அடிக்கடி Truecaller ஆப் வழியா போன் பேசுவீங்களா? ஜாக்கிரதை.. சைலன்ட் ஆக அறிமுகமான Recording அம்சம்!
உங்கள் மொபைல் போனில் ட்ரூகாலர் (Truecaller) ஆப் இருக்கிறதா? அதை உங்கள் போனிற்கான டீஃபால்ட் காலர் (Default Caller) ஆக செட் செய்து உள்ளீர்களா? அதாவது உங்களுக்கு வரும் அழைப்புகள் எல்லாமே ட்ரூகாலர் வழியாகத்தான் வருமா? ஆமென்றால் உடன் அலெர்ட் ஆகிக்கொள்ளுங்கள்!
ஏனென்றால், ட்ரூகாலர் நிறுவனமானது அதன் ஆப்பில் கால் ரெக்கார்டிங் (Call Recoding) ஆதரவை சத்தமின்றி சேர்த்துள்ளது. முன்னதாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கிடைத்தது, ஒருகட்டத்தில் பாதுகாப்பு (Security) காரணங்களுக்காக இந்த அம்சம் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ட்ரூகாலர் ஆப்பிற்கு வந்துள்ளது.

அதாவது நீங்கள் ஐபோன் வைத்து இருந்தாலும் சரி அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்து இருந்தாலும் சரி, உங்களிடம் ட்ரூகாலர் ஆப் இருந்தால், மற்றவர்களுடன் பேசும் போது அதை ரெக்கார்ட் செய்ய முடியும், அதேபோல மற்றவர்களாலும் நீங்கள் பேசுவதை ரெக்கார்ட் செய்ய முடியும்.
ட்ரூகாலரில் கால் ரெக்கார்டிங் செய்வது எப்படி? முன்னரே குறிப்பிடப்படி, இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிலுமே அணுக கிடைக்கும். நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால், உங்கள் மொபைல் போனில் உள்ள ட்ரூகாலர் ஆப்பிற்கு சென்று டயலரை அணுகும் போதே அங்கே கால் ரெக்கார்டிங் பட்டன் தெரியும்.
ஒருவேளை நீங்கள் ஐஓஎஸ் பயனராக இருந்தால், அதாவது ஐபோன் வைத்து இருந்தால் - ஆப்பிளின் சில கட்டுப்பாடுகள் காரணமாக - இதே அம்சம் சற்றே வித்தியாசமாக அணுக கிடைக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ட்ரூகாலர் ஆப்பிற்கு சென்று 'ரெக்கார்டிங் லைன்' நம்பரை டயல் செய்து, பின்னர் அதில் ஒரு கால்-ஐ ஆட் செய்து, இரண்டையும் ஒன்றிணைக்க (Merge) செய்ய வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம், ஐபோன் வழியாக மேற்கொள்ளும் அழைப்புகளையும் கூட உங்களால் ரெக்கார்ட் செய்ய முடியும். குறிப்பிட்ட அழைப்பை பேசி முடிந்ததும், ரெக்கார்ட் செய்யப்பட்ட ஆடியோவானது ஒரு ஃபைல் ஆக உங்களுக்கு கிடைக்கும். வெளிச்செல்லும் அழைப்புகளில் (Outgoing Calls) மட்டுமே உள்வரும் அழைப்புகளுக்கும் (Incoming Calls) இதே செயல்முறை தான்.
இருப்பினும், இந்த கால் ரெக்கார்டிங் அம்சமானது ட்ரூகாலர் ஆப்பின் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு (Premium Subscribers) மட்டுமே அணுகக்கூடியதாக இருக்கும் என்று ட்ரூகாலர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனுடன் சேர்த்து அழைப்புகளின் டிரான்ஸ்கிரிப்ட்களை (Transcripts) உருவாக்கும் ஏஐ ஆதரவையும் (AI Support) அவர்கள் பெறுவார்கள்.
அதுமட்டுமின்றி மேற்கண்ட அம்சங்கள் முதலில் அமெரிக்காவில் உள்ள ட்ரூகாலர் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு வெளியிடப்படும், பின்னர் கூடிய விரைவில் இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும். நினைவூட்டும் வண்ணம், ட்ரூகாலரின் பிரீமியம் சேவையானது இந்தியாவில் மாதத்திற்கு ரூ.79 மற்றும் ஆண்டுக்கு ரூ.549 க்கு அணுக கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








