அட்றா சக்கை! WhatsApp செட்டிங்ஸ்-ல இப்படி ஒரு சீக்ரெட் ஆப்ஷன் இருக்கோ! இனி குவாலிட்டி பிச்சுக்கும்!

|

வாட்ஸ்அப்பை, மேலோட்டமாக பயன்படுத்தும் பலருக்கும் தெரியாத ஒரு சீக்ரெட் ஆப்ஷனை பற்றித்தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.

அதென்ன ஆப்ஷன்? குவாலிட்டிக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அதை 'ஆன்' செய்வது எப்படி? அதை 'ஆன்' செய்யாவிட்டால் WhatsApp-ல் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

அப்போ வேற.. இப்போ வேற!

அப்போ வேற.. இப்போ வேற!

ஒரு காலத்தில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் மட்டுமே வாழ்த்து மெசேஜ்கள் அங்குமிங்கும் பறக்கும்.

ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்ல.. வாட்ஸ்அப் வழியாக குறைந்தது ஒரு 30 மெசேஜை அனுப்பாதவர்களும், 10 மெசேஜ்களை பெறாதவர்களும் மிக மிக குறைவு!

கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!

எரிச்சலூட்டும் ஒரு சிக்கல்!

எரிச்சலூட்டும் ஒரு சிக்கல்!

இந்தியாவில் மட்டுமே மொத்தம் 390 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்கள் உள்ளனர். அவர்கள் தினந்தோறும் லட்சக்கணக்கான டெக்ஸ்ட் மெசேஜ்களையும், போட்டோக்களையும், வீடியோக்களையும் ஷேர் செய்த வண்ணம் உள்ளனர்.

ஆனாலும் கூட, WhatsApp வழியாக போட்டோக்களை அனுப்பும்போது மட்டும் நம்மில் பெரும்பாலான மக்கள் ஒரு எரிச்சலூட்டும் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

அதென்ன சிக்கல்?

அதென்ன சிக்கல்?

நாம் இங்கே பேசும் சிக்கல் - வாட்ஸ்அப்பில் 'கம்ப்ரெஸ்டு' ஆகும் போட்டோக்கள் (Compressed
photos) பற்றியே ஆகும்!

உங்களுக்கே தெரியும்! நீங்கள் எவ்வளவு குவாலிட்டி ஆன போட்டோவை அனுப்பினாலும் கூட, அது மட்டமான தரத்தில் தான் சென்றடையும்!

அதே சமயம் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? வாட்ஸ்அப் செட்டிங்ஸ்-இல் உள்ள ஒரு சீக்ரெட் ஆப்ஷனை ஆன் செய்வதன் வழியாக "இந்த சிக்கலை" சரி செய்ய முடியும் என்று?

ஓட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா.. உங்கள் ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி?ஓட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா.. உங்கள் ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி?

அதென்ன சீக்ரெட் ஆப்ஷன்?

அதென்ன சீக்ரெட் ஆப்ஷன்?

கடந்த பல மாதங்களாக, மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப்பில் சைலன்ட் ஆக பல மேம்பாடுகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.

அதிலொரு பகுதியாக - வாட்ஸ்அப் வழியாக கம்ப்ரெஸ்டு ஆகாமல் போட்டோக்களை அனுப்பும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது!

அதை நீங்கள் 'ஆன்' செய்யும் பட்சத்தில், வாட்ஸ்அப் வழியாக நீங்கள் ஷேர் செய்யும் எல்லா போட்டோக்களுமே தரமான குவாலிட்டியில் சென்றடையும்!

அந்த

அந்த "சீக்ரெட் ஆப்ஷனை" ஆன் செய்வது எப்படி?

- உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறக்கவும்

- அதில் உள்ள செட்டிங்ஸ் (Settings) விருப்பத்திற்கு செல்லவும்

- பின்னர் ​​ஸ்டோரேஜ் மற்றும் டேட்டா (Storage and data) என்கிற விருப்பத்திற்கு செல்லவும்

- அதனுள் மீடியா அப்லோட் குவாலிட்டி (Media upload quality) என்கிற விருப்பத்தை கண்டுபிடிக்கவும்.

மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த "பொருள்" வெளிப்பட்டது!

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- இப்போது போட்டோ அப்லோட் குவாலிட்டி (Photo upload quality) ஆனது 'ஆட்டோ' (Auto) என்கிற விருப்பத்தில் இருப்பதை பார்ப்பீர்கள்.

- அதை பெஸ்ட் குவாலிட்டி (Best Quality) ஆக மாற்றவும். அவ்வளவு தான்!

அதே இடத்தில் மிகவும் குறைந்த தரத்தில் புகைப்படங்களை (Low Quality) அனுப்பும் விருப்பமும் உங்களுக்கு அணுக கிடைக்கும்.

உங்களுக்கு தேவையான எந்தவொரு விருப்பத்தையும் நீங்கள் தேர்வு செய்யலாம். அதே போல 'ஆட்டோ' என்கிற ஆப்ஷனே உங்களுக்கு போதுமானதாக இருந்தால்.. அதை அப்படியே விட்டுவிடவும்.

ஹை-குவாலிட்டியில் போட்டோ அனுப்ப இன்னொரு வழியும் உள்ளது!

ஹை-குவாலிட்டியில் போட்டோ அனுப்ப இன்னொரு வழியும் உள்ளது!

ஒரு போட்டோவை அதன் சொந்த குவாலிட்டியில், சொந்த ஃபார்மெட்டில் அனுப்புவதற்கு இன்னொரு வழியும் உள்ளது.

வாட்ஸ்அப் வழியாக ஒரு குறிப்பிட்ட போட்டோவை ஒரு டாக்குமெண்ட் ஆக (Document) அனுப்பினால் அதன் தரம் சற்றும் குறையாது!

அப்படியாக அனுப்பப்படும் டாக்குமெண்ட்கள் ஆனது பவர்பாயிண்ட் முதல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்!

Best Mobiles in India

English summary
Turn on this secret option in WhatsApp settings which allows you to send high quality photos

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X