ஏர்டெல் வாசிகளே.. உங்களுக்கு மட்டும் ஹேப்பி ஹேப்பி தீபாவளி..!
உங்களிடம் இருக்கும் ஏர்டெல் சிம் கார்ட்டை அப்கிரேட் செய்வதின் மூலமாக ஏர்டெல் வழங்கும் 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை இலவசமாக பெற முடியும்.
இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றான தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் எங்கும் எதிலும் திருவிழா சலுகைகள் களைக்கட்டியுள்ளன. எக்ஸ்சேன்ஜ் ஆபர், ஸ்மார்ட்போன், லாப்டாப் ஆகியவைகளில் விலை தள்ளுபடி என கருவிகளில் சலுகைகள் ஒருபக்கம் நிகழ்த்துக் கொண்டிருக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு தீபாவளி சலுகையை வழங்கிய வண்ணம் உள்ளன.
அப்படியாக, தனது பயனர்கள் தங்களிடம் இருக்கும் சிம் அட்டையை 4ஜிக்கு அப்கிரேட் செய்வதின் மூலமாக இலவசமாக 2ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம். அதை எப்படி பெறுவது என்பதை பற்றிய தொகுப்பே இது. கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.

ஏர்டெல் சிம் அப்கிரேட்
நீங்கள் உங்களின் 2ஜி அல்லது 3ஜி ஏர்டெல் சிம்தனை ஒரு 4ஜி சிம் அட்டையாக மாற்றலாம் அதை நிகழ்த்த www.airtel.in/4g/sim-swap என்ற வலைத்தளத்திக்குள் நுழையவும் அங்கு நீங்கள் உங்கள் பெயர், உங்கள் ஏர்டெல் மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி, மற்றும் ஷிப்பிங் முகவரியை உள்ளிட வேண்டும். பின்னர் சென்ட் மீ ஏ 4ஜி சிம்' என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மெசேஜ் அனுப்பவும்
நீங்கள் உங்களின் ஏர்டெல் 4ஜி சிம் அட்டை தயாராகி உங்கள் கைகளில் பெற்றவுடன், நீங்கள் உங்களின் 2ஜி அல்லது 3ஜி சிம் அட்டையின் 20 இலக்க சிம் நம்பரை 121 என்ற எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

ஏர்டெல் ஒப்புகை
எஸ்எம்எஸ் அனுப்பிய பின்னர், நீங்கள் ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து ஒரு எஸ்எம்எஸ் பெறுவீர்கள். இந்த எஸ்எம்எஸ் ஆனது நீங்கள் அனுப்பிய சிம் அட்டை அப்கிரேட் கோரிக்கையை ஏர்டெல் ஒப்புகை வழங்கலாமா என்ற சரிபார்ப்பு எஸ்எம்எஸ் ஆகும் உள்ளது. பின்னர், நீங்கள் அதை உறுதிப்படுத்த "1" என்ற பதிலை சமர்ப்பிக்க வேண்டும்.

பழைய சிம் துண்டிக்கப்படும்
அதை நிகழ்த்தவும் உங்கள் பழைய ஏர்டெல் சிம் கார்ட்டின் நெட்வர்க் சில நிமிடங்களில் துண்டிக்கப்படும். சேவை துண்டிக்கப்பட்டதும் நீங்கள் உங்களின் ஏர்டெல் 4ஜி சேவையின் நன்மைகளை அனுபவிக்க ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச டேட்டா
சிம் மேம்படுத்தல் செயல்முறைக்கு பிறகு, உங்கள் எண் ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து இலவசமாக 2 ஜிபி அளவிலான 4ஜி தரவு வரவு வைக்கப்படும். சிம் அப்கிரேட் நிகழ்த்துபவருக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இலவச தரவு பெற, நீங்கள் ஏர்டெல் 4ஜி எண்ணில் இருந்து 5 நாட்களுக்குள் 52122 என்ற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க
தெறி தீபாவளி.. மலிவு விலையில் 3ஜிபி வழங்கும் ஏர்டெல்.!


Click it and Unblock the Notifications