யூஸ் பண்ணாத Vodafone Idea சிம் இருந்தா வெளிய எடுங்க.. எக்ஸ்ட்ரா ரூ.16 க்கு 300GB டேட்டா.. எந்த ரீசார்ஜில்?
விலை அதிகம், நன்மைகள் குறைவு, நெட்வொர்க் சரி இல்லை - என ஏதோவொரு காரணத்தால் உங்களுடையே வோடபோன் ஐடியா சிம் கார்ட்டை (Vodafone Idea SIM Card) நீங்கள் வெகு நாட்களாகவே பயன்படுத்தவில்லை என்றால், அதை தூசி தட்டி வெளியே எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எக்ஸ்டரா ரூ.16 க்கு 300ஜிபி டேட்டா கொடுத்தால் யாருக்கு தான் கசக்கும்?
எந்த ரீசார்ஜ்? வோடபோன் ஐடியா லிமிடெட் (VIL) ஆனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.365 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. பின்னர் இந்நிறுவனத்தின் கீழ் ரூ.349 திட்டமும் உள்ளது. மேலோட்டமாக பார்த்தால் - இந்த இரண்டு திட்டங்களுக்கும் இடையேயான விலை வேறுபாடு வெறும் ரூ.16 மட்டுமே ஆகும். ஆனால் உண்மையாக இவ்விரு திட்டங்களுக்கும் இடையேயான வேறுபாடு எக்கச்சக்கமான டேட்டா ஆகும்!

அதெப்படி? வோடபோன் ஐடியாவின் ரூ.365 திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களோடு வருகிறது. மறுகையில் உள்ள ரூ.349 திட்டமும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களோடு வருகிறத. மேலும் இரண்டு திட்டங்களும் ஒரே மாதிரியான எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது மற்றும் 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியை வழங்குகின்றன.
டேட்டா விஷயத்தில் தான் - இந்த 2 திட்டங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் முளைக்கிறது. ரூ.365 திட்டம் அன்லிமிடெட் டேட்டாவுடன் (ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 ஜிபி என அதிகபட்சம் டேட்டாவுடன்) வருகிறது, அதே நேரத்தில் ரூ.349 திட்டம் ஆனது டெய்லி 1.5 ஜிபி டேட்டாவுடன் மட்டுமே வருகிறது. அதாவது ரூ.349 திட்டத்தில் நீங்கள் மொத்தம் 42ஜிபி அளவிலான டேட்டாவை பெறுவீர்கள். ஆனால் ரூ.16 எக்ஸ்ட்ரா செலுத்துவதன் மூலம் ரூ.365 திட்டத்தில் அதே காலகட்டத்தில் மொத்தம் 300 ஜிபி டேட்டாவை பெறுவீர்கள்.
வெறும் ரூ.16 க்கு ஒருபக்கம் 42 ஜிபி டேட்டா, மறுபக்கம் 300 ஜிபி டேட்டா என்பது உண்மையிலேயே மிகப்பெரிய வேறுபாடு ஆகும். மேலும், ரூ.365 திட்டம் இப்போது ஒரு மாத இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைலுக்கான சந்தாவையும் வழங்குகிறது. மறுகையில் உள்ள ரூ.349 திட்டமானது வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், டேட்டா டிலைட்ஸ் மற்றும் பிங் ஆல் நைட் போன்ற பிற நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும் ஒப்பீட்டளவில் ரூ.365 திட்டம் தான் வெற்றியாளர்.
ரூ.250 விலை உயர்த்தப்பட்ட வோடாபோன் ஐடியா பிளான்: ஏர்டெல் அதன் ரூ.189 திட்டத்தின் விலையை ரூ.10 அதிகரித்து ரூ.199 ஆக மாற்றிய வேகத்தில், வோடாபோன் ஐடியா நிறுவனமானது ஒரே அடியாக, அதன் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை ரூ.250 அதிகரித்து ரூ.2,249 ஆக மாற்றி, 1 வருட ரீசார்ஜ்களை விரும்பும் வாடிக்கையாளர்களில் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இனிமேல் அவ்ளோதான் என்று அடுத்தடுத்த திட்டங்கள் மீது விலை உயர்வு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ எந்த விலை உயர்வையும் அறிவிக்காத புண்ணியத்தில்.. எல்லாம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்போது வேண்டுமானால் இது தொடரலாம் அல்லது பரந்த அளவிலான (அனைத்து தனியார் டெலிகாம் நிறுவனங்களின்) விலை உயர்வு அறிவிக்கப்படலாம்.
ரூ.250 விலை உயர்த்தப்பட்ட வோடபோன் ஐடியா ரூ.2,249 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புதிய ரூ.2,249 திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 3600 எஸ்எம்எஸ்கள் மற்றும் (நீங்கள் இருக்கும் வட்டத்தை பொறுத்து) 30 ஜிபி அல்லது 40 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை 365 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகான டேட்டா பயன்பாட்டிற்கு 1 எம்பிக்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். இந்த திருத்தத்திற்கு பிறகு, திட்டத்தின் பயனுள்ள செலவு இப்போது ஒரு நாளைக்கு சுமார் ரூ.6.16 ஆக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications








