தெரியுமா? 14 நாட்கள் வரை போன் இல்லாமல் WhatsApp-ஐ பயன்படுத்தலாம்! அதெப்படி?

|

"என்னென்ன சொல்றான் பாருங்க.. கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றான்!" என்கிற உங்களின் மைண்ட் வாய்ஸ், எங்கள் ஆபிஸ் வாசல் வரை வந்து விழுகிறது.

இருந்தாலும் கூட, நாங்கள் சொன்ன வார்த்தையில் இருந்து பின் வாங்குவதாக இல்லை - ஒரு போன் இல்லமாலேயே, 14 நாட்கள் வரையிலாக WhatsApp-ஐ பயன்படுத்த முடியும் தான்.

ஏனெனில் இதை நாங்கள் சொல்லவில்லை - வாட்ஸ்அப் நிறுவனமே சொல்கிறது!

அதற்கான வழியையும் சொல்கிறது!

அதற்கான வழியையும் சொல்கிறது!

ஒரு மொபைல் போன் அல்லது ஒரு ஸ்மார்ட்போன் இல்லாமலேயே, வாட்ஸ்அப் யூசர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுடன் இணைந்திருக்க அனுமதிக்கும் ஒரு "வழி" இருக்கிறது.

இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால், அந்த "வழி" உங்களின் கண் மற்றும் கைவிரல் வலிகளை கூட சரி செய்யும்.

அதாவது சிறிய ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவை தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படும் கண் வலி மற்றும் தொடர்ச்சியாக டைப் செய்வதால் ஏற்படும் கட்டைவிரல் வலியை சரி செய்யும்!

பூமர் அங்கிள்களுக்கு வேட்டு.. WhatsApp-இல் புது கிடுக்கிப்பிடி!பூமர் அங்கிள்களுக்கு வேட்டு.. WhatsApp-இல் புது கிடுக்கிப்பிடி!

அதெப்படி?

அதெப்படி?

அதெப்படி என்று உங்களிடம் கேட்டால், உடனே... "மிகவும் சிம்பிள், வாட்ஸ்அப் மல்டி-டிவைஸ் (WhatsApp Multi-Device) அம்சத்தை பயன்படுத்த வேண்டும்!" என்று நீங்கள் கூறலாம். அது உண்மைதான்; ஆனால் அதற்கும் மேலாக சில விஷயங்கள் உள்ளன!

உங்களில் பலருக்கும் ஏற்கனவே தெரியும், ஸ்மார்ட்போனில் மட்டுமின்றி, லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் வழியாகவும் கூட, நம்மால் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி மெசேஜ்களை அனுப்ப முடியும் என்று.. ஆனால் "மேலே கூறிய அந்த 14 நாட்கள்" பற்றி தெரியுமா?

அடுத்த 2 வாரம்

அடுத்த 2 வாரம் "ஒன்னும்" தேவை இல்லை!

நீங்கள் உங்களின் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் வழியாக வாட்ஸ்அப்பின் மல்டி டிவைஸ் அம்சத்தை பயன்படுத்தும் பட்சத்தில், அவர்கள் தத்தம் ஸ்மார்ட்போன்கள் இல்லாமலேயே வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் வெர்ஷன்களின் வழியாக வாட்ஸ்அப்பை அணுக முடியும். ஆனால் 14 நாட்களுக்கு மட்டுமே! அதற்கு பின் என்ன ஆகும்?

ஆடி மாசத்தை அதகளப்படுத்த வரும் 6 புது போன்கள்; Samsung டூ OnePlus வரை!ஆடி மாசத்தை அதகளப்படுத்த வரும் 6 புது போன்கள்; Samsung டூ OnePlus வரை!

14 நாட்களுக்கு மேல்

14 நாட்களுக்கு மேல் "பயன்படுத்தாவிட்டால்"?

வாட்ஸ்அப்பின் கூற்றுப்படி, யூசர்கள் தங்கள் ஸ்மார்ட்போனை ஆன்லைனில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், ஒரே நேரத்தில் நான்கு லிங்க்டு டிவைஸ்களில் (Linked devices) தத்தம் வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பயன்படுத்த முடியும்.

அதாவது, உங்கள் ஸ்மார்ட்போன் தொடர்ந்து 14 நாட்களுக்கு ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் கூட, அதை ஏற்கனவே லிங்க் செய்து வைத்திருக்கும் பட்சத்தில், உங்களால் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும்.

அப்போது... 14 நாட்களுக்கு பிறகு?

அப்போது... 14 நாட்களுக்கு பிறகு?

"Linked Device-களின் வழியாக வாட்ஸ்அப்பை பயன்படுத்த உங்கள் ஸ்மார்ட்போன் ஆன்லைனில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் கூட, 14 நாட்களுக்கு மேலாகியும் கூட நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போனை 'ஆன்' செய்யாவிட்டால் அல்லது உங்கள் மொபைலை பயன்படுத்தாவிட்டால், எந்தெந்த டிவைஸ்களுடன் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட் இணைக்கப்பட்டுள்ளதோ, அது எல்லாமே லாக்டு-அவுட் (Logged Out) ஆகிவிடும்.

அறிமுகமான வேகத்துல இப்படி ஒரு ஆபரா! அதுவும் இந்த Samsung 5G போன் மீது!அறிமுகமான வேகத்துல இப்படி ஒரு ஆபரா! அதுவும் இந்த Samsung 5G போன் மீது!

வாட்ஸ்அப் Multi-Device அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் Multi-Device அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

- நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் ப்ரவுஸரை ஓப்பன் செய்து, அதில் WhatsApp Web (வாட்ஸ்அப் வெப்) என்று டைப் செய்யவும் (அல்லது வாட்ஸ்அப்பின் டெஸ்க்டாப் வெர்ஷனையும் கூட நீங்கள் இன்ஸ்டால் செய்யலாம்)

- ப்ரவுஸரில் 'வாட்ஸ்அப் வெப்' என்று தேடும்போது, அதற்கான லிங்க் ஸ்க்ரீனில் தோன்றும். அதை கிளிக் செய்யவும்.

- அந்த Link திறக்கப்பட்டதும், நீங்கள் க்யூஆர் கோட் (QR Code) ஒன்றை பார்ப்பீர்கள்.

அதை ஸ்கேன் செய்ய வேண்டும்!

அதை ஸ்கேன் செய்ய வேண்டும்!

- அந்த க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்ய, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறக்க வேண்டும். பின்னர் ஆப்பின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும். பின்னர் Linked Devices (லிங்க்டு டிவைசஸ்) என்பதை தேர்வு செய்து, பின்னர் Link a device (லிங்க் ஏ டிவைஸ்) என்பதை கிளிக் செய்யவும்.

- இப்போது உங்கள் வாட்ஸ்அப் ஸ்க்ரீனில் "ஸ்கேன் க்யூஆர் கோட்" என்று எழுதப்பட்டிருப்பதை காண்பீர்கள். அதனை தொடர்ந்து லேப்டாப் / டெஸ்க்டாப் ஸ்க்ரீனில் உள்ள க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்யவும்; அவ்வளவு தான்; இரண்டு டிவைஸ்களும் இணைக்கப்படும்.

அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!

முதல் முறையாக செய்கிறீர்கள் என்றால்?

முதல் முறையாக செய்கிறீர்கள் என்றால்?

உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை ஒரு லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் முதல் முறையாக "இணைக்கும் போது" உங்கள் கையில் ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும்.

அதன் பிறகு அடுத்த 14 நாட்களுக்கு எந்த கவலையும் இல்லாமல், நீங்கள் WhatsApp Web வழியாக வாட்ஸ்அப்பை பயன்படுத்தலாம். ஆனால் இதில் சில சிக்கல்களும் உள்ளன.

அதென்ன சிக்கல்கள்?

அதென்ன சிக்கல்கள்?

அது என்னவென்றால், வாட்ஸ்அப் வழியாக அணுக கிடைக்கும் சில பொதுவான அம்சங்கள் / ஆதரவுகள் வாட்ஸ்அப்பின் மல்டி-டிவைஸின் கீழ் அணுக கிடைக்காது.

வாட்ஸ்அப் நிறுவனத்தின் கூற்றுப்படி, லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் போது சில அம்சங்கள் "ஆதரிக்கப்படாது".

Google-ல் அசத்தல் அம்சம்; இனி Google-ல் அசத்தல் அம்சம்; இனி "Reached Safely" மெசேஜ் அனுப்ப வேண்டிய அவசியமே இல்ல!

அதென்ன அம்சங்கள்?

அதென்ன அம்சங்கள்?

1. உங்கள் மெயின் டிவைஸ் ஒரு iPhone ஆக இருந்தால், லிங்க்டு டிவைஸ்களில் சாட்-களை க்ளியர் அல்லது டெலிட் செய்ய முடியாது.

2. தங்கள் ஐபோனில் மிகவும் பழைய வாட்ஸ்அப் வெர்ஷனை பயன்படுத்துபவர்களுக்கு உங்களால் மெசேஜ் அனுப்பவோ, கால் செய்யவோ முடியாது.

3. லிங்க்டு டிவைஸ்களில் லைவ் லோக்கேஷனை பார்க்க முடியாது

4. லிங்க்டு டிவைஸ்களில் பிராட்காஸ்ட் லிஸ்ட்-களை (Broadcast lists) உருவாக்க முடியாது மற்றும் பார்க்க முடியாது.

5. வாட்ஸ்அப் வெப் வழியாக Link previews (லிங்க் ப்ரீவியூஸ்) உடனான மெசேஜ்களை அனுப்ப முடியாது.

Best Mobiles in India

English summary
How to Use WhatsApp Without Phone Upto 14 Days Even it is Switched Off

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X