உங்க WhatsApp நம்பர்ல இருந்து உங்களுக்கே மெசேஜ் அனுப்புவது எப்படி?

|

முக்கியமான தகவல்களை, பாஸ்வேர்ட்களை அல்லது ஆவணங்களை மொபைல் போன்களில் உள்ள Notes App-இல் சேமித்து வைக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தாலும் கூட, அது மிகவும் வசதியான மற்றும் எளிமையான செயல்முறையாக இல்லை என்பது போல் தெரிகிறதா?

ஆமெனில், நீங்கள் ஏன் வாட்ஸ்அப்பையே (WhatsApp) ஒரு நோட்ஸ் ஆப் ஆக பயன்படுத்த கூடாது?

அதாவது உங்களுக்கு நீங்களே WhatsApp செய்தால் என்ன?

அதாவது உங்களுக்கு நீங்களே WhatsApp செய்தால் என்ன?

"என்னது? எனக்கு நானே வாட்ஸ்அப் வழியாக மெசேஜ் அனுப்பிக்கொள்ள முடியுமா?" என்று கேட்பவர்கள், இன்னொரு அதிர்ச்சிக்கும் தயாராகி கொள்ளவும்.

அது என்னவென்றால், வாட்ஸ்அப் வழியாக உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக்கொள்ள ஒரு வழி அல்ல, மொத்தம் 2 வழிகள் உள்ளன!

Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!

முதல் வழி - ஈஸி.. இரண்டாவது வழி - ரொம்ப ஈஸி!

முதல் வழி - ஈஸி.. இரண்டாவது வழி - ரொம்ப ஈஸி!

உங்களுக்கு நீங்களே வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிக்கொள்ள இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று wa.me// மெதேட், மற்றொன்று WhatsApp Group மெத்தேட் ஆகும்.

முன்னரே குறிப்பிட்டபடி, முதல் வழிமுறை சுலபமாக இருக்கும்; இரண்டாவது வழிமுறை அதைவிட சுலபமாக இருக்கும்.

wa.me// மெத்தேட் வழியாக உங்களுக்கு நீங்களே WhatsApp மெசேஜ் அனுப்புவது எப்படி?

wa.me// மெத்தேட் வழியாக உங்களுக்கு நீங்களே WhatsApp மெசேஜ் அனுப்புவது எப்படி?

- உங்கள் மொபைல் போன் அல்லது லேப்டாப் / பிசி வழியாக ஏதேனும் ஒரு வெப் ப்ரவுஸர்-ஐ திறக்கவும்.

- பின்னர் அட்ரெஸ் பாரில் wa.me// என்று டைப் செய்யவும், அதைத் தொடர்ந்து உங்கள் மொபைல் நம்பரையும் டைப் செய்யவும்.

- நீங்கள் டைப் செய்யும் உங்கள் மொபைல் எண்ணுக்கு முன்பாக உங்கள் நாட்டின் கோட்-ஐயும் டைப் செய்ய வேண்டும். அதாவது இந்தியாவில் இருப்பவர்கள் wa.me//91 ஏ என்று டைப் செய்து பின்னர் 10 இலக்க மொபைல் நம்பரை டைப் செய்ய வேண்டும்.

VLC மீடியா பிளேயர் மீதான தடையும், இந்திய அரசின் கம்பி கட்டுற கதையும்!VLC மீடியா பிளேயர் மீதான தடையும், இந்திய அரசின் கம்பி கட்டுற கதையும்!

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- மேலே சொன்னபடி டைப் செய்து முடித்ததும், வாட்ஸ்அப் வெப்-ஐ பயன்படுத்துமாறு கேட்கும் விண்டோ ப்ராம்ப்ட்டை பெறுவீர்கள்.

- அதன் பிறகு, "Continue to Chat" என்கிற மெசேஜ் உடன் ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும்.

- அந்த விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும், உங்கள் சொந்த சாட் உடனான WhatsApp Web அல்லது WhatsApp Desktop ஆப் ஓப்பன் ஆகும்.

அவ்வளவு தான்!

அவ்வளவு தான்!

உங்களுக்கான சொந்த சாட்-ஐ பயன்படுத்தி உங்களுக்கு நீங்களே வாட்ஸ்அப் மெசேஜ் செய்து கொள்ளலாம். அதன் வழியாக நீங்கள் சேகரித்த எந்தவொரு தகவலையும், எப்போது வேண்டுமானாலும் மிகவும் எளிமையான முறையில் அணுகலாம் !

மெசேஜ் வழியிலான விவரங்களை மட்டுமின்றி, போட்டோ, வீடியோ, லிங்க் வடிவிலான ஆவணங்களையும் கூட உங்களுக்கு நீங்களே ஷேர் செய்து கொள்ளலாம்!

இரண்டாவது வழிமுறை!

இரண்டாவது வழிமுறை!

மேலே பார்த்த wa.me// மெத்தேட் ஆனது அவ்வளவு எளிமையானதொரு வழிமுறையாக இல்லை என்பது போல் தோன்றினால்.. அதை விட ஈஸியான WhatsApp Group மெத்தேட்-ஐ முயற்சி செய்யலாம்.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்.. உங்களையும் சேர்த்து 2 நபர்களை மட்டுமே கொண்ட ஒரு வாட்ஸ்அப் க்ரூப்பை உருவாக்க வேண்டும். பின்னர் இரண்டாவது நபரை க்ரூப்பில் இருந்து நீக்கிவிட்டு நீங்கள் மட்டுமே அந்த க்ரூப்பில் மெம்பராக இருக்க வேண்டும்.

உஷார்! டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் 35 ஆபத்தான ஆப்கள்!உஷார்! டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் 35 ஆபத்தான ஆப்கள்!

அதெப்படி?

அதெப்படி?

- முதலில், உங்கள் மொபைல் போனில் உள்ள WhatsApp-ஐ திறக்கவும்.

- பின்னர் வலதுபுறத்தில் உள்ள த்ரீ டாட் ஐகானை கிளிக் செய்து New Group என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

- அந்த க்ரூபில் ஒரே ஒரு காண்டாக்ட்-ஐ மட்டும் சேர்க்கவும்

- க்ரூப்பை கிரியேட் செய்து முடித்ததும், நீங்கள் சேர்த்த ஒரே ஒரு காண்டாக்ட்-ஐ க்ரூப்பில் இருந்து நீக்கி விடவும்.

- இப்போது அந்த க்ரூப்பில் நீங்கள் மட்டுமே இருப்பீர்கள்; உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்து கொள்ளலாம்!

Best Mobiles in India

English summary
Unknown WhatsApp Tips and Tricks 2022 How to Message Yourself Using Your Own Number

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X