Home
How to

குட்பை ஆதார் அட்டை.. இனி இந்த புது ஆப் தான் எல்லாம்.. மொபைல் நம்பர் ரெடியா வைங்க.. ஆக்டிவேட் செய்வது எப்படி?

யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது, பழைய எம்ஆதார் (mAadhaar) ஆப்பிற்கு பதிலாக ஒரு புத்தம் புதிய ஆதார் மொபைல் ஆப்பை (New Aadhaar Mobile App) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய ஆதார் மொபைல் ஆப் ஆனது, டிபிடிபி (DPDP) என்கிற டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் (Digital Personal Data Protection) மற்றும் தரவு குறைப்பு (Data minimization) ஆகியவற்றின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

குட்பை ஆதார் அட்டை.. இனி இந்த புது ஆப் தான் எல்லாம்!

நீங்கள் ஒரு ஹோட்டலில் தங்குவதாக இருந்தாலும், மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தாலும், அல்லது உங்கள் வயதை சரிபார்ப்பதாக இருந்தாலும், அவசியமான அடையாள விவரங்களை மட்டும் பகிர்வதை உறுதி செய்கிறது. ஆதார் உடன் ரிஜிஸ்டர் செய்த மொபைல் நமபரை வைத்தே புதிய ஆதார் ஆப்பை ஆக்டிவேட் செய்யலாம். அதற்கு முன் இந்த ஆப்பில் உள்ள 7 முக்கியமான விஷயங்களை நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்:

1. தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பகிர்வு: பயனர்கள் இப்போது எந்த ஆதார் விவரங்களை பகிர வேண்டும் என்பதை துல்லியமாகத் தேர்வு செய்யலாம். முழுமையான ஆதார் ப்ரோபைலை காண்பிப்பதற்கு பதிலாக, சரிபார்ப்பு தேவையை பொறுத்து, பெயர், வயது, முகவரி அல்லது புகைப்படம் போன்ற குறிப்பிட்ட தகவல்களை மட்டும் பகிர இந்த புதிய ஆப் அனுமதிக்கிறது.

2. க்யூஆர் குறியீடு அடிப்படையிலான சரிபார்ப்பு: இந்த புதிய ஆதார் ஆப், பாதுகாப்பான க்யூஆர் குறியீடு சரிபார்ப்பை ஆதரிக்கிறது. இது பயனர்கள் தேவையற்ற தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தாமல், தங்கள் அடையாளத்தை டிஜிட்டல் முறையில் நிரூபிக்க உதவுகிறது.

3. முக அங்கீகார ஒருங்கிணைப்பு: இந்த புதிய ஆதார் ஆப்பில் உள்ளமைக்கப்பட்ட முக அங்கீகார அம்சம் ஆனது கூடுதல் பாதுகாப்பு அடுக்கை சேர்க்கிறது. இது பயனர்கள் விரைவான முக ஸ்கேன் மூலம் தங்கள் அடையாளத்தை சரிபார்க்க அனுமதிக்கிறது.

4. மொபைலில் பயோமெட்ரிக் கட்டுப்பாடுகள்: பயனர்கள் கைரேகை, கருவிழி மற்றும் முக அங்கீகாரம் உள்ளிட்ட ஆதார் பயோமெட்ரிக்ஸை, இந்த புதிய ஆதார் ஆப் மூலமாகவே உடனடியாக லாக் அல்லது அன்லாக் செய்யலாம். இது அங்கீகரிக்கப்படாத அணுகலை தடுக்க உதவுகிறது.

5. அங்கீகார வரலாற்றை கண்காணித்தல்: இந்த புதிய ஆப், ஆதார் அங்கீகார செயல்பாடுகளின் விரிவான பதிவை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் ஆதார் சான்றுகள் எப்போது, ​​எங்கே பயன்படுத்தப்பட்டன என்பதை மிகவும் எளிமையாக கண்காணிக்க முடியும்.

6. பல எண்ணிக்கையிலான ப்ரொபைல் மேலாண்மை: குடும்பங்கள் ஒரே டிவைஸில் ஐந்து ஆதார் ப்ரொபைல்கள் வரை நிர்வகிக்கலாம். இது குழந்தைகள், பெற்றோர்கள் அல்லது மூத்த குடிமக்களுக்கான டிஜிட்டல் அடையாள பதிவுகளைக் கையாள்வதை முன்பை விட எளிதாக்குகிறது.

7. எளிதான தகவல் புதுப்பிப்புகள்: இது பயனர்கள் தங்களின் மொபைல் எண் மற்றும் முகவரிக்கான புதுப்பிப்புகளை ஆப் மூலமாகவே கோர உதவுகிறது. இது நேரடி ஆதார் சேவை மையங்களை சார்ந்திருப்பதை குறைக்கிறது. யுஐடிஏஐ (UIDAI) ஆனது எதிர்கால ஆப் அப்டேட்களின் வழியாக கூடுதல் புதுப்பிப்பு சேவைகளை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஆதார் ஆப்பை ஆக்டிவேட் செய்வது எப்படி?
1. ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து அதிகாரப்பூர்வ புதிய ஆதார் ஆப்பை பதிவிறக்கவும்.
2. ஆப்பை திறந்து, உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்ந்தெடுக்கவும்.
3. உங்கள் ஆதார் அக்கவுண்ட் உடன் தொடர்புடைய மொபைல் எண்ணை உள்ளிடவும். ஒடிபி (OTP) மூலம் சரிபார்க்கவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு சரிபார்ப்பிற்காக ஒரு ஒடிபி அனுப்பப்படும்.

4. முக சரிபார்ப்பை (Face Authentication) முடிக்கவும். செட்டப் நடைமுறையின் ஒரு பகுதியாக, முக சரிபார்ப்பை முடிக்குமாறு ஆப் உங்களைக் கேட்கும்.
5. ஆப்பிற்கான ஆறு இலக்க பின் (PIN) நம்பரை உருவாக்கவும். கூடுதல் பாதுகாப்புக்காக, பயனர்கள் பயோமெட்ரிக் அன்லாக் வசதியையும் இயக்கலாம்.

6. ஆதார் விவரங்களை சேர்க்கவும். தேவையான ஆதார் தகவல்களை உள்ளிட்ட பிறகு, ஒடிபி சரிபார்ப்பு செயல்முறையை மீண்டும் ஒருமுறை முடிக்கவும்.
7. இப்போது புதிய ஆதார் ஆப்பை பயன்படுத்தவும். சரிபார்ப்பு முடிந்த பிறகு, அக்கவுண்ட் ஆக்டிவேட் ஆகிவிடும். மேற்குறிப்பிட்ட அனைத்து சேவைகளையும் ஆப் மூலம் அணுக முடியும்.

Best Mobiles in India

English summary
UIDAI New Aadhaar App replaced older mAadhaar How to Setup and Activate Your New Aadhaar Account
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X