YouTube-ல் "அந்த மாதிரியான" வீடியோக்களை கட்டுப்படுத்துவது எப்படி?

|

யூட்யூப்பில் (YouTube) அப்லோட் செய்யப்படும் ஒவ்வொரு வீடியோவுமே, இது குழந்தைகளுக்கான பிரத்யேக வீடியோவா? என்கிற "கட்டத்தை" கடக்கின்றன தான்!

ஆனால் கூட 99% பேர், இது குழந்தைகளுக்கு மட்டுமான வீடியோ இல்லை; இது அனைவருக்குமான வீடியோ என்கிற "விருப்பத்தையே" தேர்வு செய்கிறார்கள்!

ஏனென்றால்?

ஏனென்றால்?

ஒரு வீடியோவை அப்லோட் செய்யும் போது, அது அனைவருக்குமான ஒரு வீடியோ என்று தேர்வு செய்யும் போது தான், குறிப்பிட்ட வீடியோவானது பெரிய அளவில், அனைவருக்கும் சென்று அடையும். இல்லையேல் குழந்தைகளுக்கு மட்டுமே சென்றடையும்.

ஆகையால், பிரத்யேகமாக குழந்தைகளுக்கான வீடியோக்களை "தயார்" செய்பவர்கள் மட்டுமே "இது குழந்தைகளுக்கான வீடியோ" என்பதை தேர்வு செய்வர்.

உஷார்! டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் 35 ஆபத்தான ஆப்கள்!உஷார்! டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் 35 ஆபத்தான ஆப்கள்!

ஆக எல்லோரும் எல்லா வீடியோக்களையும் பார்க்கலாமா?

ஆக எல்லோரும் எல்லா வீடியோக்களையும் பார்க்கலாமா?

ஆம்! எல்லா வயதினரிடையேயும் மிகவும் பிரபலமான ஆப்களில் ஒன்றான யூட்யூப்பில் அணுக கிடைக்கும் எல்லா வகையான வீடியோக்களையும் எல்லோருமே பார்க்கலாமா என்று கேட்டால்? கிட்டத்தட்ட "ஆம்" என்று தான் கூற வேண்டும்!

அப்போது Adult Content-ஐ குழந்தைகளிடம் இருந்து மறைக்க முடியாதா?

அப்போது Adult Content-ஐ குழந்தைகளிடம் இருந்து மறைக்க முடியாதா?

முடியும்! அதற்கு நீங்கள் YouTube-இல் இருக்கும் Restricted Mode-ஐ பயன்படுத்த வேண்டி இருக்கும். 'ரெஸ்ட்ரிக்டெட் மோட்' என்பது யூட்யூப் பிளாட்ஃபார்மில் இருக்கும் அனைத்து வகையான அடெல்ட் கன்டென்ட்களையும் தடுக்க உதவும் ஒரு அம்சம் ஆகும்.

இனி அரசாங்க சான்றிதழ்களை வாங்குவதில் கிடுக்கிபிடி; இந்திய அரசு அதிரடி!இனி அரசாங்க சான்றிதழ்களை வாங்குவதில் கிடுக்கிபிடி; இந்திய அரசு அதிரடி!

யூட்யூப்-ஐ குழந்தைகளுக்கு ஏற்ற தளமாக மாற்றுங்கள்!

யூட்யூப்-ஐ குழந்தைகளுக்கு ஏற்ற தளமாக மாற்றுங்கள்!

Restricted Mode-ஐ வைத்து யூட்யூப் தளத்தை குழந்தைகளுக்கும் ஏற்றதாக மாற்ற முடியும் என்றாலும் கூட, இந்த அம்சம் அனைத்து வகையான அடெல்ட் கன்டென்ட்களையும் 'பில்டர்' செய்யும் என்று YouTube உறுதியளிக்கவில்லை, ஏனெனில் சில நேரங்களில் இந்த Filters துல்லியமாக செயல்படாது; இருந்தாலும் இது நிச்சயமாக பயனளிப்பதாக இருக்கும்!

அடுத்த முறை... குழந்தைகள் கையில் யூட்யூப்-ஐ

அடுத்த முறை... குழந்தைகள் கையில் யூட்யூப்-ஐ "ஒப்படைக்கும்" முன்!

உங்கள் குழந்தை , யூட்யூப் வழியாக ஏதேனும் ஒரு "வயது வந்தோருக்கான" கன்டென்ட்-ஐ பார்த்து விட கூடாது என்று நீங்கள் நினைத்தால், அதை நீங்கள் முற்றிலும் விரும்பவில்லை என்றால், அடுத்த முறை உங்கள் குழந்தையின் கையில் யூட்யூப்-ஐ "ஒப்படைக்கும்" முன் அதில் 'ரெஸ்ட்ரிக்டெட் மோட்' ஆனது 'ஆன்' செய்யப்பட்டு இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.

TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!

எப்படி செய்வது என்று தெரியதா?

எப்படி செய்வது என்று தெரியதா?

ஒருவேளை, டெஸ்க்டாப் மற்றும் மொபைல் போன் வழியாக யூட்யூப் ரெஸ்ட்ரிக்டெட் மோட்-ஐ 'ஆன்' மற்றும் 'ஆஃப்' செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரியாதென்றால், பின்வரும் எளிய வழிமுறைகளை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

டெஸ்க்டாப்பில், YouTube Restricted Mode-ஐ ஆன் / ஆஃப் செய்வது எப்படி?

டெஸ்க்டாப்பில், YouTube Restricted Mode-ஐ ஆன் / ஆஃப் செய்வது எப்படி?

- வெப் ப்ரவுஸரில் YouTube.com-ஐ திறக்கவும்
- பின்னர் மேல் வலது மூலையில் உள்ள உங்கள் ப்ரொபைல் ஐகானை கிளிக் செய்யவும்.
- ப்ரொபைல் மெனுவிலிருந்து Restricted Mode என்பதை கிளிக் செய்யவும்.
- பின்னர் "Active Restricted Mode" என்கிற விருப்பதை எனேபிள் செய்யவும்; அவ்வளவு தான்!

புது ஃப்ரிட்ஜ் வாங்கும் போது மறக்காம புது ஃப்ரிட்ஜ் வாங்கும் போது மறக்காம "இது" இருக்கானு கேளுங்க! இல்லனா வாங்காதீங்க!

மொபைலில், YouTube Restricted Mode-ஐ ஆன் / ஆஃப் செய்வது எப்படி?

மொபைலில், YouTube Restricted Mode-ஐ ஆன் / ஆஃப் செய்வது எப்படி?

- உங்கள் ஸ்மார்ட்போனில் YouTube ஆப்பை திறக்கவும்
- பின்னர் Settings-இல் உள்ள General மெனுவிற்கு செல்லவும்
- அங்கே Restricted Mode என்கிற விருப்பத்திற்கு செல்லவும்
- பின்னர் Activate Restricted Mode என்பதை எனேபிள் செய்யவும்; அவ்வளவு தான்; வேலை முடிந்தது!

பின்குறிப்பு:

பின்குறிப்பு:

Restricted Mode-ஐ வெவ்வேறு டிவைஸ்களில் இயக்க, நீங்கள் அதை தனித்தனியாக செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்க. அதாவது, ஒன்றுக்கும் மேற்பட்ட டிவைஸ்களில் Restricted Mode-ஐ இயக்க விரும்பினால், நீங்கள் அதை கைமுறையாகவே செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
Want to Control Your Kids To Not See Mature Content on Youtube Enable Restricted Mode Here is How

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X