Home
How to

Aadhaar: நாளை கடைசி.. இலவசமாக அப்டேட் செய்வது எப்படி? இதோ வழிமுறைகள்..

ஆதார் அட்டை(Aadhaar card) தான் இந்தியர்களின் மிக முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். அதுவும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் சேவைகளை பெறுவதற்கு இந்த ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதாரில் பெயர், முகவரி உள்ளிட்ட சில விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.

இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) மூலம் வழங்கப்படுகிறது ஆதார் கார்டு. குறிப்பாக நமது ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் எப்போதுமே சரியாக வைத்திருக்க வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒருவேளை ஆதார் அட்டையில் எதாவது பிழை இருந்தால் நமக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றும் உதவிகள் கூட கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே ஆதார் அட்டையில் அனைத்து விவரங்களும் சரியாக இருப்பது நல்லது.

Aadhaar: நாளை கடைசி.. இலவசமாக அப்டேட் செய்வது எப்படி? இதோ வழிமுறைகள்!

அதேபோல் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) 10 ஆண்டுகள் பழமையான ஆதாரில் உள்ள விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. அதன்படி ஆதார் அட்டையில் உள்ள நம்முடைய கருவிழி, கைரேகை, மொபைல் நம்பர் அல்லது புகைப்படம் போன்றவற்றை சேவை மையங்களுக்கு சென்று மட்டுமே மாற்ற முடியும். இதற்கு நாம் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆனால் ஆதாரில் பெயர், முகவரி மாற்றங்கள் நாம் வீட்டில் இருந்து செய்து கொள்ளலாம். அதாவது பெயர், முகவரி மாற்றங்களை இணையதளத்தில் இலவசமாக அப்டேட் செய்து கொள்ள முடியும். குறிப்பாக இணையதளத்தில் இலவசமாக மாற்றம் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதாவது இன்னும் 1 நாள் மட்டுமே உள்ளன.

பின்பு டிசம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு மக்கள் தங்கள் ஆதார் கார்டில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் அதற்கு கட்டணம் செலுத்தி ஆக வேண்டும். எனவே உங்கள் ஆதார் கார்டில் பெயர், முகவரி போன்றவற்றில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் இப்போதே செய்வது நல்லது. இதற்கான வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

ஸ்டெப் 1: ஆதார் இணையதளமான uidai.gov.in என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த தளத்தில் மை (my aadhaar) என்பதை கிளிக் செய்தவுடன் கீழே தோன்றும் மெனுவில் இருந்து உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும் (அப்டேட் செய்யவும்) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 2: அடுத்து ஆதார் எண் மற்றும் கேப்சாக சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்ட பிறகு Send OTP என்பதைக் கிளிக் செய்யவும். அதன்பின்பு உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். இந்த OTP உதவியுடன் உள்நுழைய முடியும். பின்பு உங்கள் ஆதாரில் பெயர், முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பாருங்கள்.

ஸ்டெப் 3: இந்த சுயவிவரங்கள் தவறாக இருந்தால் செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்ய வேண்டும்.இதற்காக நீங்கள் ஏதாவது ஒரு அடையாள அட்டையை ஆதாரமாகச் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட நிறைய ஆதாரங்கள் இருக்கும். இதில் நீங்கள் எதை சப்மிட் செய்கிறீர்களோ அதை கிளிக் செய்யுங்கள்.

Aadhaar: நாளை கடைசி.. இலவசமாக அப்டேட் செய்வது எப்படி? இதோ வழிமுறைகள்!

ஸ்டெப் 4: இப்போது உங்களது அடையாள அட்டையை அப்லோடு செய்யுங்கள், அதன் அளவு 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதை செலக்ட் செய்து அதற்கான ஆதாரத்தையோ ஆவணத்தையோ அப்லோடு செய்ய வேண்டும். அந்த ஃபைலும் கண்டிப்பாக 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும்.

ஸ்டெப் 5: அடையாள அட்டையும், முகவரி ஆவணமும் JPEG, PNG or PDFஃபார்மட்டில் இருத்தல்வேண்டும். இதையடுத்து சப்மிட் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு ஒரு கன்ஃபர்மேஷன் மெசேஜ் ஒன்று வரும். மேலும் ஒரு யுனிக் அப்டேட் ரெஃபரன்ஸ் நம்பர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும். இதை வைத்து உங்களது விவரங்கள் அப்டேட் ஆனதை எளிமையாகக் கண்காணிக்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tomorrow is the last day to update Aadhaar card for free: Check Steps To Change Details Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X