் பகிர்ந்துகொள்கிறோம்.
உங்கள் வாட்ஸ்அப் சாட்களில் நீங்கள் எந்த சாட்டை, வாட்ஸ்அப் சாட் பாக்சில் இருந்து மறைக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள். பிறகு, உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் வாட்ஸ்அப் ஓபன் செய்து, நீங்கள் ஹைடு அல்லது மறைக்க விரும்பும் சாட்டை தேர்வு செய்துகொள்ளுங்கள். பிறகு, மறைக்க விரும்பும் அந்த சாட்டை லாங் பிரஸ் செய்து, உங்கள் டிஸ்ப்ளேவின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்யவும்.
WhatsApp சாட்டை எப்படி லைக் செய்து ஹைடு செய்வது? ஈஸி டிப்ஸ்:
பின்வரும் விருப்பங்களிலிருந்து, "லாக் சாட் (Lock Chat)" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், 'இந்த சாட்டை லாக் செய்து ஹைடு செய்யவும்' என்று ஒரு அறிவிப்பு தோன்றும். "Continue" என்பதை கிளிக் செய்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட சாட் லாக் செய்யப்பட்டு, சாட் பாக்சில் இருந்து ஹைடு செய்யப்பட்டு மறைத்து வைக்கப்படும். இதை ஓபன் செய்ய வேண்டும் என்றால், உங்கள் போனில் பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் மட்டுமே அணுக முடியும்.
அல்லது போனுடன் இணைக்கப்பட்ட முக அங்கீகாரத்தை வைத்து திறக்க முடியும். இப்படி லாக் செய்யப்பட்ட சாட்களை மூன்றாம் நபர்கள் யாரும் ஓபன் செய்யவே முடியாது. உங்கள் போனில் நீங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் பிங்கர்பிரிண்ட் மற்றும் பேஸ் அன்லாக் பதிவு அடையாளங்களை மட்டுமே வைத்து திறக்க முடியும். இதன் மூலம் உங்கள் பர்சனல் வாட்ஸ்அப் சாட் முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. ஹைடு செய்யப்பட்ட வாட்ஸ்அப் சாட்டை Unhide chat என்ற விருப்பத்தின் மூலம் பழைய நிலைக்கு கொண்டுவரலாம்.


Click it and Unblock the Notifications