Google Pay, Paytm-இல் ஒளிந்து இருக்கும் தமிழர்களுக்கு மட்டுமான ஒரு அம்சம்! உடனே Settings-க்கு போங்க!

|

உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm) மற்றும் போன்பே (PhonePe) போன்ற ஆன்லைன் பேமண்ட் ஆப்கள் உள்ளனவா?

ஆம் எனில், அந்த மூன்று ஆப்களிலுமே "தமிழர்களுக்கு மட்டுமான" ஒரு அம்சம் ஒளிந்து இருப்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா?

தெரியாதென்றால் வாருங்கள்.. அது என்ன அம்சம்? Settings வழியாக அது அணுகுவது எப்படி? என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்!

அதென்ன அம்சம்?

அதென்ன அம்சம்?

முதலில் - மொழி என்பது ஒரு அறிவு அல்ல; அது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள உதவும் ஒரு கருவி ஆகும் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

ஏனென்றால் நாம் இங்கே பார்க்க போவது மொழிகளுடன் தொடர்புடைய ஒரு அம்சம் ஆகும். உங்களில் சிலருக்கு அல்லது உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு தமிழ் மட்டுமே எழுத படிக்க தெரிந்து இருக்கலாம். ஆங்கிலம் - அவ்வளவு பரீட்சயமான ஒரு மொழியாக இல்லாமல் இருக்கலாம்!

இந்த விஷயம் தெரிஞ்ச பிறகு.. அடிக்கடி Phone-க்கு சார்ஜ் போட வேண்டிய வேலையே இருக்காது! என்னது அது?இந்த விஷயம் தெரிஞ்ச பிறகு.. அடிக்கடி Phone-க்கு சார்ஜ் போட வேண்டிய வேலையே இருக்காது! என்னது அது?

இந்த சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால்..?

இந்த சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால்..?

கூகுள் பே, பேடிஎம் மற்றும் போன்பே போன்ற ஆப்களில் உள்ள ஆங்கில வார்த்தைகளில், ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பழக்கம்; சில வார்த்தைகள் மட்டுமே புரியும்; ஒரு கட்டத்திற்கு மேலே அதில் உள்ள ஆங்கிலத்தை புரிந்துகொள்ள முடியவில்லை என்பவர்கள், எதற்காகவும்வருத்தப்பட வேண்டாம்!

ஏனென்றால், அதே கூகுள் பே, பேடிஎம் மற்றும் போன்பே ஆப்களில் 'சேன்ஞ் லேங்குவேஜ்' (Change Language) என்கிற ஒரு பொதுவான அம்சமும் உள்ளது.

சில கிளிக்குகளில் இங்கிலீஷ் டூ தமிழுக்கு மாறலாம்!

சில கிளிக்குகளில் இங்கிலீஷ் டூ தமிழுக்கு மாறலாம்!

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால்.. GPay, Paytm மற்றும் PhonePe ஆப்களில் பல்வேறு மொழிகளுக்கான ஆதரவு உள்ளது. அதில் நம் தாய் மொழியான தமிழும் (Tamil) அடங்கும். அதை தான் நாங்கள் "தமிழர்களுக்கு மட்டுமான ஒரு அம்சம்" என்று குறிப்பிட்டோம்.

ஒருவேளை கூகுள் பே அல்லது பேடிஎம் அல்லது போன்பே ஆப்பில் உள்ள 'சேன்ஞ் லேங்குவேஜ்' அம்சத்தை எப்படி அணுகுவது? என்று உங்களுக்கு தெரியாதென்றால்.. கீழ்வரும் எளிமையான மற்றும் படிப்படியான வழிமுறைகளை பின்பற்றவும்!

பல பேர் இதை வெளிய சொல்ல மாட்டாங்க! Amazon Pay ஆப்பில் ஒளிந்திருக்கும் சூப்பர் ஆப்ஷன்!பல பேர் இதை வெளிய சொல்ல மாட்டாங்க! Amazon Pay ஆப்பில் ஒளிந்திருக்கும் சூப்பர் ஆப்ஷன்!

கூகுள் பே ஆப்பை (Google Pay) ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு மாற்றுவது எப்படி?

கூகுள் பே ஆப்பை (Google Pay) ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு மாற்றுவது எப்படி?

- உங்கள் மொபைலில் உள்ள கூகுள் பே ஆப்பை திறக்கவும்.

- ஸ்க்ரீனின் மேல் வலது மூலையில் உள்ள கூகுள் அக்கவுண்ட் ஐகானை கிளிக் செய்வதன் வழியாக உங்கள் ப்ரொபைல்-ஐ (Profile) அணுகலாம்.

- அங்கே செட்டிங்ஸ் (Settings) என்பதை கிளிக் செய்யவும்

- பின்னர் பெர்சனல் இன்ஃபோ (Personal info) விருப்பத்தை தேர்வு செய்யவும்

- கடைசியாக லேங்குவேஜ் (Language) விருப்பத்திற்குள் நுழைந்து, பட்டியலில் அணுக கிடைக்கும் தமிழ் (Tamil) என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவு தான்!

பேடிஎம் ஆப்பை (Paytm) ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு மாற்றுவது எப்படி?

பேடிஎம் ஆப்பை (Paytm) ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு மாற்றுவது எப்படி?

- உங்கள் மொபைல் போனில் உள்ள பேடிஎம் ஆப்பை திறக்கவும்.

- உங்கள் ஸ்க்ரீனின் மேல் இடது மூலையில் உள்ள ப்ரொபைல்-ஐ (Profile) கிளிக் செய்யவும்

- இப்போது கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்ய ப்ரொபைல் செட்டிங்ஸ் (Profile Settings) என்கிற விருப்பம் கிடைக்கும்;

விஷயம் ரொம்ப சீரியஸ்! உடனே இந்த Settings-ஐ மாத்துங்க.. இல்லனா உங்க WhatsApp அக்கவுண்ட் - கோயிந்தா தான்!விஷயம் ரொம்ப சீரியஸ்! உடனே இந்த Settings-ஐ மாத்துங்க.. இல்லனா உங்க WhatsApp அக்கவுண்ட் - கோயிந்தா தான்!

போன்பே ஆப்பை (PhonePe) ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு மாற்றுவது எப்படி?

போன்பே ஆப்பை (PhonePe) ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு மாற்றுவது எப்படி?

- உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள போன்பே ஆப்பை திறக்கவும்.

- இடது பக்கத்தில் உள்ள போன்பே ப்ரொபைலுக்குள் (PhonePe Profile) செல்லவும்.

- கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்ய செட்டிங்ஸ் & ப்ரெஃப்ரென்சஸ் (Settings and Preferences) என்பதை காண்பீர்கள், அதை கிளிக் செய்யவும்

- பிறகு லேங்குவேஜஸ் (Languages) விருப்பத்தை கிளிக் செய்யவும், பின்னர் பட்டியலில் காணப்படும் தமிழ் (Tamil) என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும்; அவ்வளவு தான்!

Best Mobiles in India

English summary
Want to change the language from English to Tamil in Google Pay, Paytm and PhonePe App Settings? Here is How.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X