உங்கள் போனை கையில் தொடாமல் வாட்ஸ்அப் இல் ரிப்ளை செய்வது எப்படி?
உங்கள் ஐபோனை கையில் எடுக்காமல் உங்கள் வாட்ஸ்அப் அக்கௌன்ட்டில் இருந்து மெசேஜ் அனுப்ப வேண்டுமா? அல்லது உங்கள் போனை கையில் எடுக்காமல் எந்த சமூக வலைத்தள பயன்பாட்டுச் செயலியைத் திறக்காமலே வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்யவேண்டுமா அப்படியானால் இதைப் படியுங்கள்.

ஐபோன் iOS 10.3 இருந்தால் போதும்
ஆப்பிள் நிறுவனம் 2016ம் ஆண்டு தனது சிரி பயன்பாட்டு வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவையை அறிமுகம் செய்தது. ஐபோன் iOS 10.3 மற்றும் அதற்கு மேல் உள்ள இயங்குதளத்தில் இயங்கும் ஐபோன்களில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டது. சிரி பயன்பாடு உள்ள பயனர்கள் உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு வாய்ஸ் மூலம் ரிப்ளை செய்துகொள்ளலாம்.

சிரியை வாட்ஸ்அப் உடன் ஒருங்கிணைக்க என்ன செய்ய வேண்டும்
இந்த சேவையைப் பயன்படுத்த முதலில் சிரியை வாட்ஸ்அப் உடன் ஒருங்கிணைக்க வேண்டும். வாட்ஸ்அப்பில் சிரியை எவ்வாறு இயக்குவது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், அதை எப்படிச் செய்வது என்று கீழே குறிப்பிட்டுள்ள முறையைப் பின்பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

செயல்முறை
- உங்கள் ஐபோனில் செட்டிங்ஸ் மெனுவை கிளிக் செய்யுங்கள்
- சிரி மற்றும் சர்ச் ஆப்ஷன் கிளிக் செய்யுங்கள்.
- சிரியின் வாய்ஸ் சேவையை ஆகிட்டிவேட் செய்ய '‘Listen for "Hey Siri" டாகில் பட்டனை கிளிக் செய்யுங்கள்.
- சிரி சேவையை ஹோம் பட்டன் மூலம் எனபிள் செய்வதற்கான ஆப்ஷனை ஆன் செய்யுங்கள்.
- ஐபோன் எக்ஸ் மற்றும் அதற்கு மேலான மாடல் பயன்படுத்தும் பயனர்கள் சைடு பாட்டன் மூலம் சிரியை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.
- இப்பொழுது சிரி மற்றும் சர்ச் ஆப்ஷனில் கீழே ஸ்கிரால் செய்து வாட்ஸ்அப் தேர்வு செய்யுங்கள்.
- இங்கு ‘Use with Ask Siri' ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- இதற்கு பின் நீங்கள் உங்கள் போனை கையில் எடுக்காமலே, சிரி சேவையை பயன்படுத்தி வாய்ஸ் அசிஸ்டன்ட் மூலம் உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு ரிப்ளை செய்துகொள்ளலாம். இதை ட்ரை செஞ்சு பாருங்கள்.



Click it and Unblock the Notifications