Home
How to

TrueCaller App-ல் புது ரூல்.. செப்.30 க்கு பிறகு இதை செய்ய முடியாது!

தெரியாத எண்களில் இருந்து அல்லது உங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை அடையாளம் காண உதவும் ட்ரூகாலர் ஆப்பில் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் முக்கியமான மாற்றம் ஒன்று அமலுக்கு வரவுள்ளது.

அதென்ன மாற்றம்? 2025 செப்டம்பர் 30 ஆம் முதல் ட்ரூகலர் ஆப்பில் உள்ள கால் ரெக்கார்டிங் அம்சத்தை ஆதரிக்காது, அதாவது உங்களுக்கு வரும் அழைப்புகளை உங்களால் ரெக்கார்ட் செய்ய முடியாது என்று அறிவிக்கப்ட்டுள்ளது. ஆனால் இந்த மாற்றம் ஐஓஎஸ்-க்கு மட்டுமே வருகிறது. அதாவது ஐபோன்களுக்கு மட்டுமே வருகிறது.

TrueCaller App-ல் புது ரூல்.. செப்.30 க்கு பிறகு இதை செய்ய முடியாது!

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) தளங்களில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த அம்சம் தற்போது ஐஓஎஸ் டிவைஸ்களில் இருந்து அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. டெக் க்ரஞ்ச் (TechCrunch) அறிக்கையின்படி, செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின்னர் ஐபோன்களில் உள்ள ட்ரூகாலர் ஆப்பில் உள்ள கால் ரெக்கார்டிங் டூல் அணுக முடியாததாகிவிடும்.

மேலும் ட்ரூகாலர் ஆப்பில் ஏற்கனவே சேமிக்கப்பட்ட ரெக்கார்ட்களை வைத்திருக்கும் ஐஓஎஸ் பயனர்களும் குறிப்பிட்ட தேதிக்கு பிறகு (அதாவது செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு) அவைகளை அணுக முடியாது. ஆக பயனர்கள், ட்ரூகாலர் ஆப்பில் தாங்கள் சேமித்த ரெக்கார்ட்களை பதிவிறக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.

கால் ரெக்கார்டிங்களை மெசேஜ் தளங்கள் வழியாக அவற்றை பகிறும்படியம் அல்லது ஐகிளவுட்-க்கு டிரான்ஸ்பர் செய்யுமாறும் ட்ரூகாலர் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. ட்ரூகாலர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை கால்களை பதிவு செய்யும் திறனை மட்டுமல்ல, ஆப்பிற்குள் சேமிக்கப்பட்ட பதிவுகளுக்கான அணுகலையும் பாதிக்கிறது.

ஒருவேளை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள், ஐஓஎஸ் பயனர்கள் தங்கள் ஐபோனில் உள்ள கால் ரெக்கார்ட்களை பேக்கப் எடுக்காவிட்டால், செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின்னர் அவைகளை மீட்டெடுக்கவோ அல்லது கேட்கவோ முடியாது. ஆக தேவை உள்ளவர்கள் உடனே பேக்கப் செயல்பாட்டை தொடங்கவும்.

ஐபோனில் உள்ள ட்ரூகாலர் ஆப்பில் உள்ள கால் ரெக்காடிங்களை பேக்கப் எடுப்பது எப்படி? ஏற்கனவே உள்ள கால் ரெக்கார்டிங்களை சேமிக்க, ட்ரூகாலர் ஆப்பை திறந்து ரெக்கார்ட் டேப்பிற்கு செல்லவும். பின்னர் செட்டிங்ஸ் ஐகானை கிளிக் செய்யவும். ஸ்டோரேஜ் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ஐகிளவுட் ஸ்டோரேஜை தேர்ந்தெடுக்கவும்.

ஒருவேளை ஜகிளவுட் ஆப்ஷன் சாம்பல் நிறத்தில் தோன்றினால்: ஐபோன் செட்டிங்ஸ் க்கு சென்று > உங்கள் ஆப்பிள் ஐடி ப்ரொபைல் ஐ கிளிக் செய்யவும். ஐகிளவுட் > சேவ்டு இன் ஐகிளவுட் என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும் > ட்ரூகாலர் டாக்கில் ஐ எனேபிள் செய்யவும்.

ஒரு குறிப்பிட்ட ரெக்கார்ட்டை சேமிக்க: ட்ரூகாலர் ஆப்பில் உள்ள ரெக்கார்ட் டேப் ஐ திறக்கவும். நீங்கள் சேமிக்க அல்லது பகிர விரும்பும் ரெக்கார்ட் ஐ இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும். ஷேர் பட்டனை கிளிக் செய்யவும், பின்னர் அதை போல்டர் ஆப்பில் சேமிக்கவும் அல்லது இமெயில் அல்லது மெசேஜிங் தளங்களின் வழியாக அனுப்பவும்.

ஏன் இந்த திடீர் நடவடிக்கை? ட்ரூகாலர் ஆப்பின் ஐஓஎஸ்-க்கான தயாரிப்பு இயக்குனர் ஆன நகுல் கப்ராவின் (Nakul Kabra, Product Director for iOS at Truecaller) கூற்றுப்படி, இந்த நடவடிக்கை ட்ரூகாலர் ஆப்பின் ஸ்பேம் பாதுகாப்பு டூல்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது.

சரி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான ட்ரூகாலர் கால் ரெக்கார்டிங் அம்சம் என்ன ஆகும்? அது எப்போதும் போல செயல்படும். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான கால் ரெக்கார்டிங் அம்சம் வழக்கம் போல ட்ரூகாலர் ஆப்பில் உள்ள பில்ட்-இன் டயலர் வழியாக ஆதரிக்கப்படும். ஐஓஎஸ்-க்கு கொண்டுவரவுள்ள மாற்றம் ஆண்ட்ராய்டுக்கு வருமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை!

More from GizBot

Best Mobiles in India

English summary
Truecaller App to Stop Supporting Call Record Feature On iOS iPhones From Sep 30 How to do Backup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X