Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!

|

உங்கள் ஸ்மார்ட்போனில் கடந்த சில ஆண்டுகளாகவே ட்ரூகாலர் ஆப் (Truecaller App) இருக்கிறதா?

ஆனால், தெரியாத நம்பர்களில் (Unknown Numbers) இருந்து அழைப்புகள் வரும் போது, அது யார் என்று கண்டுபிடிப்பதற்காக (Caller Detection) மட்டுமே தான் ட்ரூகாலரை பயன்படுத்துகிறீர்களா?

நமக்குள்ள என்ன? சும்மா சொல்லுங்க!

நமக்குள்ள என்ன? சும்மா சொல்லுங்க!

ட்ரூகாலர் ஆப்பை மேலோட்டமாக தான் பயன்படுத்துகிறீர்களா?

ஆம் என்றால், கவலைப்படவோ, வருத்தம் கொள்ளவோ வேண்டாம்! ஏனெனில் ட்ரூகாலர் ஆப்பை டம்மியாக பயன்படுத்தும் ஒரே ஒரு நபர் நீங்கள் மட்டுமல்ல! துணைக்கு பல பேர் இருக்கிறார்கள்!

மிகவும் பிரபலமான இந்த ஸ்பேம் கால் ஆப்பில் அணுக கிடைக்கும் 7 சீக்ரெட் அம்சங்களை பற்றி தெரிந்து கொண்டால், உங்களால் அதை பயன்படுத்தாமல்.. ட்ரை செய்து பார்க்காமல் இருக்கவே முடியாது!

அதென்ன அம்சங்கள்? அதன் நன்மைகள் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!.

IRCTC டிப்ஸ்: அடச்சே! இவ்ளோ நாள் இது தெரியாம.. ரயில்ல பயணிச்சி இருக்கோமே!IRCTC டிப்ஸ்: அடச்சே! இவ்ளோ நாள் இது தெரியாம.. ரயில்ல பயணிச்சி இருக்கோமே!

01. ஸ்மார்ட் எஸ்எம்எஸ் (Smart SMS):

01. ஸ்மார்ட் எஸ்எம்எஸ் (Smart SMS):

ட்ரூகாலரில் அணுக கிடைக்கும் ஸ்மார்ட் எஸ்எம்எஸ் அம்சம் ஆனது ஸ்பேம் மெசேஜ்களில் இருந்து முக்கியமான மெசேஜ்களை பில்டர் செய்ய உதவும்.

இதன் கீழ் உங்களால் மெசேஜ்களை வகைப்படுத்த முடியும். அதாவது விளம்பரம், ஸ்பேம், டெலிவரி, பேமண்ட் என உங்களுக்கு வரும் மெசேஜ்களை வகைப்படுத்த முடியும்.

Smart SMS அம்சத்தை எனேபிள் செய்வதன் வழியாக எந்தவொரு முக்கியமான மெசேஜும் தவறவிடப்படாது மற்றும் நீங்கள் எந்த வகையான ஆன்லைன் மோசடிக்கும் இரையாகாமல் இருப்பீர்கள்!

02. அர்ஜென்ட் மெசேஜஸ் (Urgent Messages)

02. அர்ஜென்ட் மெசேஜஸ் (Urgent Messages)

ட்ரூகாலர் வழியாக நீங்கள் அனுப்பும் ஒரு 'அர்ஜென்ட் மெசேஜ்' ஆனது, ஒருவர் (பெறுநர்) வேறொரு ஆப்பில் இருந்தாலும் கூட, ஒரு Flash Messages ஆக பாப் அப் ஆகும் மற்றும் அவர் அதை படிக்கும் வரை அது மறையாது.

முக்கியமான அல்லது டைம்-சென்சிடிவ் ஆன மெசேஜ்கள், பெறுநரின் கவனத்திற்கு உடனே சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் உருவானதே ட்ரூகாலரின் அர்ஜென்ட் மெசேஜஸ்!

YouTube-ல நிறைய Shorts பார்ப்பீங்களா? அப்போ YouTube-ல நிறைய Shorts பார்ப்பீங்களா? அப்போ "இதுக்கும்" ரெடி ஆகிக்கோங்க!

03. எடிட் சென்ட் சாட் மெசேஜ் (Edit sent chat message)

03. எடிட் சென்ட் சாட் மெசேஜ் (Edit sent chat message)

அதாவது நீங்கள் 'சென்ட்' செய்துவிட்ட ஒரு மெசேஜில் ஏதேனும் பிழை இருந்தால் அல்லது மாற்றம் செய்ய வேண்டி இருந்தால், ட்ரூகாலரின் 'எடிட் சென்ட் சாட் மெசேஜ்' அம்சம் உங்களுக்கு கைகொடுக்கும்.

இது அனுப்பப்பட்ட ஒரு மெசேஜை எடிட் செய்ய அனுமதிக்கும். நீங்கள் ஒரு மெசேஜை அனுப்பிய பிறகு, அதை எப்போது வேண்டுமானாலும் எடிட் செய்யலாம். இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால், மெசேஜை பெறுபவர் அதை பார்த்த பிறகும் கூட எடிட் செய்யலாம்

04. பெரிய அளவிலான Files-களை ஷேர் செய்யலாம்!

04. பெரிய அளவிலான Files-களை ஷேர் செய்யலாம்!

ட்ரூகாலர் வழியாக 100MB அளவிலான மீடியா ஃபைல்களை கூட உங்களால் ஷேர் செய்ய முடியும். அது புகைப்படங்களாக, வீடியோக்களாக, ஆவணங்களாக அல்லது வேறு எந்தவொரு மீடியாவாகவும் கூட இருக்கலாம்.

VLC மீடியா பிளேயர் மீதான தடையும், இந்திய அரசின் கம்பி கட்டுற கதையும்!VLC மீடியா பிளேயர் மீதான தடையும், இந்திய அரசின் கம்பி கட்டுற கதையும்!

05. பாஸ்வேர்ட் ப்ரொடெக்ட் மெசேஜஸ் (Password protect messages)

05. பாஸ்வேர்ட் ப்ரொடெக்ட் மெசேஜஸ் (Password protect messages)

ட்ரூகாலர் ஆப் வழியாக நீங்கள் அனுப்பும் மெசேஜிற்கு "கூடுதல் பாதுகாப்பு" வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், மெசேஜ்களுக்கான Passcode lock அம்சத்தை பயன்படுத்தலாம்!

அதாவது உங்கள் சாட்டில் இருக்கும் மெசேஜ்களை படிப்பதற்கு கூட நீங்கள் செட் செய்யும் 4-டிஜிட் பின் அல்லது பயோமெட்ரிக் லாக்கை (Biometric lock) கடக்க வேண்டி இருக்கும்!

06. கால் ரீசன் (Call Reason)

06. கால் ரீசன் (Call Reason)

ஒருவரை நீங்கள் அவசரமாக அழைக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். ஆனால் அவர் பிஸியாக இருக்கலாம். இந்த இடத்தில் தான் Truecaller-இன் Call Reason அம்சம் உங்களுக்கு கைகொடுக்கும்

இதன் வழியாக நீங்கள் ஒருவரை அழைப்பதற்கான காரணத்தை தெரியப்படுத்தலாம். அதாவது நீங்கள் "அளிக்கும்" காரணமானது பெருநரின் இன்கம்மிங் ஸ்க்ரீனில் தோன்றும்!

அடச்சே! Gmail-ல இப்படி ஒரு 'சீக்ரெட்' இருக்குனு.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!அடச்சே! Gmail-ல இப்படி ஒரு 'சீக்ரெட்' இருக்குனு.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!

07. Smart Reminders (ஸ்மார்ட் ரீமைண்டர்ஸ்)

07. Smart Reminders (ஸ்மார்ட் ரீமைண்டர்ஸ்)

ட்ரூ காலரில் அணுக கிடைக்கும் ஸ்மார்ட் ரீமைண்டர் அம்சமானது நிலுவையில் உள்ள பில்கள், நிலுவைத் தேதி, டிக்கெட்ஸ் போன்றவற்றை "தானாகவே" கண்டறிந்து, அது குறித்த நினைவூட்டல்களை உங்களுக்கு தெரிவிக்கும்.

Best Mobiles in India

English summary
Useful Tech Tips 2022 Unknown Secret Features Hidden in Truecaller App

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X