1 வாரத்திற்கு Google Pay, PhonePe UPI ஆப்களை பயன்படுத்தவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா?
அவ்ளோதான்.. க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்யுங்க. யுபிஐ பின் நம்பரை (UPI PIN Number) போடுங்க. அவ்ளோதான் முடிந்தது. தெருவோர கடையில் டீ குடிப்பதில் இருந்து வீகெண்ட்டில் ஒரு நல்ல ஹோட்டலில் டின்னர் சாப்பிடுவது வரை, டிஜிட்டல் பேமண்ட்கள் (Digital Payments) ஆனது இந்தியாவின் நவீன நகரங்களை முழுமையாக ஆக்கிரமித்து உள்ளன.
ஆனால் எப்போதாவது நீங்கள், கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற யுபிஐ சேவைகளை பயன்படுத்துவதை இடைநிறுத்தி பார்த்தால் என்ன என்று யோசித்து பார்த்து இருக்கீர்களா? அதாவது பழைய நாட்களை போல, முழுக்க முழுக்க "காகித பணத்தை" (Paper Money) முழுவதுமாக கையாண்டால் என்ன? குறைந்த பட்சம் 1 வாரத்திற்கு? - யோசித்து பார்த்தது உண்டா?

உண்மை என்னவென்றால் - 99.99% பேர் கனவில் கூட இதை நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள். இன்னொரு உண்மை என்னவென்றால் - சுமார் 1 வாரத்திற்கு இந்த டிஜிட்டல் போதையில் இருந்து விலகி இருப்பது, நமது தற்போதைய நிதி சுற்றுச்சூழல் அமைப்பை (Financial ecosystem) பற்றி நிறைய வெளிப்படுத்துகிறது. குறிப்பாக நம்மில் பலரும் இந்த டிஜிட்டல் வேலட்களின் வசதியை எவ்வளவு ஆழமாக சார்ந்து இருக்கிறோம் என்பதையும் வெளிப்படுத்துகிறது.
சில்லறையா கொடுங்க சார்.. சேஞ்ச இல்ல மேடம்: யுபிஐ சேவையை பயன்படுத்துவதை நிறுத்திய முதல் நாளே.. முதல் செலவிலேயே.. நீங்கள் சிக்கலை சந்திக்க தொடங்குவீர்கள். அடுத்த ஒரு வாரத்திற்கு 50, 100, 200 ரூபாய் நோட்டுகளை பணமாக கையில் வைத்துக்கொண்டால் போதும் என்று நீங்கள் நினைப்பீர்கள்.
அப்படி செய்வதன் மூலம் நீங்கள் சந்திக்கும் முதல் தடை, பெரிய தடை - போக்குவரத்தில் இருக்கும். பெட்ரோல், டீசல் போட்டுகொண்டு பைக், ஸ்கூட்டர், கார் ஓட்டினாலும், அவைகளுக்கு ஏர் ஃபில்-அப் செய்ய வேண்டும் என்றாலும், ஆட்டோவில் ஏறினாலும், டாக்ஸியில் ஏறினாலும் - சரியான சில்லறை அல்லது நிலையான கட்டணத்திற்கான ஒரு நோட்டை கொடுப்பது இப்போது அவநம்பிக்கையான ஒரு விஷயமாகி விட்டது.
"இப்போலாம் யார் பணத்தை எடுத்துட்டு வராங்க.. எல்லாமே ஜிபே, போன்பே தான்" என்கிற பொதுவான பதிலை, எல்லோரும் ஒரே "டோனில்" சொல்லுவார்கள். யுபிஐ வழியாக - ஒரு எளிய, அன்றாட பரிவர்த்தனையாக இருந்த ஒன்று திடீரென்று ஒரு பேச்சுவார்த்தையாக மாறுகிறது. அவரிடமும் பணம் இருக்காது. மீதமுள்ள சில்லறையை ஒரு குடும்ப உறுப்பினரின் யுபிஐ கணக்கிற்கு மாற்றுவது மட்டுமே ஒரே ஆப்ஷன் ஆக இருக்கும் இல்லை என்றால் அந்த சில்லறையை நீங்கள் மறக்க வேண்டி இருக்கும்.
அடுத்தது பில் கவுண்டர்களில்: முன்பெல்லாம் இந்த கடையில் ரூ.500 சில்லறை இல்லை என்றால் பக்கத்து கடைக்கு போவோம். இப்போதெல்லாம் - டக் டக்கென்று நடக்கும் டிஜிட்டல் பரிமாற்றங்களின் விளைவாக பெரும்பாலான மருந்தகங்கள் மற்றும் உள்ளூர் சுற்றுப்புற கடைகளில் சில்லறைகளே வைக்கப்படுவதில்லை. ஒருகட்டத்தில், வாங்கிய பொருளை அங்கேயே கொடுத்துவிட்டு நகர வேண்டிய சூழ்நிலைகள் கூட ஏற்படுகிறது.
கடைசியாக கிழிந்த, பழைய நோட்டுகள்: ஒருகாலத்தில் உணவக கட்டணத்தை பிரிப்பது என்பது மேசையின் மேலே கைநீட்டி எல்லோரிடமும் இருந்து கொஞ்சம் கொஞ்சம் ஆக பணத்தை சேகரிக்க வேண்டும்? நினைவில் இருக்கிறதா? உணவு கட்டணம் மட்டுமல்ல.. பொதுவான முறையில் பிரிக்கப்படும் அனைத்து வகையான கட்டணங்களும் இப்படிதான் வசூலிக்கப்படும்
அந்த நேரத்தில் 10 நோட்டுகளில் 1 நோட்டு கொஞ்சம் பழையதாக இருந்தாலோ அல்லது லேசாக கிழிந்து இருந்தாலோ.. அது பெரிய அளவிலான கவனத்தை ஈர்க்காது. அனால் இப்போது எல்லாமே யுபிஐ ஆகிவிட்டதால், உங்களிடம் இருக்கும் ஒரேயொரு பழைய நோட்ட்டை கைமாற்றுவதற்குள் நீங்கள் வாழ்க்கையையே வெறுத்து விடுவீரர்கள். அதை சரியாக கைமாற்றியதுமே 'போதும்டா சாமி" என்று மறுபடியும் யுபிஐ-க்குள் வந்து விடுவீர்கள்!
சரி.. பேப்பர் மணி எங்கே தான் தடையின்றிபுழங்குகிறது? உள்ளூர் காய்கறி விற்பனையாளர்கள் உட்பட வெகு சிலர் தான், குறிப்பாக பழைய தலைமுறையினர் மட்டுமே மகிழ்ச்சியுடன் பேப்பர் மணியை ஏற்றுக்கொள்கிறார்கள். இது ஒரு கூர்மையான தலைமுறை பிளவை எடுத்துக்காட்டுகிறது. பழைய தலைமுறையினர் மட்டுமே பணத்தை "தொட்டுணரக்கூடிய அனுபவத்தை" இன்னுமும் பாராட்டுகின்றன, அதே நேரத்தில் இளைய மற்றும் புதிய தலைமுறையினர் ஆப் அடிப்படையிலான விரைவான வர்த்தகத்தை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்.
ஆக ஒரு பெரிய நகர்ப்புற மையத்தில் உள்ளவர்கள் டிஜிட்டல் கட்டத்திலிருந்து முற்றிலும் விலகி வாழ முயற்சிப்பது - நடைமுறையில் சாத்தியமற்றதாக மாறிவிட்டது. இருப்பினும் அவ்வப்போது யுபிஐ சேவைகளை தவிர்த்துவிட்டு பணத்தை பயன்படுத்தும் இந்த பயிற்சி ஒரே ஒரு விஷயத்தை ஆழமாக நிரூபிக்கிறது: ரொக்கமும், டிஜிட்டல் பேமண்ட்களும் ஒன்றுக்கொன்று போட்டியிடவில்லை. அவைகள் வெவ்வேறு வேலைகளை செய்கின்றன. டிஜிட்டல் பேமண்ட்கள் அன்றாட பிரச்சினைகளுக்கு வழிசெலுத்த - நமக்கு தேவையான, ஒப்பிடமுடியாத வேகத்தை வழங்குகின்றன. அதே நேரத்தில் ரொக்கம் - மிகவும் பயனுள்ள, மிகவும் தேவையான ஒரு பைனான்ஷியல் ஸ்பீட்பிரேக்கர் (Financial speedbreaker) ஆக செயல்படுகிறது!


Click it and Unblock the Notifications