அடச்சே! Gmail-ல இப்படி ஒரு 'சீக்ரெட்' இருக்குனு.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!

|

ஜிமெயில் வழியாக ரகசிய மெசேஜ் / இமெயில் அனுப்புவது எப்படி என்பதை பற்றி பார்க்கும் முன், உங்களிடம் ஒரு கேள்வி - டிஎல்எஸ் என்க்ரிப்ஷன் (TLS encryption) என்றால் என்னவென்று தெரியுமா?

நீங்கள் ஜிமெயில் (Gmail) வழியாக ஒரு இமெயிலை அனுப்பும் போது, அதில் உள்ள தகவல்கள், விவரங்கள், உள்ளடக்கங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய Google பயன்படுத்தும் "குறியாக்கம்" தான் - டிஎல்எஸ் என்க்ரிப்ஷன்!

இந்த என்க்ரிப்ஷனால் என்ன பயன்?

இந்த என்க்ரிப்ஷனால் என்ன பயன்?

இந்த என்க்ரிப்ஷன், அனுப்புநரிடமிருந்து பெறுநருக்கு "பயணிக்கும்போது" அதில் உள்ள உரையாடல்களை ஹேக் செய்ய முடியாதபடி பார்த்துக்கொள்ளும். அதாவது நீங்கள் அனுப்பும் ஒரு இமெயிலில் என்ன உள்ளது என்பதை ஹேக்கர்கள் அணுக முடியாதபடி பார்த்துக்கொள்ளும்.

ஆனாலும் கூட சில நேரங்களில், மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் விவரங்கள் 'லீக்' ஆவதை (ஹேக் செய்யப்படுவதை) தடுக்க மேற்குறிப்பிட்ட TLS குறியாக்கம் போதுமானதாக இருக்காது.

உஷார்! டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் 35 ஆபத்தான ஆப்கள்!உஷார்! டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் 35 ஆபத்தான ஆப்கள்!

இந்த இடத்தில் தான் உங்களுக்கு Gmail-இன் ரகசிய மெசேஜ் கைகொடுக்கும்!

இந்த இடத்தில் தான் உங்களுக்கு Gmail-இன் ரகசிய மெசேஜ் கைகொடுக்கும்!

மிகவும் ரகசியமான விவரங்களை கொண்ட ஒரு மின்னஞ்சலை அனுப்ப போகிறீர்கள் என்றால், அது தப்பித்தவறி கூட வெளியே லீக் ஆகிவிட கூடாது என்றால்.. ஜிமெயிலில் உள்ள கான்ஃபிடென்ஷியலிட்டி மோட் என்கிற அம்சம் தான், உங்களுக்கான ஆபத்பாண்டவன் !

Confidential Mode: வேலைக்கு ஆகுமா?

Confidential Mode: வேலைக்கு ஆகுமா?

கண்டிப்பாக! ஏனெனில் இந்த Confidential Mode-இன் கீழ் அனுப்பப்படும் இமெயிலை பெறுநர்களால் பார்வேட் செய்ய முடியாது, காப்பி செய்ய முடியாது, பிரிண்ட் செய்ய முடியாது, அதில் உள்ள அட்டாச்மென்ட்களை டவுன்லோட் செய்ய முடியாது!

எல்லாவற்றிற்கும் மேலாக, ஜிமெயிலில் அணுக கிடைக்கும் இந்த Confidential Mode ஆனது, ஒரு இமெயிலிற்கான காலாவதியாகும் தேதியையும் 'செட்' செய்ய உதவும் அல்லது அக்செஸ்-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளவும் வழிவகுக்கும்.

TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!

அப்போது ஸ்க்ரீன் ஷாட் எடுக்கலாமா?

அப்போது ஸ்க்ரீன் ஷாட் எடுக்கலாமா?

அது முடியும்! Confidential Mode-இன் கீழ் அனுப்பப்படும் இமெயிலில் உள்ள போட்டோக்களை, அட்டாச்மென்ட்களை, பெறுநர்களால் ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியும்!

எப்படி பார்த்தாலும் நாம் தெரிந்து தானே (ஒரு பெருநருக்கு, ஒரு குறிப்பிட்ட இமெயிலை) அனுப்புகிறோம். ஆகையால் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியும் என்பது இங்கே ஒரு பெரிய சிக்கல் அல்ல!

சரி, Confidential Mode-இன் இமெயில் அனுப்புவது எப்படி?

சரி, Confidential Mode-இன் இமெயில் அனுப்புவது எப்படி?

ஒருவேளை, ஜிமெயில் வழியாக மிகவும் ரகசியமாக இமெயில் அனுப்புவது பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாது என்றால், கவலை வேண்டாம். கீழ்வரும் எளிமையான படிப்படியான வழிமுறைகளை அப்படியே பின்பற்றவும்:

புது ஃப்ரிட்ஜ் வாங்கும் போது மறக்காம புது ஃப்ரிட்ஜ் வாங்கும் போது மறக்காம "இது" இருக்கானு கேளுங்க! இல்லனா வாங்காதீங்க!

பிசி அல்லது கம்ப்யூட்டர் வழியாக ரகசிய ஜிமெயில் மெசேஜ் அனுப்புவது எப்படி?

பிசி அல்லது கம்ப்யூட்டர் வழியாக ரகசிய ஜிமெயில் மெசேஜ் அனுப்புவது எப்படி?

- உங்கள் வெப் ப்ரவுசரில் உள்ள ஜிமெயிலை திறக்கவும்.

- Compose பட்டனை கிளிக் செய்யவும்.

- இப்போது விண்டோவின் கீழ் வலதுபுறத்தில், Confidential Mode என்கிற ஆப்ஷன் இருப்பதை பார்ப்பீர்கள்; அதை கிளிக் செய்யவும்.

- பின்னர் Expiration date மற்றும் Passcode-அது செட் செய்யவும்.

குறிப்பிடத்தக்க வகையில், "No SMS passcode" என்பதை நீங்கள் தேர்வுசெய்தால், Gmail ஆப்பை பயன்படுத்தும் "பெறுநர்கள்" அதை நேரடியாக திறக்க முடியும். ஜிமெயிலை பயன்படுத்தாத பெறுநர்களுக்கு இமெயில் வழியாக பாஸ்கோட் அனுப்பப்படும்.

இருப்பினும், நீங்கள் "SMS passcode" என்பதைத் தேர்வுசெய்தால், பெறுநர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் பாஸ்கோட் அனுப்பி வைக்கப்படும். இதற்காக பெறுநரின் மொபைல் நம்பரை நீங்கள் உள்ளிட வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

- இப்போது Save என்பதைக் கிளிக் செய்யவும்; அவ்வளவு தான்!

ஆண்ட்ராய்டு போன் வழியாக ரகசிய ஜிமெயில் மெசேஜ் அனுப்புவது எப்படி?

ஆண்ட்ராய்டு போன் வழியாக ரகசிய ஜிமெயில் மெசேஜ் அனுப்புவது எப்படி?

- உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள Gmail ஆப்பை திறக்கவும்.

- 'கம்போஸ்' பட்டனை கிளிக் செய்யவும்

- ஆப்பின் மேல் வலது மூலையில், More என்கிற விருப்பம் இருக்கும், அதை கிளிக் செய்து, அதனுள் Confidential Mode என்பதை கிளிக் செய்யவும்.

- இப்போது, Expiration date, passcode மற்றும் பிற கண்ட்ரோல்களை செட் செய்யவும்.

- கடைசியாக Done என்பதை கிளிக் செய்யவும்!

ஐபோன் வழியாக ரகசிய ஜிமெயில் மெசேஜ் அனுப்புவது எப்படி?

ஐபோன் வழியாக ரகசிய ஜிமெயில் மெசேஜ் அனுப்புவது எப்படி?

- உங்கள் ஐபோனில் உள்ள ஜிமெயில் ஆப்பை திறக்கவும்.

- Compose என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்

- ஆப்பின் மேல் வலது மூலையில், More என்கிற விருப்பத்தை கிளிக் செய்து, பின்னர் Confidential mode என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும்.

- வழக்கம் போல காலாவதியாகும் தேதி, கடவுக்குறியீடு மற்றும் பிற கண்ட்ரோல்களை 'செட்' செய்யவும்.

- கடைசியாக Done என்பதை கிளிக் செய்யவும்; அவ்வளவு தான்!

இங்கிலிஷ் தெரியாத எல்லோருமே இந்த மொபைல் செட்டிங்-ஐ கட்டாயம் தெரிஞ்சுக்கனும்!இங்கிலிஷ் தெரியாத எல்லோருமே இந்த மொபைல் செட்டிங்-ஐ கட்டாயம் தெரிஞ்சுக்கனும்!

Best Mobiles in India

English summary
Want to Send Very Important Secret Email Use Confidential Mode Feature on Gmail Here is How

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X