பாஸ்வேர்ட் (அ) பின் நம்பர் இல்லாமலேயே.. ஒரு போனை அன்லாக் செய்வது எப்படி?

|

பாஸ்வேர்ட் (Password) அல்லது பின் நம்பர் (PIN Number) அல்லது பேட்டர்ன் (Pattern) போன்றவைகளை பயன்படுத்தாமலேயே.. ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அன்லாக் (Unlock) செய்ய முடியுமா? என்கிற கேள்விக்கு..

"முடியும்" என்பதே எங்களின் பதில் ஆகும்! இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்.. அதை செய்ய 1 வழி அல்ல.. மொத்தம் 4 எளிமையான வழிகள் உள்ளன! அதென்ன வழிகள்? என்பதை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்!

மிகவும் சகஜமாகி விட்டன!

மிகவும் சகஜமாகி விட்டன!

யார் வேண்டுமானாலும் மிகவும் எளிமையாக பயன்படுத்த முடியும், மிகவும் விரைவாக கற்றுக்கொள்ள முடியும் என்கிற ஒரே காரணத்தால் - பீச்சர் மொபைல் போன்களை போலவே - ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மிகவும் சகஜமாகி விட்டன!

ஆண்ட்ராய்டு யூசர்களின் ஆர்வங்கள் மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு, மொபைல் போன் நிறுவனங்களும் தொடர்ச்சியான முறையில் புதிய அம்சங்கள் மற்றும் அப்டேட்களையும் வழங்குகின்றன.

செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

ஆனால்.. முக்கிய பாதுகாப்பு எதுவென்றால்?

ஆனால்.. முக்கிய பாதுகாப்பு எதுவென்றால்?

என்னதான் புதிய அம்சங்கள் மற்றும் அப்டேட்கள் வந்தாலும் கூட, ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கும், அதில் உள்ள தகவல்களுக்கும் மிகவும் முக்கியமான பாதுகாப்பாக திகழ்வது - பாஸ்வேர்ட்கள் தான் (அல்லது பின் நம்பர்கள் அல்லது பேட்டர்ன்கள் தான்)

ஒவ்வொரு ஆண்ட்ராய்டு மொபைல் போனுக்கும் அல்லது டேப்லெட்டுக்குமான அடிப்படை பாதுகாப்பு என்றால் - அது பாஸ்வேர்ட்கள் தான்!

அப்படியான பாஸ்வேர்ட் இல்லாமலேயே ஒரு போனை அன்லாக் செய்யலாமா?

அப்படியான பாஸ்வேர்ட் இல்லாமலேயே ஒரு போனை அன்லாக் செய்யலாமா?

பாதுகாப்பு காரணங்களுக்காகவும், யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்கிற கட்டுப்பாட்டை வழங்கும் நோக்கத்தின் கீழும், உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் செட் செய்யும் பாஸ்வேர்ட் அல்லது பின் நம்பர் அல்லது பேட்டர்னை - ஒருவேளை - நீங்கள் மறந்து விட்டால்..

பாஸ்வேர்ட் இல்லாமலேயே ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அன்லாக் செய்வது எப்படி என்கிற தந்திரங்களால் மட்டுமே உங்களையும் உங்கள் ஸ்மார்ட்போனையும் காப்பாற்ற முடியும்!

உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?

முதல் ஆப்ஷன்... ரீசெட்!

முதல் ஆப்ஷன்... ரீசெட்!

பாஸ்வேர்ட் / பின் / பேட்டர்ன் இல்லாமலேயே ஒரு ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய, உங்களுக்கு இருக்கும் முதல் வழி, அதை ரீசெட் (Reset) செய்வது தான்!

ஒரு ஸ்மார்ட்போனில், தவறான பாஸ்வேர்ட்டை அல்லது பின் நம்பரை பல முறை உள்ளிட்ட பிறகு, சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யவும் என்கிற விருப்பம் கிடைக்கும். கூடவே "பேட்டர்ன் / பாஸ்வேர்டு மறந்துவிட்டது" (Forgot Pattern/Password) என்கிற விருப்பமும் கிடைக்கும்!

அதை கிளிக் செய்யவும்!

அதை கிளிக் செய்யவும்!

இப்போது ரிஜிஸ்டர் செய்யப்பட்ட உங்களுடைய Google அக்கவுண்டில் லாக்-இன் செய்யுமாறு கேட்கப்படுவீர்கள். அங்கே சரியான ஐடி மற்றும் பாஸ்வேர்ட்களை உள்ளிட்டு லாக்-இன் செய்யவும்.

அதை தொடர்ந்து, உங்கள் ஸ்மார்ட்போன் தானாகவே அன்லாக் ஆக வேண்டும். பிறகு என்ன? ஒரு புதிய மற்றும் நீங்கள் மறந்து போகாத ஒரு பாஸ்வேர்ட் / பின் / பேட்டர்னை செட் செய்யவும்!

Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!

உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த ஆப்ஷன் கிடைக்கவில்லையா?

உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த ஆப்ஷன் கிடைக்கவில்லையா?

கவலை வேண்டாம்! ஏனென்றால் Forgot Pattern/Password என்கிற விருப்பமானது, எல்லா ஸ்மார்ட்போன்களிலும் கிடைக்காது. ஆனாலும் பெரும்பாலான பழைய மாடல்கள் இந்த செயல்முறையை ஆதரிக்கின்றன.

ஒருவேளை, உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இந்த ஆப்ஷன் கிடைக்கவில்லை என்றால், கவலை வேண்டாம். உங்களுக்கு இன்னும் மூன்று வழிகள் உள்ளன!

இரண்டாவது வழி - ஸ்மார்ட் லாக்!

இரண்டாவது வழி - ஸ்மார்ட் லாக்!

பாஸ்வேர்ட் / பின் / பேட்டர்னை மறந்து விட்ட சூழ்நிலைகளில், ஆண்ட்ராய்டின் Smart Lock அம்சம் உங்களுக்கு கை கொடுக்கலாம்.

இந்த அம்சம் எப்படி வேலை செய்யும் என்றால்? இது உங்கள் வீட்டில் உள்ள வைஃபை கனெக்ஷனின் உதவியுடன், உங்கள் ஆண்ட்ராய்ட் போனிற்குள் லாக்-இன் ஆகும்.

எனவே, அடுத்த முறை, நீங்கள் அன்லாக் பாஸ்வேர்ட்-ஐ மறக்கும் பட்சத்தில், உங்கள் ஸ்மார்ட்போனை உங்களின் ஹோம் நெட்வொர்க்கிற்கு அருகில் எடுத்து செல்லுங்கள், அது தானாகவே அன்லாக் ஆகும்!

மூன்றாவது வழி - ஃபைண்ட் மை மொபைல்!

மூன்றாவது வழி - ஃபைண்ட் மை மொபைல்!

நீங்களொரு சாம்சங் யூசர் என்றால், பாஸ்வேர்ட் / பின் நம்பர் மறந்து போன நேரத்தில், Find My Mobile என்கிற அம்சத்தை தாராளமாக நம்பலாம்.

இந்த அம்சத்தை பயன்படுத்த, நீங்கள் முன்னரே உங்களின் சாம்சங் அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்ய வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

VLC மீடியா பிளேயர் மீதான தடையும், இந்திய அரசின் கம்பி கட்டுற கதையும்!VLC மீடியா பிளேயர் மீதான தடையும், இந்திய அரசின் கம்பி கட்டுற கதையும்!

பின்னர், சூழ்நிலை அழைக்கும் போது?

பின்னர், சூழ்நிலை அழைக்கும் போது?

பாஸ்வேர்ட் / பின் நம்பர் / பேட்டர்ன் மறந்து போன நேரத்தில் ஒரு கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் வழியாக Samsung Find My Mobile இணையதளத்திற்கு செல்லவும்.

பின்னர் உங்கள் சாம்சங் அக்கவுண்ட் விவரங்களை உள்ளிட்டு, பாஸ்வேர்ட், பின் அல்லது பேட்டர்னை அகற்ற 'அன்லாக் மை ஸ்கிரீன்' (Unlock my screen) என்கிற விருப்பத்தை பயன்படுத்தவும்; அவ்வளவு தான்!

எதுவுமே வொர்க்-அவுட் ஆகவில்லையா? இதுதான் கடைசி வழி!

எதுவுமே வொர்க்-அவுட் ஆகவில்லையா? இதுதான் கடைசி வழி!

நாம் மேற்கண்ட 3 வழிகளும் உங்களுக்கு கைகொடுக்கவில்லை என்றால் அல்லது சரியாக செயல்படவில்லை என்றால், உங்களுக்கு வேறு வழியே இல்லை - உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ஃபேக்ட்ரி ரீசெட் (Factory reset) செய்து விடுங்கள்.

இந்த விருப்பத்தை பயன்படுத்துவதன் வழியாக, உங்கள் ஸ்மார்ட்போனை மட்டுமே "மீட்டெடுக்க" முடியும்; அதில் உள்ள தரவுகள் மற்றும் தகவல்கள் எல்லாமே அழிந்துவிடும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

Best Mobiles in India

English summary
Unlock Android Phone Without Password PIN Number Pattern

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X