Home
How to

கூகுள் உங்களுக்கென உருவாக்கியிருக்கும் டிஜிட்டல் அசிஸ்டன்ட் பற்றி தெரியுமா?

கூகுள் டூப்லெக்ஸ் என்பது கூகுள் அசிஸ்டண்ட் சேவையின் புத்தம் புதிய அவதாரம் எனலாம். டூப்லெக்ஸ் உங்களுக்காக தனிச்சையான அழைப்புகளை மேற்கொண்டு, மனிதர்களிடம் உரையாடல்களை மேற்கொள்ளும்.

By Meganathan S

கூகுள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு, சில மணி நேரங்களில் உலக டெக் ஆர்வலர்களை அதிர்ச்சி கலந்த வியப்பில் ஆழ்த்திய புதிய தொழில்நுட்ப சேவை தான் கூகுள் டூப்லெக்ஸ்.

கூகுள் டூப்லெக்ஸ் உங்களுக்கு என்ன செய்யும் தெரியுமா?

கூகுள் டூப்லெக்ஸ் அறிமுகம் சிலருக்கு விசித்திரமாக தோன்றினாலும், பலருக்கு இது தனியுரிமை சார்ந்த சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. இந்த தொழில்நுட்பம் பற்றி பலரும் அறிந்து கொள்ளவும், இதனை அனுபவிக்கவும் காத்து கொண்டிருக்கும் நிலையில், இந்த தொழில்நுட்பம் பற்றிய சுவாரஸ்ய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கூகுள் டூப்லெக்ஸ் உங்களுக்கு என்ன செய்யும் தெரியுமா?

டூப்லெக்ஸ் என்றால் என்ன?
கூகுள் டூப்லெக்ஸ் என்பது கூகுள் அசிஸ்டண்ட் சேவையின் புத்தம் புதிய அவதாரம் எனலாம். டூப்லெக்ஸ் உங்களுக்காக தனிச்சையான அழைப்புகளை மேற்கொண்டு, மனிதர்களிடம் உரையாடல்களை மேற்கொள்ளும். அதவும் வழக்கமான ரோபோடிக் குரல் போன்று இல்லாமல் மனித குரல் ஒலியில் டூப்லெக்ஸ் அழைப்புகளில் பேசி அசத்தும்.

டூப்லெக்ஸ் தொழில்நுட்பமானது ஒவ்வொருத்தரும் பேசும் விதங்களை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற பதில்களை வழங்கும் என்றும் கடின சொற்கள், வேகமான சொற்றொடர் உள்ளிட்டவற்றுக்கும் சிறப்பாக பதில் அளிக்கும் திறன் கொண்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இது என்ன செய்யும்?
பீட்டா பதிப்பில் வெளியான நிலையில் கூகுள் டூப்லெக்ஸ் தொழில்நுட்பம் முடி திருத்தம் செய்ய முன்பதிவு, உணவகங்களில் முன்பதிவு மற்றும் வியாபார நிறுவனங்களின் விடுமுறை விவரங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கிறது.

நீங்கள் சொல்லும் பணிகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி இருப்பின், அசிஸ்டன்ட் தானாக இதனை முடிக்கும். இந்த வசதி இல்லையெனில் டூப்லெக்ஸ் உங்கள் சார்பாக அழைப்பை மேற்கொள்ளும்.

கூகுள் டூப்லெக்ஸ் உங்களுக்கு என்ன செய்யும் தெரியுமா?

எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
இதுகுறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில். இதை பயன்படுத்த கூகுள் டூப்லெக்ஸ் இடம் குறிப்பிட்ட உணவகத்தை தொடர்பு கொண்டு குறிப்பிட்ட தேதியில் இத்தனை நபர்களுக்கு உணவு முன்பதிவு செய்ய சொல்ல வேண்டியிருக்கும்.

இவ்வாறு தெரிவித்ததும், கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் டூப்லெக்ஸ் அழைப்பை மேற்கொண்டு மறுபுறம் பேசுவோரிடம் உணவகத்தில் முன்பதிவை செய்து முடித்து, குறிப்பிட்ட விவரங்களை காலென்டரில் சேர்த்து விடும்.

விசித்திரமாக உள்ளதா?
தற்சமயம் இந்த தொழில்நுட்ப இயங்கும் விதம் விசித்திரமாகவே உள்ளது. இவ்வாறான சூழல்களில் மறுபுறம் அழைப்பை மேற்கொள்வோர் மனிதர்களிடம் பேசுவதாய் நினைத்தே பதில் அளிப்பர். எனினும், கூகுள் சார்பில் இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கூகுள் அசிஸ்டன்ட் மேற்கொள்ளும் அழைப்புகளில் மறுபுறம் அழைப்பை எடுப்பவர்களிடம் முறையான விவரங்கள் அளிக்கப்படும் என கூகுள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் டூப்லெக்ஸ் உங்களுக்கு என்ன செய்யும் தெரியுமா?

எப்போது பயன்படுத்த முடியும்?

கூகுள் 2018 டெவலப்பர்கள் மாநாட்டின் கீநோட் உரையில் டூப்லெக்ஸ் தொழில்நுட்பம் வரும் வாரங்களில் பீட்டா வடிவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், இதன் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

English summary
What is Google Duplex:Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X