எஸ்எம்எஸ் மூலம் 1ஜிபி இலவச வோடபோன் 4ஜி டேட்டா பெறுவது எப்படி.?
இந்த வார தொடக்கத்தில், வோடபோன் 1 ஜிபி டேட்டா விலையில் 10 ஜிபி அளவிலான 4ஜி தரவை (அதாவது ரூ.250/- என்ற விலையில் குறிப்பிட்ட வட்டாரங்களில்) வழங்கி செய்தி தலைப்புகளை ஆக்கிரமித்தது.
இப்போது, வோடபோன் மற்றொரு சலுகை வாய்ப்பை வழங்குகிறது. வோடபோன் சேவை வழங்குநர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் பயனர்கள் இலவசமாக 1 ஜிபி அளவிலான 4ஜி தரவை அனுபவிக்கும் சலுகையை வோடபோன் வழங்கியுள்ளது.
இதை பெற பயனர்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டியது மட்டும்தான். இந்த திட்டம் ஒரு சில விதிகள் மற்றும் அது தொடர்புடைய நிலைமைகள் கொண்டுள்ளது என்பதையம், உடன் இது தேர்ந்தெடுக்கப்பட்ட வோடபோன் 4ஜி வட்டாரங்களில் கிடைக்கும் ஒரு சோதனை விளம்பர வாய்ப்பு என்பதையும் நினைவில் கொள்க. அப்படியாக இந்த வாய்ப்பை நீங்கள் எப்படி பெறமுடியும் என்பதை பாருங்கள்.

எஸ்எம்எஸ் :
நீங்கள் இந்தச் சலுகையை பெற தகுதியான வோடபோன் 4ஜி வட்டத்தில் இருந்தால் உங்கள் வோடபோன் 4ஜி எண்ணில் இருந்து 144 என்ற எண்ணிற்கு '4G GET' என்று ஒரு எஸ்எம்எஸ் அனுப்பவும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இலவசமாக கிடைக்கப்பெறும் :
உடனடியாக, உங்கள் கோரிக்கையை பெற்றுள்ளோம் என்ற ஒரு செய்தி கிடைக்கும், உங்கள் கணக்கில் 1 ஜிபி அளவிலான 4ஜி தரவு இலவசமாக கிடைக்கப்பெறும். எனினும், இது உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் வோடபோன் 4ஜி சிம் கார்டு தகுதியை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

3 நாட்கள் :
தேர்ந்தெடுக்கப்பட்ட வோடபோன் பயனர்களுக்கு கிடைக்கும் இந்த இலவச 1ஜிபி அளவிலான 4ஜி தரவு ஒரு சோதனையின் விளம்பர வாய்ப்பாகும் உடன் இது வெறும் 3 நாட்கள் மட்டும் தான் செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ப்ரீபெய்ட் பயனர்கள் :
இந்த வாய்ப்பானது ப்ரீபெய்ட் பயனர்கள் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் வோடபோன் 4ஜி பயனர்களுக்கு வழங்கப்படும் இந்த இலவச4ஜி தரவு விளம்பர வாய்ப்பை வோடபோன் ப்ரீபெய்ட் பயனர்களால் மட்டுமே பெற முடியும். நீங்கள் ஒரு போஸ்ட்பெய்டு பயனர் என்றால் உங்களால் இந்த வாய்ப்பை பெற முடியாது.

9ஜிபி :
ப்ரீபெய்ட் பயனர்கள் இன்னொரு வோடபோன் சலுகையையும் அனுபவிக்க முடியும். அது ரூ.250/-க்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா பெற்று கூடுதலாக இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலாக பயன்படுத்தக்கூடிய 9ஜிபி அளவிலான 4ஜி தரவை பெறலாம்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :
10 ஜிபி 4ஜி தரவு : ஜியோ - ஏர்டெல் - வோடபோன் - ஐடியா, எது பெஸ்ட்.?


Click it and Unblock the Notifications