கால் டிராப் பிரச்சனையா? உடனடியாக டிராயிடம் புகார் தெரிவிப்பது எப்படி?

|

இந்தியாவில் நெட்வொர்க் பிரச்சனை ஏற்படுவது புதிதானதல்ல. சராசரியாக ஒருவர் குறைந்தபட்சம் இருமுறையேனும் கால் டிராப் பிரச்சனையை சந்திக்கின்றனர். சில சமயங்களில் அடிக்கடி கால் டிராப் ஏற்படும் போது டெலிகாம் நிறுவனங்கள் மீது புகார் தெரிவிப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

பிரச்சனைகள் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம்

பிரச்சனைகள் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம்

டிராய் எனும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு புகார் தெரிவிக்க பல்வேறு செயலிகளை வெளியிட்டுள்ளது. இந்த செயலிகளை கொண்டு அழைப்புகள், கேபிள் டி.வி. போன்ற சேவைகளில் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம்.

கால் தரம் பற்றிய புகார்களை தெரிவிக்க வழி செய்கிறது

கால் தரம் பற்றிய புகார்களை தெரிவிக்க வழி செய்கிறது

இதுபோன்ற செயலிகளில் ஒன்றாக டிராய் மைகால் ஆப் (TRAI MyCall) இருக்கிறது. இது கால் தரம் பற்றிய புகார்களை தெரிவிக்க வழி செய்கிறது. இந்த செயலியை கொண்டு அழைப்புகளின் தரம் பற்றிய புகார்களை நேரடியாக டிராயிடம் புகார் தெரிவிக்கலாம். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் கிடைக்கிறது.

காந்தியையும் விட்டுவைக்கலையாடா நீங்க! உங்க சேட்டைக்கு ஒரு அளவே இல்லையாகாந்தியையும் விட்டுவைக்கலையாடா நீங்க! உங்க சேட்டைக்கு ஒரு அளவே இல்லையா

சீரான இண்டர்நெட்..

சீரான இண்டர்நெட்..

இந்த செயலி டிராஸ்பேரன்ட் டி.எஸ்.பி. டேட்டா திட்டத்துடன் வருகிறது. இந்த செயலியை கொண்டு பேக்கிரவுன்ட் நாய்ஸ், ஆடியோ டிலே போன்று அழைப்புகளின் போது ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு புகார் தெரிவிக்க முடியும். இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

இவ்வாறு செய்ய துவங்கும் முன் சீரான இண்டர்நெட் இருப்பதையும், மைகால் செயலியின் மேம்பட்ட பதிப்பை இன்ஸ்டால் செய்திருக்கிறீர்களா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வைரல் வீடியோ: ரயில்வே பிளாட்பாரத்தில் ஆட்டோ! குவியும் நெட்டிசன்ஸ்களின் பாராட்டு!வைரல் வீடியோ: ரயில்வே பிளாட்பாரத்தில் ஆட்டோ! குவியும் நெட்டிசன்ஸ்களின் பாராட்டு!

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

1 - முதலில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று டிராய் மைகால் ஆப் (TRAI MyCall) டவுன்லோடு செய்ய வேண்டும்.

2 - ஐபோன் பயனர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோர் சென்று செயலியை டவுன்லோடு செய்யலாம்.

3 - செயலியை டவுன்லோடு செய்ததும், செயலிக்கு தேவையான அனுமதிகளை (ஆப் பெர்மிஷன்ஸ்- காண்டாக்ட்ஸ், கால் ஹிஸ்ட்ரி, மெசேஜ், லொகேஷன் போன்றவை) வழங்க வேண்டும்.

4 - இனி மற்றவர்கள் அழைக்கும் வரை காத்திருக்கவோ அல்லது நீங்களாக மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கலாம்.

5 - அழைப்பு துண்டிக்கப்பட்டதும், பாப்-அப் விண்டோ திறந்து அழைப்பின் தரத்தை மதிப்பிடக் கோரும்.

6 - அனுபவத்திற்கு ஏற்ப நீங்கள் மதிப்பீடு வழங்கி, நீங்கள் இருக்கும் சூழலை தேர்வு செய்யவும்.

7 - ஒருவேளை கால் டிராப் பிரச்சனையை சந்தித்திருந்தால், அதனை கால் டிராப்டு (Call Dropped) எனக் கோரும் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

8 - இனி அடிஷனல் இன்ஃபோ (Additional info) பட்டனை க்ளிக் செய்து நாய்ஸ், எக்கோ, ஆடியோ டிலே போன்ற பிரச்சனைகளை முறையிடலாம்.

9 - இறுதியில் விமர்சனத்தை சமர்பிக்க சப்மிட் (Submit) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
Tired of call drops how you can report it to TRAI in Real Time : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X