YouTube செட்டிங்ஸ்-ல் ஒளிந்திருக்கும் ரீசெட் ஆப்ஷன்.. மாதத்திற்கு 1 முறை கிளிக் செய்வதால் இப்படி ஒரு நன்மையா?

|

நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா? கூகுள் (Google) வழியாக நீங்கள் எதை தேடினாலும் அது தொடர்பான விளம்பரங்கள் (Ads) ஆனது தானாக உங்களை வந்து சேரும். யூட்யூப்பிலும் (YouTube) அப்படித்தான்!

ரெக்கமென்டேஷன்ஸ் (Recommendations) என்கிற பெயரின் கீழ், அதாவது பரிந்துரைகள் என்கிற பெயரின் கீழ் உங்களுக்கெனவே சில வீடியோக்கள் பட்டியலிடப்படும். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை.ஏனென்றால், யூட்யூப் ஆனது கூகுளுக்கு வீடியோ ஷேரிங் பிளாட்ஃபார்ம் ஆகும்.

எந்த அடிப்படையில் யூட்யூப் ரெக்கமென்டேஷன்ஸ் வரும்?

எந்த அடிப்படையில் யூட்யூப் ரெக்கமென்டேஷன்ஸ் வரும்?

உங்களுக்கான யூட்யூப் ரெக்கமென்டேஷன்ஸ் ஆனது - யூட்யூப்பில் நீங்கள் எதையெல்லாம் பார்க்கிறீர்கள், எதையெல்லாம் கிளிக் செய்கிறீர்கள் மற்றும் எதையெல்லாம் ஷேர் செய்கிறீர்கள் என்பதை பொறுத்தது.

இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், யூட்யூப்பின் அல்காரிதம் ஆனது உங்களுடைய சேர்ச் ஹிஸ்டரியை அடிப்படையாக கொண்டு நீங்கள் ரசிக்கக்கூடிய வீடியோக்களின் பரிந்துரைகளை உங்களுக்கும் வழங்கும்.

Google-ல உங்க சேர்ச் ஹிஸ்டரி கொஞ்சம் கேவலமா இருக்குமா? இனி அதை மட்டும் டெலிட் பண்ணா போதாது! இதையும் செய்யணும்!Google-ல உங்க சேர்ச் ஹிஸ்டரி கொஞ்சம் கேவலமா இருக்குமா? இனி அதை மட்டும் டெலிட் பண்ணா போதாது! இதையும் செய்யணும்!

கண்காணிக்கும் யூட்யூப்.. தப்பிக்க என்ன வழி?

கண்காணிக்கும் யூட்யூப்.. தப்பிக்க என்ன வழி?

பெரும்பாலான பயனர்கள், யூட்யூப் ரெக்கமென்டேஷன்ஸை ஒரு பெரிய இடையூறாக எடுத்துகொள்வதில்லை, ஆனால் சிலர் அவற்றை விரும்புவதில்லை. அதனால் தான் உங்கள் சேர்ச் ஹிஸ்டரியை கண்காணிக்கும் யூட்யூப் ஆனது அதை டெலிட் செய்வதற்கான விருப்பத்தையும் வழங்குகிறது.

ஒருவேளை, யூட்யூப் ஆனது உங்கள் சேர்ச் ஹிஸ்டரியை கண்காணிப்பதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அல்லது நீங்கள் யூட்யூப் ரெக்கமென்டேஷன்ஸை ரீசெட் செய்ய விரும்புகிறீர்கள் என்றால்.. அதை செய்வது எப்படி என்கிற எளிமையான வழிமுறைகள் இதோ:

யூட்யூப் சேர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்து, ரீசெட் செய்வது எப்படி?

யூட்யூப் சேர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்து, ரீசெட் செய்வது எப்படி?

- உங்கள் மொபைலில் உள்ள YouTube ஆப்பை திறக்கவும்.

- பின்னர் மேல் வலது மூலையில் உள்ள ப்ரொபைல் பிக்சரை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் ப்ரொபைலுக்குள் செல்லவும்.

- இப்போது செட்டிங்ஸ் (Settings) ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

- பின்னர், ஹிஸ்டரி அண்ட் ப்ரைவஸி () செக்ஷனுக்கு செல்லவும்.

- அங்கே கிளியர் சேர்ச் ஹிஸ்டரி (Clear Search History) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- கடைசியாக, கிளியர் சேர்ச் ஹிஸ்டரி (Clear search history) என்கிற பட்டனை கிளிக் செய்யவும். அவ்வளவு தான்!

போனில் உள்ள ப்ளூடூத்தை அடிக்கடி ஆன் செய்வதற்கு பின்னால் இப்படி ஒரு பிரச்சனை இருக்கோ? அலெர்ட் ஆகிக்கோங்க!போனில் உள்ள ப்ளூடூத்தை அடிக்கடி ஆன் செய்வதற்கு பின்னால் இப்படி ஒரு பிரச்சனை இருக்கோ? அலெர்ட் ஆகிக்கோங்க!

சேர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்தால் மட்டுமே போதாது! ஏனென்றால்?

சேர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்தால் மட்டுமே போதாது! ஏனென்றால்?

நீங்கள் பயன்படுத்தும் எல்லா டிவைஸ்களில் இருந்தும், உங்களுடைய யூட்யூப் சேர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்த பிறகும் கூட, சில பழைய கன்டென்ட் ரெக்கமென்டேஷன்ஸ் தோன்றக்கூடும்.

அப்படியான "பரிந்துரைகளையும்" தவிர்க்க வேண்டும் என்றால் - YouTube இல் சேமிக்கப்பட்டுள்ள உங்களுடைய வாட்ச்டு டேட்டாவையும் நீங்கள் டெலிட் செய்ய வேண்டும். அதை செய்வது எப்படி என்கிற படிப்படியான வழிமுறைகள் இதோ:

யூட்யூப் வாட்ச்டு டேட்டாவை டெலிட் செய்வது எப்படி?

யூட்யூப் வாட்ச்டு டேட்டாவை டெலிட் செய்வது எப்படி?

- உங்கள் மொபைல் போனில் உள்ள YouTube ஆப்பை திறக்கவும்.

- இப்போது உங்கள் ப்ரொபைலுக்குள் செல்ல, மேல் வலது மூலையில் உள்ள உங்களுடைய ப்ரொபைல் போட்டோவை கிளிக் செய்யவும்.

- பின்னர், செட்டிங்ஸ்-ஐ கிளிக் செய்யவும்.

- இப்போது யூட்யூப் என்கிற ஆப்ஷனில் யுவர் டேட்டா என்பதை கிளிக் செய்யவும்.

- பின்னர் யூட்யூப் வாட்ச் ஹிஸ்டரி (YouTube Watch History) செக்ஷனுக்கு செல்லவும்.

- ஸ்க்ரோல் டவுன் செய்து மேனேஜ் ஹிஸ்டரி (Manage history) என்கிற விருப்பத்தை கண்டறியவும்.

- பிறகு டெலிட் என்கிற பட்டனை கிளிக் செய்து, டிராப் டவுன் மெனுவில் இருந்து டெலிட் ஆல் டைம் (Delete all time) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

- உங்கள் வாட்ச் ஹிஸ்டரியை ப்ரீவியூ செய்துவிட்டு,அதை நீக்குவதை உறுதி செய்யும் பொருட்டு டெலிட் பட்டனை கிளிக் செய்யவும்.

- கடைசியாக ஓகே என்கிற பட்டனை கிளிக் செய்யவும், அவ்வளவு தான்!

மேற்கண்ட 2 செயல்முறைகளையுமே 1 மாதத்திற்கு 1 முறையாவது செய்வதன் மூலம் யூட்யூப் ரெக்கமென்டேஷன்ஸில் இருந்து நீங்கள் விலகியே இருக்கலாம்!

Best Mobiles in India

English summary
Want To Stop Recommendation Videos In YouTube Then Delete Your Search History and Watch Data

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X