Web Series-களை இவ்ளோ ஈஸியா Download செய்யலாமா? அட இது தெரியாம போச்சே!

|

நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களை டவுன்லோட் செய்வது எப்படி என்றதும், அவைகளை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்வது எப்படி என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.

"அந்த மாதிரியான" டெக் டிப்ஸ்களை வழங்கும் வலைத்தளம் கிஸ்பாட் தமிழ் அல்ல. மாறாக மேற்குறிப்பிட்ட ஓடிடி தளங்களில் அதிகாரப்பூர்வமாக திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களை டவுன்லோட் செய்வது எப்படி என்கிற தேடலுக்கான விடைகளையே இங்கே வழங்கி உள்ளோம்.

இன்டர்நெட் கனெக்ஷன் பற்றி கவலையே வேண்டாம்!

இன்டர்நெட் கனெக்ஷன் பற்றி கவலையே வேண்டாம்!

உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் பார்க்க விரும்பும் ​​திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களை பதிவிறக்கம் செய்து அதை ஆஃப்லைனில் பார்ப்பது ஒரு தனி அனுபவம், குறிப்பாக டிராவல் செய்யும் போதும், இன்டர்நெட் கனெக்ஷன் இல்லாத இடங்களில்!

நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஓடிடி பிளாட்பார்ம்கள், சந்தாதாரர்கள் தங்களுக்கு பிடித்த கன்டென்ட்-ஐ டவுன்லோட் செய்ய அனுமதிக்கின்றன மற்றும் இன்டர்நெட் கனெக்ஷன் இருக்கிறதா, இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், எப்போது வேண்டுமானாலும் அவைகளை ஸ்ட்ரீம் செய்யவும் அனுமதிக்கின்றன.

இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!

இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!

ஒருவேளை நீங்கள் நீண்ட காலமாக நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவை பயன்படுத்தி வருகிறீர்கள், ஆனால் அவைகளில் டவுன்லோட் செய்யும் ஆதரவு உள்ளது என்பது உங்களுக்கு தெரியாவிட்டால், வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவில் இருந்து உங்களுக்கு பிடித்தமான திரைப்படங்கள் அல்லது நிகழ்ச்சிகளைப் பதிவிறக்கம் செய்வதற்கான எளிமையான வழிமுறைகள் இதோ:

Windows யூசர்களே! அடுத்த 6 மாசத்துக்குள்ள Windows யூசர்களே! அடுத்த 6 மாசத்துக்குள்ள "இதை" பண்ணிடுங்க! இல்லனா? கெடு வைத்த Microsoft!

நெட்பிளிக்ஸில் உள்ள சில நிபந்தனைகள்:

நெட்பிளிக்ஸில் உள்ள சில நிபந்தனைகள்:

நெட்பிளிக்ஸ் தன் பிளாட்பார்மில் இருந்து கன்டென்ட்களை பதிவிறக்குவதற்கான விருப்பத்தை வழங்குகிறது. ஆனால் குறிப்பிட்ட சில டிவைஸ்களில் மற்றும் சில நிபந்தனைகளின் கீழ் மட்டுமே அது சாத்தியமாகும்.

- iOS 9.0 அல்லது அதற்கு பிறகு வந்த ஓஎஸ் கொண்டு இயங்கும் iPhone, iPad அல்லது iPod touch வைத்திருக்க வேண்டும்

- உங்களின் ஆண்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட் ஆனது ஆண்ட்ராய்டு 4.4.2 அல்லது அதற்கு பிறகு வந்த ஓஎஸ் கொண்டு இயங்க வேண்டும்.

- Fire OS 4.0 அல்லது பிறகு வந்த ஓஎஸ் கொண்டு இயங்கும் அமேசான் ஃபயர் டேப்லெட்டை வைத்திருக்க வேண்டும்.

- Windows 10 (வெர்ஷன் 1709 அல்லது லேட்டஸ்ட் வெர்ஷன்) அல்லது Windows 11 டேப்லெட் அல்லது கம்ப்யூட்டர் வைத்திருக்க வேண்டும்.

- மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட Chromebook மற்றும் Chromebox மாடல்களை வைத்திருக்க வேண்டும்

நெட்பிளிக்ஸில் மூவீஸ், வெப் சீரீஸ்-களை டவுன்லோட் செய்வது எப்படி?

நெட்பிளிக்ஸில் மூவீஸ், வெப் சீரீஸ்-களை டவுன்லோட் செய்வது எப்படி?

நெட்பிளிக்ஸில் திரைப்படங்கள் / வெப் சீரீஸ்களை பதிவிறக்க, Netflix ஆப்பை திறந்து, Downloads டேப்-ஐ கிளிக் செய்யவும்.

நீங்கள் Windows 10 அல்லது Windows 11 ஓஎஸ்-ஐ பயன்படுத்துகிறீர்கள் என்றால், Netflix ஆப்பை திறந்து Menu-வை கிளிக் செய்யவும்.

நீங்கள் பயன்படுத்தும் டிவைஸை பொறுத்து, "See What You Can Download", "Find Something to Download", "Find More to Download", அல்லது "Available for Download" போன்ற விருப்பங்களை பார்க்கலாம்.

இப்போது நீங்கள் விரும்பும் டிவி நிகழ்ச்சி அல்லது திரைப்படத்தைத் தேர்வுசெய்து, அதன் Description page-ஐ கிளிக் செய்யவும். பின்னர் அங்கிருக்கும் டவுன்லோட் பட்டனை (Downward-facing arrow) கிளிக் செய்யவும்.

ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட சில எபிசோட்களை மட்டுமே பதிவிறக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு எபிசோடிற்கும் முன்னால் உள்ள டவுன்லோட் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

ஆண்ட்ராய்டு யூசர்ர்கள் அனைத்து எபிசோட்களையும் ஒரே நேரத்தில் பதிவிறக்கம் செய்வதற்கான Download Season என்கிற விருப்பத்தையும் பெறுவார்கள்.

அலெர்ட்! இனிமே புது ஸ்மார்ட்போன் வாங்கும் போது அலெர்ட்! இனிமே புது ஸ்மார்ட்போன் வாங்கும் போது "இதை" மறக்காம செக் பண்ணுங்க!

அமேசான் பிரைம் வீடியோவில் மூவீஸ், வெப் சீரீஸ்-களை டவுன்லோட் செய்வது எப்படி?

அமேசான் பிரைம் வீடியோவில் மூவீஸ், வெப் சீரீஸ்-களை டவுன்லோட் செய்வது எப்படி?

அமேசான் நிறுவனம், யூசர்கள் தங்கள் ஃபயர் டேப்லெட் வழியாக மற்றும் iOS, Android, macOS அல்லது Windows 10 ஓஎஸ்-இன் கீழ் இயங்கும் பிரைம் வீடியோ ஆப் வழியாக திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது.

முதலில், அமேசான் பிரைம் வீடியோவில் நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் கன்டென்ட்டின் டைட்டில்-ஐ கண்டறியவும். பின்னர் டைட்டிலின் கீழே இருக்கும் டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும்; அவ்வளவு தான்!

Netflix-ஐ போலவே, இங்கேயும் குறிப்பிட்ட சில எபிசோட்களை மட்டும் கூட நீங்கள் டவுன்லோட் செய்யலாம்.

டவுன்லோட் செய்த கன்டென்ட்களை கண்டுபிடிக்க, ஹோம் பேஜின் கீழே உள்ள "My Stuff" என்கிற டேப்-ஐ கிளிக் செய்யவும்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மூவீஸ், வெப் சீரீஸ்-களை டவுன்லோட் செய்வது எப்படி?

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மூவீஸ், வெப் சீரீஸ்-களை டவுன்லோட் செய்வது எப்படி?

முதலில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆப்பை திறந்து, நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் திரைப்படம் அல்லது நிகழ்ச்சிக்கு / வெப் சீரீஸ் எபிசோட்டிற்கு சென்று, "டவுன்லோட்" விருப்பத்தை கிளிக் செய்யவும். பின்னர் Menu-விற்கு செல்ல நீங்கள் பதிவிறக்கம் செய்த கன்டென்ட்களை காண முடியும்.

Best Mobiles in India

English summary
Want to Download Web Series Movies on Netflix Amazon Prime Disney Plus Hotstar Here is How

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X