Home
How to

கூகுளின் புதிய அம்சம் - எப்படி வேலை செய்யும் அதனை பயன்படுத்த டிப்ஸ்

அந்நிறுவனத்தின் புதிய அறிவிப்பின் படி கூகுள் அக்கவுண்ட்டில் பயனர் விவரங்கள் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பதை பயனர்களே நிர்ணயம் செய்ய முடியும்.

கூகுள் நிறுவனம் I/O 2019 நிகழ்வினை கீநோட் உரையுடன் துவங்கியது. இதில் கூகுள் சேவைகள் மற்றும் சாதனங்களில் பயனர் தனியுரிமையை பாதுகாக்கும் பல்வேறு அம்சங்கள் மற்றும் சேவைகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் முக்கிய குறிக்கோள் தனியுரிமையை பாதுகாப்பது தான் என்றும் கூகுள் அறிவித்தது. எனினும், பயனர்கள் தங்களது தனியுரிமை செட்டிங்களை இயக்கி, கூகுள் ஏற்கனவே வைத்திருக்கும் தனிப்பட்ட விவரங்களை எடுக்க முடிந்தால் எப்படி இருக்கும்.

கூகுளின் புதிய அம்சம் - எப்படி வேலை செய்யும் அதனை பயன்படுத்த டிப்ஸ்

அந்நிறுவனத்தின் புதிய அறிவிப்பின் படி கூகுள் அக்கவுண்ட்டில் பயனர் விவரங்கள் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பதை பயனர்களே நிர்ணயம் செய்ய முடியும். கூகுளின் புதிய அம்சம் மூலம் பயனர்கள் கூகுள் எவ்வளவு நேரம் பயனர்களின் விவரங்களை வைத்திருந்த அதன்பின் தானாக அழிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும்.


தற்சமயம் இந்த அம்சத்தில் மூன்று மாதங்களில் துவங்கி 18 மாதங்கள் வரை மட்டுமே பயனர்கள் தேர்வு செய்ய முடியும். இதுவரை ஆட்டோ-டெலீட் அம்சம் இணையம் மற்றும் செயலியில் மட்டுமே வழங்கப்படுகிறது. இதே அம்சம் கூகுளின் மற்ற சேவைகளில் விரைவில் வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த சேவையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

கூகுளின் புதிய அம்சம் - எப்படி வேலை செய்யும் அதனை பயன்படுத்த டிப்ஸ்

முதலில் செய்ய வேண்டியவை:

கூகுள் தானாகவே பயனர்களின் இணையம் மற்றும் ஆக்டிவிட்டி டேட்டாக்களை சேமித்து வைத்துக் கொள்ளும். பயனர்கள் இவற்றை தானாக அழிக்கும் வரை அவை அப்படியே இருக்கும்.

இவ்வாறு செய்ய அப்டேட் செய்யப்பட்ட கூகுள் செயலி மற்றும் சீராண இணைய இணைப்பு அவசியமாகும்.

கூகுளின் புதிய அம்சம் - எப்படி வேலை செய்யும் அதனை பயன்படுத்த டிப்ஸ்

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

1 - பிரவுசரில் account.google.com வலைதளம் சென்று ஸ்மார்ட்போனில் கூகுள் செயலியை திறக்க வேண்டும்

2 - இனி Web & Activity ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

3 - இனி தானாக அழிக்க வேண்டிய ஆப்ஷனை தேர்வு செய்து அதனை க்ளிக் செய்ய வேண்டும்

4 - அது புதிய மெனு ஒன்றை திறந்து அதில் Keep until I delete manually, Keep for 18 months then delete automatically and Keep for 3 months and then delete automatically ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்


5 - இனி தேர்வு செய்த ஆப்ஷனை உறுதி செய்ய வேண்டும்

இதுதவிர கூகுள் நிறுவனம் பயனர் விவரம் சேகரிப்பதை நிறுத்திவிடும். இதன் பின் பயனர்கள் தங்களது டேட்டாவை கூகுளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என நினைத்தால் அம்சத்தை ஆஃப் செய்ய வேண்டும். பின் இந்த அம்சம் ஆன் செய்யப்பட்டால் தகவல்கள் எதுவும் சேமிக்கப்படாது, இதனால் அழிக்கவும் எதுவும் இருக்காது.

More from GizBot

Best Mobiles in India

English summary
What is Google’s new auto-delete feature and how to use it : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X