Home
How to

பேங்க் அக்கவுண்ட்.. மாதம் ரூ.15,000 லிமிட்.. Google Pay, Paytm, PhonePe பேமெண்ட்.. எப்படி லிமிட் செட் செய்வது?

பேங்க் அக்கவுண்ட் வைத்திருந்து, அதில் கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm), போன்பே (PhonePe) மற்றும் பீம் (BHIM) போன்ற ஆப்களில் பரிவர்த்தனைகளை செய்யும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் கொண்டுவரப்பட்ட யுபிஐ சர்க்கிளுக்கு (UPI Circle) ரூ.15,000 மாதாந்திர லிமிட்டாக இருக்கிறது. இந்த லிமிட் யாருக்கு பொருந்தும் என்பதற்கான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) - என்பிசிஐ (NPCI) ஆனது பேங்க் அக்கவுண்ட் இல்லாமலேயே யுபிஐ பரிவர்த்தனைகளை செய்து கொள்வதற்காக யுபிஐ சர்க்கிள் என்னும் பேமெண்ட் ஆப்ஷனை கொண்டுவந்தது. இதற்கு மாதாந்திர லிமிட், பேமெண்ட் ரெக்கொஸ்ட் உள்ளிட்ட விதிகள் கொண்டுவரப்பட்டன.

பேங்க் அக்கவுண்ட்.. மாதம் ரூ.15,000 லிமிட்.. Google Pay பேமெண்ட்!

அதாவது, பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட யுபிஐ ஆப்பை வைத்திருக்கும் பிரைமரி யூசர் என்பவர், தங்களது கான்டெக்ட்டில் இருக்கும் யாரேனும் ஒரு நபருக்கு யுபிஐ சர்க்கிள் வழியாக பரிவர்த்தனை செய்ய அனுமதி கொடுக்கலாம். இந்த நபர் செகண்டரி யூசராக இருப்பார். இவருக்கு பேங்க் அக்கவுண்ட் தேவையில்லை.

ஸ்மார்ட்போன், மொபைல் நம்பர் மற்றும் யுபிஐ ஆப் மட்டுமே இருந்தால் போதும், யுபிஐ பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். ஆனால், பிரைமரி யூசரே மாதம் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை நிர்ணயம் செய்வார். அதேபோல செகண்டரி யூசர் பேமெண்ட் செய்யும்போது, பிரைமரி யூசரின் அனுமதி தேவைப்படும்.

அதிகபட்டமாக மாதத்துக்கு ரூ.15,000 வரையில் மட்டுமே, செகண்டரி யூசர் பணத்தை செலவு செய்ய முடியும். இதைவிட கம்மியான தொகையை கூட லிமிட்டாக செட் செய்து கொள்ள முடியும். இந்த யுபிஐ சர்க்கிள் பேமெண்ட் ஆப்ஷனை கூகுள் பே, போன்பே, பேடிஎம் மற்றும் பீம் போன்ற யுபிஐ ஆப்கள் அமலுக்கு கொண்டுவந்துவிட்டன.

இதில் கூகுள் பே மற்றும் பேடிஎம் ஆப்களில் பாக்கெட் மணி ஆப்ஷனின் கீழ் இந்த யுபிஐ சர்க்கிள் பேமேண்ட் கிடைக்கிறது. பெரும்பாலான பேங்க் கஸ்டமர்கள் கூகுள் பே ஆப்பை பயன்படுத்துவதால், இதில் கிடைக்கும் பாக்கெட் மணி யுபிஐ சர்க்கிள் (Pocket Money UPI Circle) பேமெண்ட்டை எப்படி செட் செய்வது என்பதை பார்த்துவிடலாம்.

யுபிஐ சர்க்கிள் பேமெண்ட்டின் கீழ் இந்த கூகுள் பே பாக்கெட் மணி (Google Pay Pocket Money) விருப்பம் கொடுக்கப்படுகிறது. இதில் பேங்க் அக்கவுண்ட் இல்லாத செகண்டரி யூசரை இணைக்கும் போது, அவர்களது மொபைல் நம்பர் பிரைமரி யூசரின் கான்டெக்ட்டில் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையென்றால், இதை பயன்படுத்த முடியாது.

1: கூகுள் பே ஆப்பை ஓப்பன் செய்து கொள்ளவும்.
2: மேலே வலது புறத்தில் இருக்கும் ப்ரொபைல் பிக்சர் (Profile Picture) விருப்பத்தை கிளிக் செய்யவும்.
3: கீழே ஸ்க்ரோல் செய்தால், செட் அப் பாக்கெட் மணி (Set up pocket money) விருப்பம் இருக்கும்.
4: இதை கிளிக் செய்தால், செகண்டரி யூசரின் யுபிஐ ஐடி கேட்கப்படும். இதை கொடுத்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
5: இல்லையென்றால், மொபைல் நம்பரை கொடுத்தும் இணைக்கலாம்.
6: இப்போது, மாதாந்திர லிமிட்டை செட் செய்ய வேண்டும்.

இந்த மாதாந்திர லிமிட் ரூ.15,000 தொகைக்குள் இருக்க வேண்டும். இதற்கு கீழ் எவ்வளவு வேண்டுமானாலும் தேவைக்கு ஏற்ப செட் செய்து கொள்ளலாம். இல்லையென்றால், ஒவ்வொரு பேமெண்ட்டை செய்யும்போதும், பிரைமரி யூசரின் அனுமதி கேட்கும்படியும் செட் அப் செய்து கொள்ளலாம். ஆனால், இதிலும் ரூ.15,000 மாதாந்திர லிமிட்டாக இருக்கும்.

செகண்டரி யூசரை வெரிபிகேஷன் செய்ய வேண்டி இருக்கிறது. ஆகவே, ஐடி விவரங்கள் கேட்கப்படும். இதுவும் கிட்டத்தட்ட கேஒய்சி விவரங்கள் போலவே இருக்கும். ஆகவே, ஆதார் நம்பரை கொடுக்கலாம். குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்தால், உறவு முறையையும் அதில் குறிப்பிட வேண்டும். பிறகு வழக்கம்போல யுபிஐ பேமெண்ட்களை செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
UPI Circle Monthly Limit Rs 15000 For Secondary Users How To Set up Google Pay Pocket Money
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X