Home
How to

பழைய போனினை பாதுகாப்பு கேமரா போன்று பயன்படுத்துவது எப்படி?

வீட்டில் குழந்தைகள் இருப்பின், அவர்களை பாதுகாக்கவோ அல்லது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்ற பட்சத்தில் அதனை கூகுள் ஹோம் ஸ்பீக்கர் போன்றும் பயன்படுத்த முடியும்.

பழைய ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் வீட்டில் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அதனை பல்வேறு விதங்களில் பயன்படுத்த முடியும். பழைய ஸ்மார்ட்போனினை அற்ப விலைக்கு விற்பனை செய்வதோடு, அவற்றை பல்வேறு காரியங்களுக்கு பயன்படுத்தலாம்.

பழைய போனினை பாதுகாப்பு கேமரா போன்று பயன்படுத்துவது எப்படி?

வீட்டில் குழந்தைகள் இருப்பின், அவர்களை பாதுகாக்கவோ அல்லது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்ற பட்சத்தில் அதனை கூகுள் ஹோம் ஸ்பீக்கர் போன்றும் பயன்படுத்த முடியும். எனினும் பழைய ஸ்மார்ட்போன்களை வீட்டை எந்நேரமும் பாதுகாக்கும் வயர்லெஸ் செக்யூரிட்டி கேமரா போன்று பயன்படுத்துவது சிறப்பானதாக இருக்கும்.

உங்களின் பழைய ஸ்மார்ட்போன் ஸ்விட்ச் ஆன் ஆகி, பின்புற கேமரா சீராத வேலை செய்தாலே இதனை செய்து விட முடியும். இதை செட்டப் செய்வது மிகவும் எளிமையான காரியம் என்பதோடு பல சமயங்களில் இலவசமாகவும் செய்யலாம்.

வழிமுறை 1 மொபைல் செக்யூரிட்டி ஆப்

வழிமுறை 1 மொபைல் செக்யூரிட்டி ஆப்

உங்களது மொபைல் போனில் செக்யூரிட்டி கேமரா செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். பெரும்பாலான செயலிதள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பயன்பாடுகளையே வழங்கும். செயலியை செட்டப் செய்ததும் உங்களது வீடு அல்லது மற்ற இடங்களை ஸ்மார்ட்போன் கொண்டு எங்கிருந்தும் கண்காணிக்க முடியும்.

மொபைல் கேமராவை சிசிடிவி போன்று பயன்படுத்த தலைசிறந்த சேவைகளில் ஒன்றாக ஆல்ஃப்ரெட் இருக்கிறது. இதனால் உங்களது பழைய மொபைல் போன் ஆன்ட்ராய்டு அல்லது ஐபோன் என எதுவானாலும் இந்த பணியை சிறப்பாக மேற்கொள்ள முடியும்.

 துவக்கத்தில் செய்ய வேண்டியவை:

துவக்கத்தில் செய்ய வேண்டியவை:

முதலில் ஆல்ஃப்ரெட் (Alfred) உங்களது பழைய மொபைல் போன் மற்றும் புதிய ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்களில் டவுன்லோடு செய்ய வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போனில் துவக்கத்தை ஸ்வைப் செய்து துவங்கலாம். இனி வியூவர் ஆப்ஷனை க்ளிக் செய்து அடுத்த ஆப்ஷனுக்கு செல்லவும்.

சைன்-இன் பக்கத்திற்கு சென்றதும், கூகுள் கணக்கு மூலம் லாக் இன் செய்ய வேண்டும். பழைய மொபைல் போனிலும் இதே வழிமுறைகளை பின்பற்றவும், இங்கு வியூவர் ஆப்ஷனுக்கு பதில் கேமரா ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இங்கும் உங்களது கூகுள் அக்கவுன்ட்-இல் லாக் இன் செய்வது அவசியமாகும்.

இரண்டு போன்களிலும் ஆல்ஃப்ரெட் மூலம் சைன் இன் செய்ததும், செட்டப் செய்தாகிவிட்டது என்றே கருதலாம். ஆல்ஃப்ரெட் செயலியில் அம்சங்களை மிகவும் எளிமையாக பயன்படுத்தக்கூடியதாகவும், சில செட்டிங் மூலம் இயக்கக்கூடியதாகவும் இருக்கும்.

ஐஓஎஸ் தளத்தில் மோஷன் டிடெக்ஷன் ஆப்ஷனை மட்டுமே செயல்படுத்த முடியும், இதில் பிரைமரி மற்றும் முன்பக்க கேமராக்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இதேபோன்று ஆடியோவை எனேபிள் அல்லது டிசேபிள் செய்ய முடியும்.

ஆன்ட்ராய்டு இயங்குதளத்திலும் இந்த அம்சங்கள் சீராக வேலை செய்யும். ஒருவேலை ஸ்மார்ட்போன் ரீபூட் ஆனால், ஆல்ஃப்ரெட் செயலியை மீண்டும் திறந்து லாக் இன் செய்து, பாஸ்கோடை பதிவிட வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போனில் நோட்டிஃபிகேஷன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்வது, கேமரா அல்லது வியூவர் பெயரை பதிவு செய்வது , மற்றவர்களை உங்களது நம்பத்தகுந்த வட்டாரத்தில் இணைத்து கொள்வது (இதன் மூலம் அவர்களும் உங்களது வீடியோ ஃபீட்களை பார்க்க செய்ய முடியும்), கேமராவை அகற்றுவது, எத்தனை முறை கேமரா துண்டிக்கப்பட்டது, மோஷன் டிடெக்ஷன் சென்சிடிவிட்டியை எனேபிள் செய்வது போன்ற அம்சங்களை செட்டப் செய்யலாம்.

பழைய போன்களை கேமராவாக பயன்படுத்த ஆல்ஃப்ரெட் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஐஓஎஸ் சாதனத்தில் மட்டும் பயன்படுத்த மெனிதிங் சிறப்பான சேவையை அனைவரும் செலுத்தக்கூடிய கட்டணத்தில் பல்வேறு அம்சங்களுடன் கிடைக்கிறது. இதே போன்று ஆன்ட்ராய்டு தளத்தில் கிடைக்கும் பிரபல செயலிகளில் ஒன்றாக ஐபி வெப்கேம் (IP Webcam) இருக்கிறது.

வழிமுறை 2: கேமராவை எங்கு பொருத்துவது

வழிமுறை 2: கேமராவை எங்கு பொருத்துவது

ஸ்மார்ட்போன்களில் செட்டப் செய்து முடித்ததும், கேமராவை பொருத்த வேண்டும். வீட்டின் நுழைவு வாயில், பின்புறம் மற்றும் உங்களது விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும் அறைகளில் கேமராவை பொருத்தலாம். ஐபி கேமராவினை குழந்தையை பராமரிக்கவும் பயன்படுத்தலாம்.

அதிக மொபைல் போன்கள் இருப்பின் கூடுதல் பாதுகாப்புக்காக பல்வேறு கேமராக்களை பொருத்த முடியும்.

How to check PF Balance in online (TAMIL)
 வழிமுறை 3: கேமரா மவுன்ட் மற்றும் சார்ஜிங் வசதி

வழிமுறை 3: கேமரா மவுன்ட் மற்றும் சார்ஜிங் வசதி

கேமராவை பொருத்துவதற்கு சிறிய ஸ்மார்ட்போன் டிரைபாட் அல்லது சக்ஷன் கப் கார் மவுன்ட் போன்றவை சிறப்பாக வேலை செய்யும். ஸ்மார்ட்போன் கேமரா ஒளிபரப்பும் அளவை பரவலாக்க கேமராவுடன் வைடு ஆங்கிள் லென்ஸ் போன்றவற்றை சேர்க்கலாம்.

வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய அதிக மின்சாரம் தேவைப்படும் என்பதால், ஸ்மார்ட்போன்களுக்கு எந்நேரமும் சார்ஜ் செய்யும் வசதி ஏதுவான இடத்திலோ அல்லது கேமராவை பொருத்தும் இடத்தில் சார்ஜிங் செய்ய வசதியை முன்கூட்டியே தயார் செய்வது நல்லது.

Best Mobiles in India

English summary
Turn your old phone into a home security camera you can watch from anywhere; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X