இங்கிலிஷ் தெரியாத எல்லோருமே இந்த மொபைல் செட்டிங்-ஐ கட்டாயம் தெரிஞ்சுக்கனும்!

|

"எனக்கு தமிழ் தெரியாதே!" என்று கூறி எந்தவொரு வெளிநாட்டவரும் வருத்தப்பட்டதில்லை. ஏனெனில் மொழி என்பது அறிவு அல்ல; ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள உதவும் ஒரு கருவி மட்டுமே ஆகும்!

ஆகையால், ஆங்கிலம் தெரியாமல் ஐடி கம்பெனிகளில் வேலை செய்வது தான் தவறு; மற்றபடி "ஐயோ எனக்கு இங்கிலிஷ் எழுதப்படிக்க தெரியாதே!" என்று கூறி யாருமே வருத்தம் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை!

இங்கிலிஷ் தெரியாமல் எப்படி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கை பயன்படுத்துவது?

இங்கிலிஷ் தெரியாமல் எப்படி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கை பயன்படுத்துவது?

யார் சொன்னது? ஆங்கிலம் தெரிந்தால் தான் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கை பயன்படுத்த முடியும் என்று? அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை!

ஃபேஸ்புக், மிகவும் பிரபலமான சமூக ஊடக தளம் ஆகும். இது பல்வேறு நாடுகளை சேர்ந்த, பல்வேறு கலாச்சாரங்களை கடைபிடிக்கும், பல்வேறு மொழிகளை பேசும் மக்களை ஒன்றிணைய அனுமதிக்கும் ஒரு இடமாகும்.

ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் தளமான இன்ஸ்டாகிராமும் அப்படித்தான். இங்கே மொழி ஒரு தடை அல்ல!

WhatsApp யூஸ் பண்றீங்களா? அப்போ மனச தேத்திக்கோங்க! இப்போதைக்கு அது நடக்காது!WhatsApp யூஸ் பண்றீங்களா? அப்போ மனச தேத்திக்கோங்க! இப்போதைக்கு அது நடக்காது!

ஆக இந்த இடத்தில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் ஒரே ஒரு செட்டிங்-ஐ தான்!

ஆக இந்த இடத்தில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் ஒரே ஒரு செட்டிங்-ஐ தான்!

ஆங்கிலம் பேசுபவர்களிடம் இருந்து வந்த ஆப்களாக இருந்தாலும் கூட ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டுமே தமிழ் மொழிக்கான ஆதரவை கொண்டுள்ளன.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், இந்த 2 ஆப்களிலும் (அதாவது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில்) உள்ள ஒரு முக்கியமான செட்டிங்-ஐ பற்றி தெரிந்துகொள்வது மட்டுமே ஆகும். ஒருமுறை அதைப்பற்றி தெரிந்துகொண்டால் போதும், அதன் பிறகு எல்லாமே - தமிழ் மயம் தான்!

அதென்ன செட்டிங்?

அதென்ன செட்டிங்?

அது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள மொழி தொடர்பான 'லேங்குவேஜ் செட்டிங்' ஆகும். இதன் கீழ் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள "அனைத்து" ஆங்கில வார்த்தைகளையுமே உங்களால் தமிழ் மொழிக்கு மாற்ற முடியும்! அதெப்படி?

முதலில் ஃபேஸ்புக் ஆப்பை "தமிழ் மயமாக்குவது" எப்படி என்று பார்ப்போம், அதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ஆப்பை தமிழ் மொழிக்கு ஆதரவான ஒரு ஆப் ஆக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்!

Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!

ஃபேஸ்புக்கில்..

ஃபேஸ்புக்கில்..

- உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள ஃபேஸ்புக் ஆப்பை திறக்கவும்.

- ஸ்க்ரீனின் மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று கிடைமட்ட கோடுகளை (மெனு ஐகானை) கிளிக் செய்யவும்.

- பின்னர் கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்ய, செட்டிங்ஸ் & ப்ரைவசி (Settings & Privacy) என்கிற விருப்பத்தை காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்.

- பின்னர் அதனுள் லேங்குவேஜ் (Language) என்கிற விருப்பத்தை காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்.

- அதனுள் கிடைக்கக்கூடிய பல்வேறு மொழி விருப்பங்களில் தமிழ்-ஐ (Tamil) தேடி கண்டுபிடிக்கவும். பின்னர் அதை தேர்வு செய்யவும்; அவ்வளவு தான்!

இன்ஸ்டாகிராமில்...

இன்ஸ்டாகிராமில்...

- உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள இன்ஸ்டாகிராம் ஆப்பை திறக்கவும். பின் உங்கள் ப்ரொஃபைலுக்குள் (Profile) செல்லவும்.

- இப்போது ஸ்க்ரீனின் மேல் வலதுபுறத்தில் இருக்கும் மூன்று கிடைமட்ட கோடுகளை (மெனு ஐகானை) கிளிக் செய்யவும்.

- பின்னர் செட்டிங்ஸ் (Settings) விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- அதனை தொடர்ந்து Account (அக்கவுண்ட்) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- அதனுள் லேங்குவேஜ் (Language) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- பிறகு கிடைக்கக்கூடிய பல்வேறு மொழி விருப்பங்களில் தமிழ்-ஐ (Tamil) தேடி கண்டுபிடிக்கவும். பின்னர் அதை தேர்வு செய்யவும்; அவ்வளவு தான்!

கீபோர்ட்ல இந்த ஷார்ட்கட்ஸ் கூட தெரியலனா.. ஆபீஸ்ல ரொம்ப அசிங்கமா போயிடும்!கீபோர்ட்ல இந்த ஷார்ட்கட்ஸ் கூட தெரியலனா.. ஆபீஸ்ல ரொம்ப அசிங்கமா போயிடும்!

பின் குறிப்பு:

பின் குறிப்பு:

மேலே உள்ள அதே எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், கம்ப்யூட்டர் ப்ரவுஸரில் உள்ள ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் லேங்குவேஜ் செட்டிங்ஸ்-களையும் உங்களால் அணுக முடியும்; தமிழ் மொழியை தேர்வு செய்ய முடியும்.

மேலும் ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் நீங்கள் மாற்றி அமைக்கும் மொழி விருப்பமானது மற்ற சாதனங்களில் உள்ள மொழி விருப்பங்களை பாதிக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Want to Change Your Language on Facebook or Instagram This Simple Mobile Setting Helps You

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X