Home
How to

Jio ஸ்டார்டர் பேக்.. 2% எக்ஸ்ட்ரா கோல்ட்.. 90 நாள் இலவச OTT.. அள்ளிக்கோ MODE-ல் அம்பானி!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது அதன் பயனர்களுக்கு ஸ்டார்டர் பேக்கை வழங்குகிறது என்பதும், இந்த ஸ்டேட்டர் பேக் ஆனது ஒரே ஒரு திட்டத்துடன் மட்டுமே கிடைக்கிறது என்பதும், இதன்கீழ் 2% எக்ஸ்ட்ரா தங்கம் உட்பட பல வகையான ஜியோ ஆண்டுவிழா சலுகைகள் கிடைப்பதும் உங்களுக்கு தெரியுமா? தெரியதென்றால் - ஜியோ ஸ்டார்டர் பேக்கை பற்றிய அனைத்து கேள்விகளுக்குமான பதில்கள் இதோ:

ஜியோ ஸ்டார்ட்டர் பேக் என்றால் என்ன? ரூ.349 தான் ஜியோ ஸ்டார்டர் பேக் ஆகும். ஜியோவிடமிருந்து ஸ்டார்டர் பேக்கை பெற விரும்பும் பயனர்கள் ரூ.349 திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி இந்த ஒரு திட்டத்தின் கீழ் மட்டுமே ஸ்டார்ட்டர் பேக் கிடைக்கும்.

Jio ஸ்டார்டர் பேக்.. 2% எக்ஸ்ட்ரா கோல்ட்.. 90 நாள் இலவச OTT!

ஜியோவின் ரூ.349 திட்டத்துடன் வரும் ஸ்டார்டர் பேக்கின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? வழக்கமான நன்மைகளை பொறுத்தவரை - இந்த திட்டம் டெய்லி 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

ஜியோ ஸ்டார்டர் பேக்கின் கீழ் இந்த திட்டம் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கும். பின்னர் ஜியோ ஹாட்ஸ்டார் (டிவி மற்றும் மொபைல்) ஓடிடி-க்கான 90 நாட்கள் சந்தாவையும் வழங்கும். இந்த சந்தாவின் கீழ் பயனர்கள் சிங்கிள் ஸ்க்ரீனில் மட்டுமே ஓடிடி கன்டென்ட்களை பார்க்க முடியும்

இதனுடன், ரூ.349-ஐ ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் 50 ஜிபி ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜையும் பெறுவார்கள். இதோடு முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இனிமேல் தான் முக்கியமான நன்மைகள் வரப்போகிறது. இந்த திட்டத்தின்கீழ் ஜியோ அறிவித்துள்ள பல வகையான ஆண்டுவிழா சலுகைகளும் கிடைக்கும்.

ரூ.349 உடன் கிடைக்கும் ஆண்டுவிழா சலுகைகள்:
- பயனர்கள் ஜியோகோல்ட் (JioGold) மூலம் தங்கம் வாங்கினால் 2% கூடுதல் தங்கம்கிடைக்கும். இதை பெற +91-8010000524 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள்
- ஜியோஹோம் (JioHome) புதிய கனெக்ஷனில் 2 மாத இலவச சோதனைகிடைக்கும்

- ரிலையன்ஸ் டிஜிட்டலில் (Reliance Digital) தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னணு தயாரிப்புகளின் மீது ரூ.399 தள்ளுபடி கிடைக்கும்
- அஜியோவில் (Ajio) குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு ரூ.1,000 க்கு ரூ.200 தள்ளுபடி கிடைக்கும்
- ஜொமாடோவில் (Zomoto) ஜொமாட்டோ கோல்ட்க்கான 3 மாத சந்தா கிடைக்கும்

- ஜியோசாவ்னில் (JioSaavn) ஜியோசாவ்ன் ப்ரோ சந்தா 1 மாதம் இலவசமாக கிடைக்கும்
நெட்மெட்ஸில் (Netmeds) 6 மாத நெட்மெட்ஸ் பர்ஸ்ட் மெம்பருக்கான சந்தா இலவசமாக கிடைக்கும்
ஈஸ்மைட்ரிப்பில் (EaseMyTrip) உள்நாட்டு விமானங்களில் ரூ.2,220 தள்ளுபடி மற்றும் விமானங்களில் 15% தள்ளுபடி கிடைக்கும்

இதேபோல ஜியோ சேவையின் கீழ் இன்னொரு ஸ்பெஷல் ஆன திட்டமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. அது ரூ.601 திட்டமாகும். மாதாந்திரம் ரூ.50 செலவில், அதாவது (ரூ.50 x 12 மாதங்கள்) மொத்தம் ரூ.600 செலவின் கீழ் கிடைக்கும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் கூடிய 5ஜி எஸ்ஏ (5ஜி ஸ்டேன்ட்அலோன்) நெட்வொர்க்கிற்கான அணுகல் கிடைக்கும்.

இதுவொரு தனி திட்டம் அல்ல. ரூ.601 திட்டமானது ஒரு வவுச்சர் ஆகும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பும் ஜியோ பயனர்கள் - டெய்லி 1.5ஜிபி டேட்டாவை வழங்கும் ஏதேனும் ஒரு ஜியோ திட்டத்தை ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். அப்படி செய்யும் போது ரூ.601 திட்டத்துடன் 5ஜி அப்கிரேட் வவுச்சர்கள் கிடைக்கும். இதன்கீழ் வாடிக்கையாளர்களுக்கு ரூ.51 மதிப்புள்ள 12 அப்கிரேட் வவுச்சர்கள் வழங்கப்படும்.

வாடிக்கையாளர்கள் இந்த வவுச்சர்களைப் பயன்படுத்தி ஆண்டு முழுவதும் தங்கள் மொபைலை 5ஜி நெட்வொர்க்குடன் கனெக்டெட் ஆக வைத்திருக்கலாம். முன்னரே குறிப்பிட்டபடி 1.5ஜிபி தினசரி டேட்டா திட்டங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்களால் மட்டுமே ரூ.601 திட்டத்தின் கீழ் கிடைக்கும் அப்கிரேட் வவுச்சர்களை ரீடீம் செய்ய முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
What is Jio Starter Pack How to get 2 Percent Extra Gold and More Benefits From this Pack
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X