Instagram-ல தினமும் Reels பார்க்குறோம்! ஆனால் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?
எங்களுக்கு தெரிந்து விக்கிபீடியா மட்டும் தான், இன்னமும் இன்ஸ்டாகிராம்-ஐ ஒரு போட்டோ ஷேரிங் பிளாட்பார்ம் என்று விளக்கமளித்து வருகிறது.
அது தான் உண்மை என்றாலும் கூட, இன்ஸ்டாகிராம் ஆப்பை திறந்தால் போட்டோக்கள் எங்கே வருகிறது? வெறும் ரீல்ஸ் (Reels) மற்றும் வீடியோக்கள் தானே வருகிறது என்று நீங்கள் கேட்டால், ஆம்! அதுவும் உண்மை தான்; இன்ஸ்டாகிராம் ஆனது ரீல்ஸ்களால் நிரம்பி வழிகிறது!

என்ன இருந்து என்ன புண்ணியம்?
வைரல் ரீல்ஸ், டிரெண்டிங் ரீல்ஸ் என தினமும் 100-க்கும் மேலான ரீல்ஸ்களை பார்த்து என்ன புண்ணியம்? நம்மில் பலருக்கும் அவைகளை எப்படி டவுன்லோட் செய்வது என்று தெரியாது; சிலருக்கு ரீல்ஸ்களை டவுன்லோட் செய்ய முடியும் என்பதே தெரியாது.
அந்த பட்டியலில் நீங்களும் ஒருவர் என்றால், கவலையை விடுங்கள்! பிசி, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் ஐபோன் வழியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-களை டவுன்லோட் செய்வது எப்படி என்கிற தந்திரத்தை நாங்கள் உங்களுக்கு சொல்லிக்கொடுக்கிறோம்.

இது சில கிரியேட்டர்களுக்கு கூட தெரியாது!
இன்ஸ்டாகிராம் பிளாட்பார்மில் அணுக கிடைக்கும் மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்று -ரீல்ஸ். இதன் கீழ் இன்ஸ்டாகிராம் யூசர்களால் 60-வினாடிகள் வரை நீளும் 'வெர்ட்டிக்கல்' வீடியோக்களை ஷேர் செய்ய முடியும்.
தினமும் 10 ரீல்ஸ்களை உருவாக்கும் சில கிரியேட்டர்களுக்கு கூட, ரீல்ஸ்களை ஒரு பிசி வழியாக அல்லது ஒரு ஸ்மார்ட்போன் வழியாக டவுன்லோட் செய்வது எப்படி என்று தெரியாது.
உண்மையில், எந்தவொரு டிவைஸ் வழியாகவும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை அதிகாரப்பூர்வமாக பதிவிறக்கம் செய்ய முடியாது. இந்த இடத்தில் தான் நாம் தேர்ட்-பார்ட்டி வெப்சைட் மற்றும் ஆப்களை பயன்படுத்த வேண்டி இருக்கும்.
நாங்கள் இங்கே instafinsta மற்றும் instadp வலைத்தளங்களையும் (பிசி), InSaver for Instagram-ஐயும் (ஐபோன்) மற்றும் Video Downloader for Instagram-ஐயும் (ஆண்ட்ராய்டு) பயன்படுத்தி உள்ளோம்.

உங்கள் பிசி-இல் instafinsta-வை பயன்படுத்தி ரீல்ஸ்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?
- இன்ஸ்டாகிராம் ஆப்பை திறந்து, நீங்கள் பதிவிறக்க விரும்பும் ரீலின் Link-ஐ காப்பி செய்யவும்.
- இப்போது instafinsta.com க்கு செல்லவும்.
- பின்னர் Reels என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- வழங்கப்பட்ட இடத்தில் குறிப்பிட்ட Link-ஐ பேஸ்ட் செய்யவும், பிறகு Search பட்டனை கிளிக் செய்யவும்.
- இப்போது குறிப்பிட்ட வீடியோ Sync செய்யப்பட்டு, டவுன்லோட் பட்டன் அணுக கிடைக்கும். அதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

இதேபோல instadp-ஐ பயன்படுத்தி ரீல்ஸ்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?
- இன்ஸ்டாகிராம் ஆப்பை திறந்து, நீங்கள் பதிவிறக்க விரும்பும் ரீலின் Link-ஐ காப்பி செய்யவும்.
- இப்போது instadp.com க்கு செல்லவும்
- சிறிது கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்ய 'Instagram Reels Downloader' என்கிற பட்டனை பார்ப்பீர்கள், அதை கிளிக் செய்யவும்.
- பின் வழங்கப்பட்ட இடத்தில் காப்பி செய்த Link-ஐ பேஸ்ட் செய்யவும். பின் Serach பட்டனை கிளிக் செய்யவும்.
- சில வினாடிகளுக்கு பிறகு, குறிப்பிட்ட வீடியோ ஒரு பெரிய நீல நிற டவுன்லோட் பட்டனுடன் உங்கள் ஸ்க்ரீனில் தோன்றும், அதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

ஐபோனில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை எவ்வாறு பதிவிறக்குவது?
- ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து 'InSaver for Instagram' ஐ இன்ஸ்டால் செய்யவும்.
- ஆப்பை இன்ஸ்டால் செய்த பின் அதை 'செட்' செய்யவும்.
- இப்போது இன்ஸ்டாகிராம் ஆப்பை திறந்து, நீங்கள் பதிவிறக்க விரும்பும் ரீலின் Link-ஐ காப்பி செய்யவும்.
- இப்போது இன்சேவர் ஃபார் இன்ஸ்டாகிராம் ஆப்பை திறக்கவும். அதில் நீங்கள் காப்பி செய்த URL ஆனது டவுன்லோட் செய்யப்பட தயாராக இருப்பதை காண்பீர்கள்.
- பிறகு Watch It! > Options > Share > Save Video என்பதன் வழியாக குறிப்பிட்ட வீடியோவை பதிவிறக்கம் செய்யலாம்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை பதிவிறக்கம் செய்வது எப்படி
- கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 'Video Downloader for Instagram' என்கிற ஆப்பை இன்ஸ்டால் செய்யவும்.
- பின்னர் அதை 'செட்-அப்' செய்யவும்.
- இப்போது இன்ஸ்டாகிராம் ஆப்பை திறந்து, நீங்கள் பதிவிறக்க விரும்பும் ரீலின் Link-ஐ காப்பி செய்யவும்.
- பிறகு வீடியோ டவுன்லோடர் ஃபார் இன்ஸ்டாகிராம் ஆப்பை திறக்கவும். அதில் நீங்கள் காப்பி செய்த URL ஆனது டவுன்லோட் செய்யப்பட தயாராக இருப்பதை காண்பீர்கள்.
- டவுன்லோட் பட்டனை கிளிக் செய்ய, குறிப்பிட்ட வீடியோவை பதிவிறக்கம் செய்யப்படும்; அவ்வளவு தான்!


Click it and Unblock the Notifications