போனில் உள்ள ப்ளூடூத்தை அடிக்கடி ஆன் செய்வதற்கு பின்னால் இப்படி ஒரு பிரச்சனை இருக்கோ? அலெர்ட் ஆகிக்கோங்க!

|

உங்கள் மொபைல் போனில் உள்ள ப்ளூடூத்தை (Bluetooth) அடிக்கடி ஆன் செய்வதற்கு பின்னால் உள்ள ஒரு புதிய பிரச்சனையை பற்றிய கட்டுரையே இது!

அதென்ன பிரச்சனை? அடிக்கடி ப்ளூடூத்தை ஆன் செய்வதற்கும் அதற்கும் என்ன தொடர்பு? இதோ விவரங்கள்!

மறைமுகமாக கட்டாயப்படுத்தப்படும் மக்கள்!

மறைமுகமாக கட்டாயப்படுத்தப்படும் மக்கள்!

ப்ளூடூத் கனெக்டிவிட்டி (Bluetooth Connectivity), வயர்லெஸ் இயர்பட்ஸ் (Wireless Earbuds) போன்ற புதிய கண்டுபிடிப்புகளால் 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் வயர்டு ஹெட்போன்ஸ் / இயர்போன்ஸ் போன்றவைகளின் தேவைகள் குறைந்த வண்ணம் உள்ளது.

இன்னும் சொல்லப்போனால், தற்போது வெளியாகும் ​பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இருப்பதில்லை. அதாவது மொபைல் நிறுவனங்கள் ஆனது, வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் ஹெட்போன்ஸை தழுவும்படி நம்மை எல்லாம் "மறைமுகமாக" கட்டாயப்படுத்துகின்றன என்றே கூறலாம்!

5G Towers: உண்மையை உளறிட்டாங்க! ஏர்போர்ட் அருகில் 5ஜி டவர்களை வைக்க வேண்டாம்! மீறினால்?5G Towers: உண்மையை உளறிட்டாங்க! ஏர்போர்ட் அருகில் 5ஜி டவர்களை வைக்க வேண்டாம்! மீறினால்?

சைக்கிள் கேப்பில் நுழையும் ப்ளூபக்கிங்!

சைக்கிள் கேப்பில் நுழையும் ப்ளூபக்கிங்!

இயர்பட்ஸ், இயர்போன்ஸ், ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் பேண்ட், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஏசி, ஸ்மார்ட் வாஷிங் மெஷின் என கிட்டத்தட்ட எல்லாமே ப்ளூடூத் வழியாகத்தான் கனெக்ட் செய்யப்பட வேண்டும் என்கிற சூழ்நிலைகள் ஆனது - ஏதாவது ஒரு வழியில் - ப்ளூடூத்தை பயன்படுத்தியே தீர வேண்டும் என்கிற கட்டாயத்தையும் உருவாக்கி விடுகிறது!

அந்த மாதிரியான சூழ்நிலைகளை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தின் கீழ்.. உள்ளே நுழைந்துள்ள ஒரு புதிய பிரச்சனை தான் - ப்ளூபக்கிங்!

Bluebugging என்றால் என்ன?

Bluebugging என்றால் என்ன?

ப்ளூபக்கிங் என்பது ப்ளூஜாக்கிங் (Bluejacking) அல்லது ப்ளூஸ்நார்ஃபிங் (Bluesnarfing) என்றும் அழைக்கப்படும் ஒரு ஹைஜாக்கிங் நுட்பம் (Highjacking technique) ஆகும்.

உங்கள் மொபைல் போனில் உள்ள ப்ளூடூத் ஆனது ஆன் செய்யப்பட்டு இருக்கும் பட்சத்தில், உங்களுக்கும் ஒரு ஹேக்கருக்கும் இடையே உள்ள தூரம் 10 மீட்டருக்குள் இருக்கும் பட்சத்தில், அந்த ஹேக்கரால் ஃபோர்ஸ் பேரிங் டெக்னாலஜியை (Force pairing technology) பயன்படுத்த முடியும்!

அதாவது ப்ளூடூத் வழியாக உங்கள் ஸ்மார்ட்போனில் வலுக்கட்டாயமாக நுழைய முடியும். அதுதான் ப்ளூபக்கிங் எனப்படுகிறது!

அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!

உள்ளே நுழைந்த ஹேக்கர்.. என்னென்ன செய்யலாம்?

உள்ளே நுழைந்த ஹேக்கர்.. என்னென்ன செய்யலாம்?

ஃபோர்ஸ் பேரிங் டெக்னாலஜி வழியாக உங்கள் ஸ்மார்ட்போனிற்குள் நுழையும் ஒரு ஹேக்கரால், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள எதை வேண்டுமானாலும் அணுக முடியும். அதாவது தனிப்பட்ட வீடியோக்கள் / புகைப்படங்கள் முதல் அதிகாரப்பூர்வமான கார்ப்பரேட் ரகசியங்கள் வரை எல்லாவற்றையும் அணுக முடியும்.

அதுமட்டுமின்றி அவர்கள் உங்களை பின்தொடர விரும்பினால் அல்லது உங்கள் நடவடிக்கைகளை கண்காணிக்க விரும்பினால், உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரு ட்ராக்கிங் ஃபார்ம்வேரை கூட இன்ஸ்டால் செய்ய முடியும்; உங்களை 24 மணிநேரமும் உளவு பார்க்க முடியும்!

ப்ளூபக்கிங்கிலிருந்து தப்பிக்க என்னென்ன செய்ய வேண்டும்.. என்னென்ன செய்ய கூடாது?

ப்ளூபக்கிங்கிலிருந்து தப்பிக்க என்னென்ன செய்ய வேண்டும்.. என்னென்ன செய்ய கூடாது?

01. உங்கள் ஸ்மார்ட்போனிற்கு வரும் லேட்டஸ்ட் சாஃப்ட்வேர் அப்டேட் மற்றும் லேட்டஸ்ட் செக்யூரிட்டி பேட்ச்களை ஒருபோதும் புறக்கணிக்க வேண்டாம்; உடனே பயன்படுத்திக்கொள்ளவும்!

02. முடிந்தவரை பப்ளிக் வைஃபைகளை தவிர்க்கவும்

03. ப்ளூடூத் வழியாக, அறியப்படாத டிவைஸில் இருந்து மெசேஜ்களையோ அல்லது ஃபைல்களையோ பெறுவதற்கான கோரிக்கையை பெற்றால், அதை உடனே நிராகரித்துவிட்டு செல்லவும்.

04. ஒவ்வொரு முறையும், பப்ளிக் வயர்லெஸ் இண்டர்நெட் கனெக்ஷனை பயன்படுத்திய பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனை ரீபூட் செய்வதும் கூட நல்ல பழக்கம் தான்.

05. ஹாட்ஸ்பாட் ஷேரிங் அல்லது ப்ளூடூத் கனெக்ஷனில் உங்களுடைய தனிப்பட்ட பெயர்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

இனிமேல் WhatsApp-ல ஒருத்தர பிளாக் பண்ணுறதுக்கு பதிலா.. இப்படி பண்ணுங்க.. வாழ்க்கையே வெறுத்துடுவாங்க!இனிமேல் WhatsApp-ல ஒருத்தர பிளாக் பண்ணுறதுக்கு பதிலா.. இப்படி பண்ணுங்க.. வாழ்க்கையே வெறுத்துடுவாங்க!

எப்போதும் ஒரு கண் வைத்துக்கொள்ளவும்!

எப்போதும் ஒரு கண் வைத்துக்கொள்ளவும்!

06. உங்களிடம் ஆன்டி-வைரஸ் ஆப் இருப்பதையும், நீங்கள் அடிக்கடி சந்தேகத்திற்கிடமான ஆப்களை களைவதற்க்கான ஸ்கேன்னிங்காய் செய்வதையும் உறுதிபடுத்திக்கொள்ளவும்.

07. பப்ளிக் இண்டர்நெட் சர்வீஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும் போது, ​வர்த்தக வலைத்தளங்களில் ஷாப்பிங் செய்யவோ அல்லது ஆன்லைனில் நிதி பரிவர்த்தனைகளை செய்யவோ கூடாது

08. உங்கள் ஸ்மார்ட்போனுடன் என்னென்ன டிவைஸ்கள், எத்தனை டிவைஸ்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை அடிக்கடி சரிபார்க்கவும்; உடன் உங்கள் ப்ளூடூத் கனெக்ஷன்களையும் அடிக்கடி கண்காணிக்கவும்

09. பாஸ்வேர்ட் அல்லது முக்கியமான டேட்டாக்களை ஷேர் செய்ய ப்ளூடூத்தை பயன்படுத்த வேண்டாம்!

Best Mobiles in India

English summary
What is Bluebugging How hackers get access to your phone via Bluetooth How to avoid this risk

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X