ஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் இதர நெட்வொர்க்களில் ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி?

ஏர்டெல், ஐடியா-வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ அல்லது அனைத்து நெட்வொர்க்களிலும் இதுபோன்ற அழைப்புகளை பிளாக் செய்ய வழிமுறை இருக்கிறது.

By Meganathan S
|

விளம்பர ரீதியாகவும் இயந்திரங்கள் நமக்கு மேற்கொள்ளும் அழைப்புகளும் இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் சாதாரணமாகி விட்டது. மேலும் இது ஒவ்வொரு நாளும் நம் பொருமையை அதிகம் சோதிக்கவும் செய்கிறது. தேர்தல் காலக்கட்டங்களில் பல்வேறு கட்சி தலைவர்களிடம் இருந்து இதுபோன்ற அழைப்புகள் அடிக்கடி நம்மை தொந்தரவு செய்தன. இதுபோன்ற அழைப்புகள் சிலசமயம் நமக்கு வரும் முக்கிய அழைப்புகளுக்கு இடையூறாகவும் அமைந்து விடும். இந்த பிரச்சனையை தீர்க்கமாக எதிர்கொள்ள ஒரே வழி அழைப்புகளை பிளாக் செய்வது மட்டும் தான் எனலாம்.

ஏர்டெல், ஐடியா-வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ

ஏர்டெல், ஐடியா-வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ

ஏர்டெல், ஐடியா-வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ அல்லது அனைத்து நெட்வொர்க்களிலும் இதுபோன்ற அழைப்புகளை பிளாக் செய்ய வழிமுறை இருக்கிறது. இதுபோன்ற பிரச்சனையில் நீங்கள் சிக்கத்தவிக்கும் பட்சத்தில் அவற்றை பிளாக் செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்

முதலில் செய்ய வேண்டியவை:

முதலில் செய்ய வேண்டியவை:

முதலில் ஸ்பேம் அழைப்புகளின் வகைகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக, மூன்று விதமான ஸ்பேம் அழைப்புகள் இருக்கின்றன. முதலாவது உண்மையில் இயங்கும் ஏதேனும் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படுவதாகும், இவர்கள் தங்களின் பொருட்கள் அல்லது சேவையை நம்மிடம் விற்க முயல்வர். இரண்டாவது ரோபோட் அல்லது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குரல் மூலம் நமக்கு வரும் அழைப்புகள். இதில் நம்மிடம் பேசுபவர் பெரும்பாலும் நம் தனிப்பட்ட விவரங்களை சேகரிக்க முயற்சி செய்வர்.

டி.என்.டி.

டி.என்.டி.

தற்சமயம் டிராயின் புதிய விதிமுறையின் படி, அழைப்புகளை டி.என்.டி. (DND) எனும் சேவையை ஆக்டிவேட் செய்து இதுபோன்ற அழைப்புகளை பிளாக் செய்யலாம். இதுதவிர அனைத்து நெட்வொர்க்களிலும் இதனை செயல்படுத்த டிராய் பொதுவான வழிமுறையை அமல்படுத்தி இருக்கிறது.

வழிமுறை 1: எஸ்.எம்.எஸ். பயன்படுத்துவது

வழிமுறை 1: எஸ்.எம்.எஸ். பயன்படுத்துவது

1 - மொபைல் போனின் மெசேஜிங் செயலியை திறக்க வேண்டும்


2 - பின் புதிய மெசேஜை உருவாக்கி அதில் START 0 என டைப் செய்து


3 - இந்த குறுந்தகவலை 1909 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்


வழிமுறை 2: அழைப்பின் மூலம் ஆக்டிவேட் செய்வது


1 - முதலில் மொபைல் போனின் டையலரை திறக்க வேண்டும்


2 - பின் 1909 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்வதற்கான வழிமுறைகளை பின்பற்றவும்.

Best Mobiles in India

English summary
tired-of-spam-calls-heres-how-to-block-them-on-airtel-jio-and-other-network : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X