Google Pay, PhonePe, Paytm பயனர்களே.. உடனே மாத்திடுங்க.. இல்லனா மாட்டீப்பீங்க.. என்ன செய்யணும்?
கூகுள் பே, போன்பே, பேடிஎம் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து ஆன்லைன் பேமண்ட் சேவைகளும்மே யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸின் கீழ் வரும் என்பதை நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்கிற அவசியமில்லை என்று நம்புகிறோம்.
அறியாதோர்களுக்கு யுபிஐ என்பது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவால் (National Payments Corporation of India - NPCI) உருவாக்கப்பட்ட ரியல்-டைம் பேமண்ட் சிஸ்டம் (Real-time payment system) ஆகும். யுபிஐ என்பது மொபைல் எண் அல்லது விர்ச்சுவல் பேமண்ட் அட்ரெஸை (Virtual payment address - VPA) பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கிறது.

நம்மில் பலரும் கடந்த மாதங்களாகவே, யுபிஐ பின் நம்பரை (UPI PIN Number) மாற்றாமலேயே பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சிலர் யுபிஐ சேவைக்குள் நுழையும்போது உள்ளிட்ட அதே பின் நம்பரைத்தான் இன்னமும் பயன்படுத்தி வருகிறார்கள். அது முற்றிலும் தவறான மற்றும் பாதுகாப்பற்ற செயலாகும்.
வலுவான யுபிஐ பின்-ஐ உருவாக்குவதும், அதை தொடர்ந்து மாற்றுவது மிகவும் முக்கியம். அவ்வப்போது யுபிஐ பின்-ஐ மாற்றுவது உங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான படியாகும். இல்லையென்றால் அங்கீகரிக்கப்படாத அணுகல் மற்றும் பணமிழக்கும் சிக்கல்களை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஒருவேளை கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) மற்றும் இதர பேமண்ட் ஆப்களில் யுபிஐ பின் நம்பரை மாற்றுவது எப்படி என்று உங்களுக்கு தெரியாவிட்டால் அல்லது யுபிஐ பின்-ஐ மறந்துவிட்டால், அதை ரீசெட் செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரியாவிட்டால்.. அதை செய்வது எப்படி என்கிற எளிமையான மற்றும் படிப்படியான வழிமுறை இதோ:
யுபிஐ பின் நம்பரை மாற்றுவது தொடர்பாக நீங்கள் மனதில் கொள்ளவேண்டிய 3 முக்கியமான விஷயங்கள்:
01. உங்களுடைய யுபிஐ பின் நம்பர் ஆனது மற்றவர்களால் எளிதாக யூகிக்க முடியாத அளவிற்கு கடினமானதாக இருக்க வேண்டும்.
02. உங்கள் யுபிஐ பின் நம்பரை யாருடனும் பகிர வேண்டாம்.
03. முன்னாடி குறிப்பிட்டபடி உங்கள் யுபிஐ பின் நம்பரை அடிக்கடி மாற்றவும்.

யுபிஐ பின் நம்பரை மாற்றுவது அல்லது ரீசெட் செய்வது எப்படி?
1. உங்கள் ஸ்மார்ட்போனில், நீங்கள் பயன்படுத்தும் யுபிஐ-எனேபிள்டு ஆப்பை (UPI-enabled App) திறக்கவும். இது கூகுள் பே, போன்பே, பேடிஎம் அல்லது வேறு ஏதேனும் ஒரு யுபிஐ ஆப் ஆக இருக்கலாம்.
2. இப்போது உங்கள் யுபிஐ ஐடி (UPI ID) அல்லது மொபைல் நம்பரை (Mobile Number) உள்ளிட்டு உங்கள் அக்கவுண்ட்டிற்குள் லாக்-இன் (Log-in) செய்யவும்.
3. லாக்-இன் செய்ததும், யுபிஐ சர்வீசஸ் (UPI Services) அல்லது செட்டிங்ஸ் (Settings) பிரிவுக்கு செல்லவும். இது பொதுவாக மெயின் மெனுவில் (Main Menu) அல்லது ஆப்பிற்குள் ஒரு தனி விருப்பமாக இருக்கும்.
4. யுபிஐ சர்வீஸ் மெனுவில் 'யுபிஐ பின்னை மாற்றவும் (Change UPI PIN) அல்லது யுபிஐ பின்னை ரீசெட் செய்யவும் (Reset UPI PIN) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
5. இப்போது உங்களின் தற்போதைய யுபிஐ பின்-ஐ உள்ளிடுமாறு (Enter your current UPI PIN) கேட்கப்படுவீர்கள்.
6. தற்போதைய யுபிஐ பின்-ஐ உள்ளிட்ட பிறகு, புதிய யுபிஐ பின்-ஐ செட் (Set New UPI PIN) செய்யுமாறு கேட்கப்படுவீர்கள். முன்னரே குறிப்பிட்டபடி, உறுதியான மற்றும் பாதுகாப்பான பின்-ஐ தேர்வு செய்யவும்.
7. இப்போது உறுதிப்படுத்த புதிய யுபிஐ பின்-ஐ மீண்டும் உள்ளிடவும் (Re-enter new UPI PIN ).
8. புதிய யுபிஐ பின்-ஐ உள்ளிட்டு உறுதிசெய்ததும், நீங்கள் செய்த மாற்றங்களை சமர்ப்பிக்கவும் (Submit Changes).
9. அவ்வளவு தான் உங்கள் யுபிஐ பின் வெற்றிகரமாக மாற்றப்பட்டதை குறிக்கும் கன்ஃபிர்மேஷன் மெசேஜை (Confirmation message) பெறுவீர்கள்.


Click it and Unblock the Notifications








