100% சார்ஜ் ஆன பின்னர், சார்ஜ் pin-ஐ கழட்ட கூடாது; ஏன் தெரியுமா.?

நம்மில் பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட்போன்களை அல்லது டாப்ளெட்களை மிகவும் தவறான முறையில் தான் சார்ஜ் செய்து கொண்டு வருகிறோம்.

By Staff
|

கேட்பதற்கு இது அதிர்ச்சியாக அல்லது சிரிப்பாக இருக்கலாம், ஆனால் இதுதான் உண்மை - நம்மில் பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட்போன்களை அல்லது டாப்ளெட்களை மிகவும் தவறான முறையில் தான் சார்ஜ் செய்து கொண்டு வருகிறோம்.

ஈா்ப்பு விசையின் 300 ஆண்டுகள்: ஸ்டீபன் ஹாக்கிங் சொல்ல வந்த ரகசியம் என்ன?ஈா்ப்பு விசையின் 300 ஆண்டுகள்: ஸ்டீபன் ஹாக்கிங் சொல்ல வந்த ரகசியம் என்ன?

"தூங்கிக்கொண்டிருக்கும்போது சார்ஜ் செய்த ​​பயனருக்கு ஸ்மார்ட்போன் வெடிப்பு காயங்கள்" என்கிற செய்திகளை நாம் ஆங்காங்கே காண முடிகிறது. ஆனால் உண்மை என்னவெனில் அதைப்பற்றி நாம் கவலைப்பட தேவையே இல்லை.

இரவு முழுவதும் சார்ஜ் செய்யலாமா.?

இரவு முழுவதும் சார்ஜ் செய்யலாமா.?

இரவு முழுவதும் சார்ஜ் செய்யப்படும் எல்லா ஸ்மார்ட்போன்களுமே வெடித்து விடாது தான், அப்படி வெடிக்குமென்றால் நாம் மாதம் ஒரு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டியதிருக்கும், சரிதானே.? அதற்காக, இனி இரவு முழுவதும் சார்ஜ் செய்யலாம் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். எங்களின் பரிந்துரை அதுவல்ல. மாறாக, எப்படியெல்லாம் சார்ஜ் செய்யக்கூடாது மற்றும் செய்யலாம் என்பதேயாகும்.

அடிக்கடி சார்ஜ் செய்யப்பட வேண்டும்.!

அடிக்கடி சார்ஜ் செய்யப்பட வேண்டும்.!

இலவசமாக இயங்கும் நிறுவனமான பேட்டரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையின்படி, ஓரு ஸ்மார்ட்போன் ஆனது குறுகிய நேரத்திற்குள் சார்ஜ் செய்யப்பட வேண்டும் மற்றும் அடிக்கடி சார்ஜ் செய்யப்பட வேண்டும். அப்போது தான் ஒரு நல்ல ஒட்டுமொத்த பேட்டரி ஆயுளை நாம் பெற முடியும் என்று கூறியுள்ளது.

10% அல்லது 20% வரை மட்டுமே.!

10% அல்லது 20% வரை மட்டுமே.!

அதாவது (பேட்டரி பல்கலைக்கழகத்தின் படி) "நீங்கள் 10% அல்லது 20% வரை மட்டுமே சார்ஜ் செய்திருந்தால் கூட பரவாயில்லை, அது ஒரு விஷயமல்ல. இதுபோன்ற பாரபட்சமான சார்ஜ், ஒரு ஸ்மார்ட்போனை எந்தவிதத்திலும் பாதிக்காது, எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாது".

சிவப்பு கோட்டை தாண்ட வேண்டாம்.!

சிவப்பு கோட்டை தாண்ட வேண்டாம்.!

மேலும், "உங்கள் பேட்டரியின் வாழ்நாளை நீடிக்க விரும்பினால், பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் உள்ள 15 சதவிகிதம் என்கிற சிவப்பு கோட்டை தாண்ட வேண்டாம். ஒரு 65% மற்றும் 75% என்பதற்கு இடையே சார்ஜ் புள்ளியை வைக்க முயற்சி செய்யுங்கள்" என்றும் பேட்டரி பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

ஒருபோதும், ஒரேநேரத்தில் 100% சார்ஜ் செய்ய வேண்டாம்.!

ஒருபோதும், ஒரேநேரத்தில் 100% சார்ஜ் செய்ய வேண்டாம்.!

10 முறை 10-10% சார்ஜ் செய்தால் கூட பரவாயில்லை ஆனால் ஒருபோதும், ஒரேநேரத்தில் 100% சார்ஜ் செய்ய வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். முடிந்த அளவு 95% என்கிற புள்ளியில் நிறுத்திக்கொள்ளவும். ஏனெனில், இன்றைய நவீன லித்தியம்-அயன் பேட்டரிகள் "முழுமையாக சார்ஜ் செய்யப்பட வேண்டியதில்லை, அது தேவையானதும் இல்லை".

சார்ஜரை கழட்ட வேண்டாம்.!

சார்ஜரை கழட்ட வேண்டாம்.!

மேலும் வெளியான வலைத்தள அறிக்கையின்படி, ":அதிக அளவிலான வோல்டேஜ் பேட்டரிக்கு அழுத்தம் கொடுக்கும். ஆக அதிக நேரத்திற்கு சார்ஜ் செய்வதை முழுமையாக நிறுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளது. ஒருவேளை, 100% சார்ஜ் ஆகிவிட்டால் சார்ஜரை அவசர அவசரமாக கழட்ட வேண்டியதில்லை என்றும் பரிந்துரைக்கிறது.

தானாகவே சார்ஜ் ஏறுவது நிறுத்தப்படும்.!

தானாகவே சார்ஜ் ஏறுவது நிறுத்தப்படும்.!

ஏனெனில் நம்மில் பலருக்கு, 100% சார்ஜ் ஆன பின்னரும் கூட சார்ஜரை கழட்டவில்லை என்றால் பேட்டரி பாழாகும் அல்லது வெடிக்கும் என்கிற அச்சம் உள்ளது. அது தேவையில்லாத ஒரு அச்சமாகும். முடிந்த வரை 95% க்குள் கழட்ட பாருங்கள். ஒருவேளை 100% ஐ எட்டிவிட்டால் பரவாயில்லை, 100% சார்ஜ் ஆனதும் தானாகவே சார்ஜ் ஏறுவது நிறுத்தப்படும்.

Best Mobiles in India

English summary
Want your smartphone to have a good battery-life? Stop charging it the wrong way. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X