வோடபோன் வோல்ட்இ: இலவச அழைப்புகளை ஆக்டிவேட் செய்வது எப்படி?

தற்சமயம் வோடபோன் டேட்டா திட்டங்கள் அனைத்திலும் வோல்ட்இ சேவை சப்போர்ட் செய்யும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash
|

வோடபோன் நிறுவனம் இந்தியாவில் சில இடங்களில் வோல்ட்இ சேவையை அறிமுகப்படுத்திவருகிறது, அதன்படி ரிலையன்ஸ் ஜியோ வழங்கிய வோல்ட்இ சேவையை போன்றே வோடபோன் நிறுவனமும் தற்சமயம் வோல்ட்இ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் இலவச கால் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

வோடபோன் வோல்ட்இ: இலவச அழைப்புகளை ஆக்டிவேட் செய்வது எப்படி?

வோடபோன் வோல்ட்இ சேவைப் பொறுத்தவரை அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்த முடியாது, குறிப்பிட்ட சில ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். அவை சாம்சங் சி9 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி ஜெ7 நெக்ஸ்ட், ஒன்பிளஸ் 3டி, ஒன்பிளஸ் 5,ஒன்பிளஸ் 5டி, சியோமி ரெட்மீ 4, மி மிக்ஸ் 2, மி மேக்ஸ் 2, நோக்கிய 5, நோக்கியா 8, ஹானர் 9ஐ, ஹானர் 7எக்ஸ், ஹானர் 8 ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களில் வோல்ட்இ சேவையைப் பயன்படுத்த முடியும்.

தற்சமயம் வோடபோன் டேட்டா திட்டங்கள் அனைத்திலும் வோல்ட்இ சேவை சப்போர்ட் செய்யும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் வோடபோன் வழங்கும் இந்த வோல்ட்இ சேவைப் பொறுத்தவரை தேசிய அளவில் மட்டுமே பயன்படுத்தமுடியும்.

 வோடபோன் வோல்ட்இ:

வோடபோன் வோல்ட்இ:

வோடபோனின் வோல்ட்இ சேவைப் பொறுத்தவரை டெல்லி, குஜராத், மும்பை போன்ற நகரங்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து நகரங்களுக்கும் வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வோல்ட்இ வசதி கொண்ட ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் வோல்ட்இ சேவைகளை பயன்படுத்தும் சில வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1:

வழிமுறை-1:


முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் 4G CHECK என டைப் செய்து 199 என்ற எண்ணிற்க்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும், இதன்மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ வேலை செய்வதை உறுதிசெய்ய முடியும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

அதன்பின்பு உங்கள் ஸ்மார்ட்போனின் இயங்குதளத்தை அப்டேட் செய்துவைத்துக்கொள்ள வேண்டும்.

வழிமுறை-3

வழிமுறை-3

அடுத்து உங்கள் ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று- மொபைல் டேட்டா-விருப்பத்தை தேர்வுசெய்யவேண்டும்.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
வழிமுறை-4:

வழிமுறை-4:

மேலும் மொபைல் டேட்டா பகுதியில் உள்ள எனேபிள் 4ஜி- வாய்ஸ் & டேட்டா - ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-5:

வழிமுறை-5:

கண்டிப்பாக வோடபோன் சிம் கார்டு 4ஜி/3ஜி/2ஜி நெட்வொர்க் மோட் சப்போர்ட் செய்யும் சிம் ஸ்லாட்டில் பொருத்தியிருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Vodafone 4G VoLTE Rolls Out in Delhi NCR Mumbai Gujarat Circles ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X