நீங்கள் இறந்த பிறகு உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் என்னவாகும்.? சொன்னால் நம்புவீர்களா.?

அதாவது நீங்கள் இறந்த பின்னர் உங்களது பேஸ்புக் அக்கவுண்ட் என்னவாகும் என்பதை பற்றி என்றாவது யோசித்தது உண்டா.?

|

என்ஜினீயரிங் படிச்சு பார்த்தா தான் டா அதோட கஷ்டம் புரியும் என்பது போல, பேஸ்புக்ல 100 லைக்ஸ் வாங்கி பார்த்தா தான், அதுக்கு பின்னாடி எவ்ளோ "தில்லாலங்கடி" பார்க்க வேண்டும் என்பது புரியும். இப்படி கஷ்டப்பட்டு நாம் வாங்கிய லைக்ஸ்கள் எல்லாம், நாம் இறந்த பின்னர் என்னவாகும் என்று தெரியுமா.? அதாவது நீங்கள் இறந்த பின்னர் உங்களது பேஸ்புக் அக்கவுண்ட் என்னவாகும் என்பதை பற்றி என்றாவது யோசித்தது உண்டா.?

உயிரோட இருக்கும் போதே ஒருத்தனும் லைக்ஸ் போட மாட்றான், இதுல நான் போய் சேர்ந்த பின்ன, என் பேஸ்புக் அக்கவுண்ட் இருந்தா என்ன.? இல்லனா எனக்கு என்ன.? என்று கடுப்பாகும் க்ரூப்ஸ் அப்படியே எஸ்கேப் ஆகிவிடவும். அட ஆமாம்ல.. நான் இல்லாமல் போன பின்னர், என் பேஸ்புக் அக்கவுண்ட் என்னவாகும்.? என்கிற ஆர்வம் கிளம்பினால், அந்த ரகசியத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால்.. தொடரவும்.!

நீங்கள் இறந்து விட்டீர்கள் என்பதை பேஸ்புக் எப்படி அறியும்.?

நீங்கள் இறந்து விட்டீர்கள் என்பதை பேஸ்புக் எப்படி அறியும்.?

உங்கள் குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ தான், இந்த நபர் இறந்து விட்டார் என்பதை, அதாவது இது இறந்து போன நபரின் பேஸ்புக் அக்கவுண்ட் என்பதை பேஸ்புக்கிற்கு அறிவிக்க வேண்டும். அவர்கள் தான், இறந்து போன நபரின் பேஸ்புக் அக்கவுண்ட்டை, ஒரு நினைவாக நிர்வகிக்கலாமா.? அல்லது வேண்டாமா என்பதை தீர்மானிக்க முடியும்.

அதெப்படி சாத்தியம்.?

அதெப்படி சாத்தியம்.?

உங்கள் மரணத்திற்குப் பின்னர் உங்கள் அக்கவுண்ட்டை நிர்வகிக்க, உங்கள் நண்பருக்கோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ, உங்களின் பேஸ்புக் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதை பேஸ்புக் நிறுவனத்தின் லேகசி காண்டாக்ட் (Legacy Contact) வழியாக நிகழ்த்தலாம். இந்த லேகசி காண்டாக்ட் திறனையும் நீங்கள் தான் நியமிக்க வேண்டும்.

லேகசி காண்டாக்ட்டை நியமிப்பது எப்படி.? (வழிமுறைகள்)

லேகசி காண்டாக்ட்டை நியமிப்பது எப்படி.? (வழிமுறைகள்)

1. உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டிற்குள் லாக்-இன் செய்யவும்.
2. விண்டோவின் மேல் வலதுபுறத்தில் உள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்து, செட்டிங்ஸ்-க்குள் நுழையவும்
3. இடது பக்கத்தில் உள்ள மெனு பட்டியலில், செக்யூரிட்டி விருப்பத்தை கிளிக் செய்யவும்.

யார் மேனேஜ் செய்ய வேண்டும்.?

யார் மேனேஜ் செய்ய வேண்டும்.?

4. செக்யூரிட்டி செட்டிங்ஸ் பட்டியலில், லேகசி காண்டாக்ட் என்கிற விருப்பத்தை காணலாம். அதை கிளிக் செய்யவும்.
5. பின்னர், நீங்கள் இறந்து பின்னர் யார், அதாவது எந்த பேஸ்புக் நண்பர், உங்கள் அக்கவுண்ட்டை மேனேஜ் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவரின் பெயரை டைப் செய்யவும், அவ்வளவுதான்.!

(1)இறந்தவரின் அக்கவுண்ட்டை நினைவு சின்னமாக வைத்திருக்க முடியும் : மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும். (2) நினைவாக வைத்திருக்க விரும்பவில்லை என்றால், அக்கவுண்ட்டை ரிமூவ் செய்ய முடியும் : அது சார்ந்த மேலும் பல விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டுமெனில்.?

அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டுமெனில்.?

லெகசி காண்டாக்ட் மீதெல்லாம் ஆர்வம் இல்லை.? அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.? : மேற்குறிப்பிட்டுள்ள அதே வழிமுறைகளைப் பின்பற்றவும், ஆனால் லேகசி காண்டாக்ர் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, லேகசி காண்டாக்ட் பிரிவின் கீழே உள்ள ரெக்வஸ்ட் அக்கவுண்ட் டெலிஷன் (Request account deletion) லின்கை கிளிக் செய்யவும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
மரணத்தின் பின்னும் வாழு.!

மரணத்தின் பின்னும் வாழு.!

இப்படியாக, உங்களின் இறப்பிற்கு பின்பும் கூட, உங்களின் பிரியமான நினைவுகளை சுமக்கும் பேஸ்புக் அக்கவுண்ட்டை நிர்வகிக்க, ஒப்பீட்டளவில் எளிய வழிமுறைகள் உள்ளது என்பதை அறிந்து கொண்டீர்களா.? அப்புறம் என்ன.? எடு ஒரு செல்பீ, அப்லோட் பண்ணு, லைக்ஸ் வாங்கு.! மரணத்தின் பின்னும் வாழு.!

Best Mobiles in India

English summary
What Happens to Your Facebook Account After You Die? Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X