டேட்டா, பேட்டரியை சேமிக்க வாட்ஸ் அப் நோட்டிபிகேஷனை தவிர்ப்பது எப்படி?

By Lekhaka
|

ஃபேஸ்புக், டுவிட்டரை அடுத்து கிட்டத்தட்ட அனைவரது வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட ஆப்ஸ் 'வாட்ஸ் அப்' என அனைவரும் அறிந்ததே.

டேட்டா, பேட்டரியை சேமிக்க வாட்ஸ் அப் நோட்டிபிகேஷனை தவிர்ப்பது எப்படி?

வாட்ஸ் அப் நமக்கு பல விதங்களில் அதாவது தொழில் முறையிலும், நண்பர்கள், குடும்பத்தவர்கள் முறையிலும் பயன்படுகிறது என்றாலும், வாட்ஸ் அப்-இல் இருந்து வரும் பல்வேறு நோட்டிபிகேஷன் மற்றும் விளம்பரங்கள் நமக்கு தொல்லையாக இருப்பது மட்டுமின்றி நமது மொபைல் டேட்டாவையும் அதிக அளவு கரைத்து விடுகிறது.

தீபாவளி தள்ளுபடி : அட்டகாசம் செய்யும் அதிரடி ஸ்மார்ட்போன்கள்!

ஃபேஸ்புக்கின் ஒரு அங்கமாக மாறிவிட்ட இந்த வாட்ஸ் அப், இதற்கான பல வழிகளை அறிமுகம் செய்திருக்கின்றது. ஆனாலும் இதுகுறித்த விழிப்புணர்வு பலருக்கு இல்லை. எனவே இதுகுறித்து தற்போது பார்ப்போம்.

டேட்டா, பேட்டரியை சேமிக்க வாட்ஸ் அப் நோட்டிபிகேஷனை தவிர்ப்பது எப்படி?

நோட்டிபிகேஷன் ஆப்சனை க்ளிக் செய்யுங்கள்

தேவையில்லாத விளம்பரங்கள் மற்றும் நோட்டிபிகேஷன் ஆகியவற்றை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்றால் முதல் ஸ்டெப் ஆக நீங்கள் செய்ய வேண்டியது செட்டிங்ஸ் ஆப்சனுக்கு சென்று நோட்டிபிகேஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

டேட்டா, பேட்டரியை சேமிக்க வாட்ஸ் அப் நோட்டிபிகேஷனை தவிர்ப்பது எப்படி?

வாட்ஸ் அப்-இல் உள்ள பிளாக் ஆப்சனை டர்ன் - ஆன் செய்ய வேண்டும்

நோட்டிபிகேஷன் ஆப்சனை செலக்ட் செயதவுடன் அதில் சில கூடுதல் ஆப்சன்கள் தோன்றும். அவற்றில் பிளாக் ஆப்சனை க்ளிக் செய்தால் உங்களுக்கு வரும் தேவையில்லாத நோட்டிபிகேஷன்கள் இனிமேல் வராது.

யூட்யூப் வீடியோக்களை எம்பி3 மாற்றுவது எப்படி?

மேலும் மேற்கண்ட இரண்டு ஸ்டெப்களும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன்களுக்கு பொருந்தும்.

டேட்டா, பேட்டரியை சேமிக்க வாட்ஸ் அப் நோட்டிபிகேஷனை தவிர்ப்பது எப்படி?

விண்டோஸ் மொபைலில் வாட்ஸ் அப் நோட்டிபிகேஷனை எப்படி தடுப்பது?

ண்டோஸ் மொபைலில் நோட்டிபிகேஷனை தடுப்பது மிக எளிது. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். WhatsApp > Settings > Notifications > toggle OFF. இந்த ஒரே ஒரு ஸ்டெப்பை நீங்கள் முடித்துவிட்டால் போதும். உங்களை நோட்டிபிகேஷன் எந்த தொந்தரவும் செய்யாது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டேட்டா, பேட்டரியை சேமிக்க வாட்ஸ் அப் நோட்டிபிகேஷனை தவிர்ப்பது எப்படி?

நோட்டிபிகேஷனை ஆஃப் செய்வதால் என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போமா?

உங்கள் மொபைலில் இண்டர்நெட்டை ஆன் செய்தவுடன் உங்கள் வாட்ஸ் அப் ஆப்ஸ்-இல் இருந்து ஏகப்பட்ட நோட்டிபிகேஷன்கள், மெசேஜ்கள் குவிய தொடங்கிவிடும். நாம் ஏராளமான வாட்ஸ் அப் குரூப்பில் சேர்ந்திருப்போம். அதேபோல் நமக்கு வாட்ஸ் அப்பில் ஏகப்பட்ட நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் அனுப்பிய மெசேஜ்கள் ஒரே நேரத்தில் குவியத்தொடங்கினால் வேறு வேலைகளை பார்க்க முடியாத நிலை ஏற்படும்.

அதுமட்டுமின்றி வாட்ஸ் அப் உபயோகிக்கும்போது அவ்வப்போது பாப்-அப் விளம்பரங்கள் தோன்றி உங்கள் டேட்டாக்களை கரைக்கும் அபாயமும் உள்ளது.

மேலே கண்ட முறைகளின்படி வாட்ஸ் அப் நோட்டிபிகேஷன்களை தவிர்த்துவிட்டால் உங்களுடைய டேட்டா, பேட்டரி ஆகியவை பாதுகாக்கப்படுவதோடு உங்களை இம்சை செய்யும் நோட்டிபிகேஷன்கள்களும் தோன்றாது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Follow these simple steps to block WhatsApp notifications and save mobile data and battery

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X