2018: வியக்கவைக்கும் டாப் 5 டெக்னாலஜி.!

பைலட் பிக்ஷன் எரேசபிள் பென் பொறுத்தவரை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும், மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த பைலட் பிக்ஷன் எரேசபிள் பென்.

By Prakash
|

இப்போது வரும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கின்றன. மேலும் மக்களின் வேலையை வெகுவாக குறைக்கும் தன்மைக் கொண்ட சாதனங்களின் விலையைப் பொறுத்தவரை சற்று உயர்வாக இருக்கிறது, ஆனாலும் இந்த வருட துவகத்தில் பல்வேறு தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பியுபி பாக்கெட் ஸ்கேனர், பைலட் பிக்ஷன் எரேசபிள் பென்,பொலராய்டு ஜிப் மொபைல் பிரிண்ட்டர், வெர்டிக்கல் மவுஸ் போன்ற சாதனங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது.

பைலட் பிக்ஷன் எரேசபிள் பென் பொறுத்தவரை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும், மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த பைலட் பிக்ஷன் எரேசபிள் பென். மேலும் இந்த வருடம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பியுபி பாக்கெட் ஸ்கேனர்:

பியுபி பாக்கெட் ஸ்கேனர்:

டாக்குமென்ட், சான்றிதழ் போன்றவற்றை ஸ்கேன் செய்வதற்கு பல்வேறு நிறுவனங்களின் பெரிய ஸ்கேனர் மாடலை உபயோகம் செய்கிறோம்,
ஆனால் இந்த பியுபி பாக்கெட் ஸ்கேனர் பொறுத்தவரை வெறும் 5.3-இன்ச் அளவைக் கொண்டுள்ளது, இதனை பாக்கெட்டில் வைத்து
எங்கும் கொண்டு செல்ல முடியும். இந்த சாதனத்தைப் பொறுத்தவரை ஒரு கிளிக் செய்தால் டாக்குமென்ட், சான்றிதழ் போன்ற அனைத்தையும்
மிக எளிமையாக ஸ்கேன் செய்ய முடியும். மேலும் இவற்றில் வைஃபை ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இவற்றில் ஸ்கேன் செய்த பிறகு மொபைல் மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களில் பரிமாற்றம் செய்ய முடியும். இவற்றின் விலை மதிப்பு169 டாலர்கள், இந்திய விலை மதிப்பில் ரூ.10,800-ஆக உள்ளது.

பைலட் பிக்ஷன் எரேசபிள் பென்:

பைலட் பிக்ஷன் எரேசபிள் பென்:

பைலட் பிக்ஷன் எரேசபிள் பென் பொறுத்தவரை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும், மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை
கொண்டுள்ளது இந்த பைலட் பிக்ஷன் எரேசபிள் பென். இந்த சாதனம் பொறுத்தவரை புத்தகத்தில் பிழை திருத்தி எழுத உதவுகிறது. இந்த சாதனத்தின் பின்புறம் 'மை" அழிக்ககூடிய டிப் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பேக்கேஜ்-ல் 7 பேனாக்கள் இடம்பெற்றுள்ளது, இவற்றின்
விலை மதிப்பு 10டாலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்திய விலை மதிப்பில் ரூ.640-ஆக உள்ளது.

பொலராய்டு ஜிப் மொபைல் பிரிண்ட்டர்:

பொலராய்டு ஜிப் மொபைல் பிரிண்ட்டர்:

பொலராய்டு ஜிப் மொபைல் பிரிண்ட்டர் பொறுத்தவரை நீங்கள் மொபைல் சாதனங்களில் எடுக்கக் கூடிய புகைப்படங்களை 0.5 வினாடிகளில் பிரிண்ட் எடுக்க முடியும். மற்ற பிரிண்ட்டர் சாதனங்களில் 'மை" தேவைப்படும், ஆனால் இந்த சாதனத்தில் ஜிங்க் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த பொலராய்டு ஜிப் மொபைல் பிரிண்ட்டர். இவற்றின் விலை மதிப்பு ரூ.10,000-ஆக உள்ளது.

வெர்டிக்கல் மவுஸ்:

வெர்டிக்கல் மவுஸ்:

வெர்டிக்கல் மவுஸ் தொழில்நுட்பம் பொறுத்தவரை இரண்டு வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது, இருந்தபோதிலும் அதிகமாய் இந்த சாதனத்தை
மக்கள் பயன்படுத்துவது கிடையாது. சாதரன மவுஸ்-ஐ அதிக நேரம் பயன்படுத்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் நிலைமை உள்ளது, ஆனால் வெர்டிக்கல் மவுஸ்-ஐ பயன்படுத்தினால் எவ்வித பாதிப்பும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிறுவனங்கள் இந்த வெர்டிக்கல் மவுஸ்-ஐ தயார் செய்து விற்பனை செய்கின்றன.

சாம்சங் பேட்டரி:

சாம்சங் பேட்டரி:

சாம்சங் நிறுவனம் கூடிய விரைவில் புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் பேட்டரியை தயாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த கூடிய விரைவில் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தும் பேட்டரியைப் பொறுத்தவரை 5மடங்கு பாஸ்ட் சார்ஜ் தன்மையைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் வந்தால் வெறும் 10நிமிடங்களில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யமுடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Top 5 New Technology that is very useful in 2018 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X