வீடியோ காலர்ஐடி, கால் ரெக்கார்டிங், கோஸ்ட் காலிங் உட்பட பல அம்சம்- உடனே அப்டேட் செய்யவும்:ட்ரூகாலர் வெர்ஷன் 12

|

ட்ரூகாலர் பயன்பாடு குறித்து அனைவரும் அறிந்ததே. இந்த பயன்பாடானது தொலைபேசியில் அழைக்கும் நபரை அடையாளம் காண பெரிதளவு உதவியாக இருக்கிறது. ட்ரூகாலர் செயலி பலராலும் பயன்படுத்தப்படும் முக்கியமான செயலிகளில் ஒன்றாகும். ட்ரூகாலர் பயன்பாடு வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து தொடர்ந்து புதுப்பித்து வருகிறது. அதன்படி தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் ட்ரூகாலர் பதிப்பு 12 கிடைக்கிறது. ட்ரூகாலர்-ல் புதிய இணைப்பு குறித்து பார்க்கையில் வீடியோ ஐடி, குளோஸ்ட் கால், அழைப்புப் பதிவு உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டு வருகிறது. ட்ரூகாலர் புதுப்பிப்பில் கிடைக்கும் அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ட்ரூகாலர் பதிப்பு 12

ட்ரூகாலர் பதிப்பு 12

ட்ரூகாலர் பதிப்பு 12 பயன்பாட்டில் பல புதிய அம்சங்கள் மற்றும் மறுவடிவமைப்புடன் வருகிறது. புதுப்பிக்கப்பட்ட பயன்பாட்டில் அழைப்பு அலெர்ட், அழைப்பு காரணம், முழு டிஸ்ப்ளே அழைப்பாளர் ஐடி, இன்பாக்ஸ் க்ளீனர், ஸ்மார்ட் எஸ்எம்எஸ் பாதுகாப்பு காப்புப்பிரதி, டயலர் மற்றும் 46 மொழிகளுக்கான ஆதரவுடன் உள்ளிட்ட பல அம்சங்களோடு வருகிறது. அதேபோல் கூடுதலாக புதுப்பித்தல் வீடியோ அழைப்பாளர் ஐடி, அழைப்புப் பதிவு, கோஸ்ட் அழைப்பு மற்றும் அழைப்பு அறிவிப்பு உள்ளிட்டவை அடங்கும்.

வீடியோ அழைப்பாளர் ஐடி

வீடியோ அழைப்பாளர் ஐடி

ட்ரூகாலர் பதிவ்வு 12-ல் உள்ள வீடியோ அழைப்பாளர் ஐடி ஆனது பெயர் குறிப்பிடுவது போல் நீங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைக்கும் போது தாமாக இயங்கும் ஒரு குறுகிய வீடியோவை பயனர்களை இயக்க அனுமதிக்கும். பயனர் உள்ளமைக்கப்பட்ட வீடியோ டெம்ப்ளேட்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். ட்ரூகாலர் அழைப்பு பதிவு அம்சம் ஆனது அனைவருக்கும் அணுகக்கூடிய வகையில் கிடைக்கிறது.

ட்ரூகாலரில் அழைப்பு பதிவை எவ்வாறு இயக்குவது?

ட்ரூகாலரில் அழைப்பு பதிவை எவ்வாறு இயக்குவது?

ட்ரூகாலர் பயன்பாட்டில் உள்ள கால் ரெக்கார்டிங் அம்சம் ஆனது முதலில் ப்ரீமியம் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆண்ட்ராய்டு போனில் ட்ரூகாலர் பயன்படுத்தும் அனைவரும் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம். அதாவது தங்கள் தொலைபேசியில் நம்பர் சேமிக்கப்பட்டுள்ளதா என்பதை பொருட்படுத்தாமல் அனைத்து உள்வரும் மற்றும் வெளிச் செல்லும் அனைத்து அழைப்புகளையும் பதிவு செய்ய அனுமதிக்கிறது.

செய்தியிடல் சேவையை பயன்படுத்தி பதிவுகளை எளிதாக செய்யலாம்

செய்தியிடல் சேவையை பயன்படுத்தி பதிவுகளை எளிதாக செய்யலாம்

அதேபோல் ட்ரூகாலர் பயன்பாட்டில் ஃபைல் உலாவியை பயன்படுத்தி பதிவுகளை கேட்கலாம். அதேபோல் மெயில் ஐடி, ப்ளூடூத் மற்றும் ஏதேனும் செய்தியிடல் சேவையை பயன்படுத்தி பதிவுகளை எளிதாக பெறலாம். இது விருப்பமான சிறந்த அம்சமாகும். இது விருப்பத்தேற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை முழுமையாக பார்க்கலாம்.

இயக்குவதற்கான வழிமுறைகள்

இயக்குவதற்கான வழிமுறைகள்

ஸ்டெப் 1: ஆரம்பத்தில் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் அமைப்புகள் பயன்பாட்டை ஓபன் செய்து அணுகல் தன்மை பெறவும்.

ஸ்டெப் 2: பின் ட்ரூகாலர் அழைப்புப் பதிவு என்பதை தேர்ந்தெடுத்து மாற்று என்பதை இயக்க வேண்டும்

ஸ்டெப் 3: இந்த ஸ்டெப்கள் முடிந்ததும் நீங்கள் பதிலளித்ததும் அல்லது அழைப்பை மேற்கொண்டதும் தற்போது ட்ரூகாலரில் அழைப்புகளை பதிவு செய்யத் தொடங்கலாம்.

ஸ்டெப் 4: முன்பே குறிப்பிட்டது போல், ட்ரூகாலர் கால் ரெக்கார்டிங் ஃபைல்கள் சேமிக்கப்படும். நீங்கள் அழைப்பைப் பதிவு செய்கிறீர்களா என்பது மற்றவருக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நீங்கள் மேற்கொள்ளும் அழைப்பை பிறர் பதிவு செய்கிறார்களா என்பதும் தெரியாது.

 ட்ரூகாலர் வெர்ஷன் 12 புதிய அம்சங்கள்

ட்ரூகாலர் வெர்ஷன் 12 புதிய அம்சங்கள்

ட்ரூகாலர் வெர்ஷன் 12 இரண்டு புதிய புதுப்பிப்புகளை கொண்டு வருகிறது. இதில் கோஸ்ட் கால் மற்றும் கால் அறிவிப்பு ஆகியவை அடங்கும். தற்போது கோஸ்ட் கால் அம்சம் பயனர் எந்த பெயரையும், எண் மற்றும் புகைப்படத்தை அந்த நபரிடம் இருந்து அழைப்பு போல் தோன்று வகையில் அமைக்க அனுமதிக்கிறது. இது அழைப்பை பெறுவது போல் பாசாங்கு செய்யும் சூழலை உருவாக்க மிகவும் எளிதானது. ஆனால் இந்த அம்சமானது ப்ரீமியம் மற்றும் கோல்ட் உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அழைப்பு அறிவிப்பு அம்சம்

அழைப்பு அறிவிப்பு அம்சம்

அதேபோல் ட்ரூகாலரில் உள்ள அழைப்பு அறிவிப்பு அம்சம் ஆனது உள்வரும் தொலைபேசி அழைப்பாளர்களின் ஐடியை சத்தமாக வாசிக்கும். இது சேமிக்கப்பட்ட தொடர்புகளுக்கும், சாதாரண குரல் அழைப்புகள் மற்றும் ட்ரூகாலர் எச்டி குரல் அழைப்புகள் இரண்டிலும் அடையாளம் காணப்படும் எண்களை மட்டுமே தெரிவிக்கும். அதேபோல் இந்த அம்சமும் ப்ரீமியம் மற்றும் கோல்ட் உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிளே ஸ்டோரில் சமீபத்திய வெர்ஷனை அப்டேட் செய்யலாம்

கூகுள் பிளே ஸ்டோரில் சமீபத்திய வெர்ஷனை அப்டேட் செய்யலாம்

குறிப்பாக இந்த புதிய அம்சங்களை பெற விரும்பினால் ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து சமீபத்திய வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும். சமீபத்தில் க்ரூப் வாய்ஸ் காலிங், இன்பாக்ஸ் கிளீனர், ஸ்மார்ட் எஸ்எம்எஸ் உள்ளிட்ட அம்சங்களை நிறுவனம் கொண்டு வந்தது. க்ரூப் வாய்ஸ் காலின் போது, க்ரூப்பில் பயனருக்கு தெரியாமல் ஏதேனும் ஸ்பேம் பயனர்கள் சேர்கப்பட்டிருந்தால் உடனே அவர்களை ட்ரூகாலர் அடையாளம் காட்டும் என்று கூறப்படுகிறது. பின்பு பயனர்கள் புதிய பங்கேற்பாளர்களை தங்களது போன் காண்டாக்டில் சேர்க்காமலேயே வாய்ஸ் காலின்போது ஆட் செய்ய முடியும்.

இன்பாக்ஸ் கிளீனர் அம்சம்

இன்பாக்ஸ் கிளீனர் அம்சம்

இந்த அம்சம் பயனர் மற்றொரு அழைப்பில் அல்லது ஆஃப்லைனில் பிஸியாக இருக்கிறாரா என்பதை வெளிப்படுத்தும். பின்பு க்ரூப் வாய்ஸ் காலின் முக்கிய அம்சம் என்னவென்றால் பங்கேற்பாளரின் நகரத்தை பிரதிபலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரூகாலர் செயலியில் வந்துள்ள இன்பாக்ஸ் கிளீனர் அம்சம் ஆனது தேவையற்ற மற்றும் பழைய மெசேஜ்களை சில நிமிடங்களில் அழிக்க உதவும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த அம்சம் மெனுவில் எத்தனை பழைய ஓடிபி-கள் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்கள் இருக்கிறது என்பதை தெளிவாக காண்பிக்கும். பின்பு கிளீன் ஆப் பட்டனை கிளிக் செய்தால் உங்கள் முக்கியமான தரவைப் பாதிக்காமல் பழைய எஸ்எம்எஸ்களை விரைவாக அகற்றும்.

Best Mobiles in India

English summary
Truecaller Version 12 Gets Video Caller ID, Ghost Calling, Call Recording Features: How to Activate

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X