Jio சிம் யூஸ் பண்றீங்களா.. உங்க ஏரியாவில் 5G கிடைக்குதா.. அப்போ இந்த மாற்றம் உங்களுக்கு தான்!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது 6ஜி சேவைக்கான அடித்தளத்தை அமைத்து வரும் மறுகையில் ஜியோ 5ஜி ஸ்மார்ட்லேனை (Jio 5G Smartlane) அறிவித்துள்ளது. ஜியோ 5ஜி ஸ்மார்ட்லேன் என்றால் என்ன? இது என்ன மாதிரியான மாற்றத்தை கொண்டுவரும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
ஜியோ 5ஜி ஸ்மார்ட்லேன் என்றால் என்ன? டெக்னீக்கல் ஆக சொல்ல வேண்டுமென்றால், ஜியோ 5ஜி ஸ்மார்ட்லேன் என்பது - மொபைல் நெட்வொர்க்கின் வெவ்வேறு ஆப்களுக்கான சிறந்த ஸ்லைசிங் (Better slicing for different applications of the mobile network) ஆகும்.

எளிமையான வார்த்தைகளில்.. எல்லோருக்கும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் - நீங்கள் வீடியோ, கேமிங் அல்லது வீடியோ காலிங் என ஏதாவது செய்யும் போது, ஒவ்வொரு செயல்பாடுகளுக்கான அலைவரிசை (Bandwidth) மற்றும் லேடன்சி தேவைகள் (Latency Requirements) வேறுபடும் அல்லவா? அந்த சூழ்நிலையில், ஜியோவின் 5ஜி நெட்வொர்க் ஆனது உங்களுக்கான சிறந்த 5ஜி அனுபவத்தை வழங்க உங்கள் டிவைஸை வெவ்வேறு ஸ்லைஸ்களுடன் இணைக்கும். இதைத்தான் ஜியோ நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்லேன் என்கிறது.
ஆக நீங்கள் ஒரு ஜியோ வாடிக்கையாளர் ஆக இருந்தால் மற்றும் ஜியோவின் ட்ரூ 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதியில் இருந்தால், உங்களுடைய ஒவ்வொரு வகையான பயன்பாட்டிற்கும் ஒரு பிரத்யேக அதிவேக பாதையை ஜியோ 5ஜி ஸ்மார்ட்லேன் உருவாக்கும். நீங்கள் ஸ்ட்ரீமிங் செய்தாலும், கேமிங் செய்தாலும் அல்லது வீடியோ காலில் இருந்தாலும், குறைபாடற்ற, தடையற்ற 5ஜி அனுபவத்தை பெறுவீர்கள்.
5ஜி ஸ்மார்ட்லேனுக்காக, ஜியோ நிறுவனமானது யுஎஸ்ஆர்பி (USRP) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிவர்சல் சாஃப்ட்வேர் ரேடியோ பெரிஃபெரல் என்கிற சாஃப்ட்வேர் ஆல் வரையறுக்கப்பட்ட ரேடியோவை பயன்படுத்துகிறது. அமெரிக்காவிற்கு வெளியே தனது வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற சேவைகளை வழங்கும் உலகின் ஒரே தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ஜியோ மட்டுமே ஆகும். இதன் பொருள், இந்தியாவில் பயனர்களுக்கு இந்த சேவையை வழங்கும் ஒரே நிறுவனம் ஜியோ மட்டுமே ஆகும்.
ஜியோவின் இந்த முயற்சிக்கு ஜியோவின் 5ஜி ஸ்டென்ட்அலோன் நெட்வொர்க் துணையாக இருக்கும். இது நெட்வொர்க்குகளை ஸ்லைஸ் செய்ய ஜியோ நிறுவனத்திற்கு உதவும்; இது ஜியோ 5ஜி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மேம்பட்ட நெட்வொர்க் அனுபவத்தை வழங்க வேண்டும். ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் 5ஜி என்எஸ்ஏ நெட்வொர்க்கையே வழங்குகின்றன. ஆகையால் இவ்விரு நிறுவனங்களாலும் நெட்வொர்க் ஸ்லைசிங் செய்ய முடியாது
முன்னரே குறிப்பிட்டபடி ஜியோ நிறுவனமானது ஜியோ 6ஜி சேவைக்கான பலமான அடித்தளங்களை போட்டு வருகிறது. ஜியோ நிறுவனமானது 6ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் மற்றவர்களை விட முன்னணியில் இருக்க வேண்டும் என்கிற இலக்கு வைத்துள்ளது. அதனொரு பகுதியாக ஜியோ நிறுவனமானது எதிர்கால தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
மேலும் ஜியோ நிறுவனம் 6ஜி தொழில்நுட்பத்தை தீவிரமாக ஆராய்ந்தும், மேம்படுத்தியும் வருகிறது. 6ஜி விஷயத்தில் - 6ஜி மேம்பாடு மற்றும் 6ஜி பயன்பாட்டில் உலகளாவிய தலைவராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜியோ பணியாற்றி வருகிறது. இதுவரை ஜியோ நிறுவனம் 3,341 க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை தாக்கல் செய்துள்ளது, இதில் 25 நிதியாண்டில் 1,654 காப்புரிமைகள் அடங்கும்.
ஜியோ பிளாட்ஃபார்ம்கள் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ஆனது இந்த நிதியாண்டில் 154 காப்புரிமைகளை பெற்றுள்ளன. கடந்த மார்ச் 31 நிலவரப்படி, ஜியோ நிறுவனம் 485 காப்புரிமைகளை வைத்திருந்தது. ஜியோவின் கூற்றுப்படி, 5ஜி மற்றும் 6ஜி தொழில்நுட்பங்களில் இந்தியாவின் மிகப்பெரிய காப்புரிமை வைத்திருப்பது ஜியோ நிறுவனம் தான்!


Click it and Unblock the Notifications








