ஹேர்களிடமிருந்து போனை பாதுகாக்கும் வழிமுறைகள்.!

ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படுவது தற்போது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. பலர் தங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டதா? என்பது கூட தெரியாமல் இருப்பார்கள். உங்கள் ஸ்மார்ட்போனில் திடீரென பல எண்கள் தோன்றுவது

|

ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படுவது தற்போது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. பலர் தங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டதா? என்பது கூட தெரியாமல் இருப்பார்கள். உங்கள் ஸ்மார்ட்போனில் திடீரென பல எண்கள் தோன்றுவது, திடீரென சார்ஜ் காலியாவது, சம்பந்தமே இல்லாமல் திடீரென ரீஸ்டார்ட் ஆவது ஆகியவை ஸ்மார்ட்போன்கள் ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் ஆகும்.

ஹேர்களிடமிருந்து போனை பாதுகாக்கும் வழிமுறைகள்.!

அல்லது நீங்கள் யாருக்கும் போன் செய்திருக்க மாட்டீர்கள். ஆனால் உங்கள் கால் ஹிஸ்ட்ரியில் சம்பந்தமே இல்லாமல் ஒரு எண் தோன்றியிருந்தாலும் ஹேக்கிங் தான் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஹேக் செய்பவர்கள் உங்கள் ஸ்மார்ட்போனை ஹேக் செய்ய பல்வேறு வழிகளை கையாள்வார்கள் என்பதால் இதில் எதாவது ஒரு அறிகுறி இருந்தாலும் உடனே சுதாரித்து கொள்ளுங்கள்

லிங்குகள் மூலம் ஹேக் செய்வார்கள்:

லிங்குகள் மூலம் ஹேக் செய்வார்கள்:

அதேபோல் உங்கள் ஸ்மார்ட்போனி புதியதாக வாலட் தோன்றினாலும், பணம் வருவது, செல்வது குறித்த தகவல் தோன்றும் மெசேஜ்கள் வந்திருந்தாலும் அதனையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம். அந்த லிங்குகளை பயன்படுத்தினால் நிச்சயம் ரிஸ்க் தான். உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுவிட்டால் உங்களுடைய வங்கி கணக்கு உள்பட உங்களுடைய பல விஷயங்களை ஹேக்கர்கள் தெரிந்து கொண்டு முறைகேடுகளையும் மோசடிகளையும் செய்வதற்கு வாய்ப்பு இருப்பதால் ஹேக் செய்யப்படுவதில் இருந்து நீங்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். தற்போது ஒரு ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுவிட்டதா? என்பதற்கான மேலும் சில அறிகுறிகளை பார்ப்போம்

ஸ்மார்ட்போனில் திடீர் வித்தியாசம்:

ஸ்மார்ட்போனில் திடீர் வித்தியாசம்:

உங்கள் ஸ்மார்ட்போன் திடீரென மெதுவாக செயல்பட்டாலோ, இண்டர்நெட் பக்கங்கள், செயலிகள் லோட் ஆக தாமதம் ஆனாலோ, உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரி சார்ஜ் ஆகாமல் அல்லது திடீரென குறைந்தாலோ ஹேக் செய்யப்படுவதற்கான அறிகுறிகள் என்று அர்த்தம். அதேபோல் உங்களுக்குரிய டேட்டாவிற்கு மேல் பயன்படுத்தினாலும் மால்வேர் உள்ளே புகுந்து விட வாய்ப்பு உள்ளது. அதேபோல் மோசமான செயலி, தேவையில்லாத லிங்குகளை கிளிக் செய்வதை தவிர்த்து விடுங்கள். அதேபோல் உங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத நேரத்திலும் வெப்பமான காணப்பட்டாலும் சுதாரித்து கொள்ளுங்கள்

மர்மமான டேட்ட அல்லது செயலி:

மர்மமான டேட்ட அல்லது செயலி:

நீங்கள் டவுன்லோடே செய்யாத செயலி உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் ஹேக்கர் உள்ளே நுழைந்துவிட்டார் என்று அர்த்தம். அதேபோல் ஆபத்தான லிங்குகள் இமெயில் மற்றும் டெக்ஸ்ட் மெசேஜாக வரும் என்பதால் இதிலும் கவனம் தேவை.

தேவையில்லாத பாப்-அப்கள்:

தேவையில்லாத பாப்-அப்கள்:

உங்கள் ஸ்மார்ட்போனில் விளம்பரம் குறித்த பாப்-அப்களுக்கு பின்னாலும் மால்வேர் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதுபோன்ற பாப்-அப்களை உடனடியாக டெலிட் செய்து விடுங்கள். ஹேக்கர் உள்ளே நுழைந்துவிட்டதாக சந்தேகப்பட்டால் உடனே புக்மார்க், ஹோம் ஸ்க்ரீனை மாற்றிவிடுங்கள். நீங்கள் எந்தவித மாற்றமும் செய்யாமல் உங்கள் ஹோம்ஸ்க்ரீன் மாறியிருந்தால் சந்தேகமே இல்லை, ஹேக்கர் புகுந்துவிட்ட்டார் என்றுதான் அர்த்தம்

உங்களை மகிழ்ச்சிபடுத்துமா டாடா ஸ்கை மல்டி டிவி விலை.!உங்களை மகிழ்ச்சிபடுத்துமா டாடா ஸ்கை மல்டி டிவி விலை.!

என்ன செய்ய வேண்டும்:

என்ன செய்ய வேண்டும்:

உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக நீங்கள் சந்தேகம் கொண்டால் உடனடியாக நீங்கள் டவுன்லோடு செய்யாத செயலிகளை டெலிட் செய்துவிடுங்கள். அதேபோல் ரிஸ்கான மெசேஜ்களை டெலிட் செய்வது, மொபைல் பாதுகாப்பு சாப்ட்வேர்கலை பயன்படுத்துவது ஆகியவைகளை உடனடியாக செய்யுங்கள். அதேபோல் உங்களுடைய காண்டாக்ட் எண்களை உடையவர்களுக்கும் இதுகுறித்து எச்சரிக்கை செய்துவிடுவதும் நல்லது. இதற்கு மேலும் ஹேக்கிங் தொந்தரவு இருந்தாலும் ஸ்மார்ட்போனை ரிஸ்டோர் செய்துவிடுவது நல்லது. ரீஸ்டோர் செய்யும் முன் சில விஷயங்களை ஆன்லைன் சென்று தெரிந்து கொள்ளவும்

தற்போது ஸ்மார்ட்போன் ஹேக்கிங் செய்யப்படாமல் இருக்க செய்ய வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் என்ன என்பதை பார்ப்போம்

மொபைல் செக்யூரிட்டி சாப்ட்வேரை பயன்படுத்துங்கள்:

மொபைல் செக்யூரிட்டி சாப்ட்வேரை பயன்படுத்துங்கள்:

மொபைல் செக்யூரிட்டி சாப்ட்வேர் என்பது உங்கள் மொபைலை ஹேக் செய்வதை தடுப்பது மட்டுமின்றி உங்களுடைய பர்சனல் விஷயங்கள் திருடு போகாமல் இருப்பதையும் தடுக்கின்றது.

அசத்தலான டிஷ் டிவி ஏலா கார்டே சேனல் ஆட்-ஆன் பேக் அறிமுகம்.!அசத்தலான டிஷ் டிவி ஏலா கார்டே சேனல் ஆட்-ஆன் பேக் அறிமுகம்.!

லாக் அவசியம்:

லாக் அவசியம்:

பாஸ்வேர்டை ஞாபகம் மட்டும் வைத்து கொள்ளுங்கள்: ஸ்மார்ட்போனை பாஸ்வேர்ட் போட்டு லாக் செய்து கொள்ள வேண்டியது போனை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாப்பது மட்டுமின்றி, திருடர்களிடம் இருந்தும் பாதுகாத்து கொள்ளலாம். பாஸ்வேர்ட், அல்லது ஃபேசியல் ஐடி பயன்படுத்தி ஸ்மார்ட்போனை பயன்படுத்தாத நேரத்தில் லாக் செய்து வைத்து விடுங்கள். மேலும் பாஸ்வேர்டை மனதில் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். பாஸ்வேர்ட் மற்றும் வங்கி பாஸ்வேர்டுகளை ரிமம்பர் பாஸ்வேர்ட் ஆப்சனை தேர்வு செய்ய வேண்டாம். இது ஹேக்கர்களுக்கு ரொம்ப வசதியாக போய்விடும். ஒருசில முக்கிய பாஸ்வேர்டுகளையாவது ஞாபகம் வைத்து கொள்வது மிகவும் முக்கியம்.

ரூ.399க்கு அளவில்லா பிராட்பேண்ட் வழங்கும் ஹாத்வே: ஜிகாபைபருடன் போட்டி.!ரூ.399க்கு அளவில்லா பிராட்பேண்ட் வழங்கும் ஹாத்வே: ஜிகாபைபருடன் போட்டி.!

இலவச வைபைகளை தவிர்க்க வேண்டும்:

இலவச வைபைகளை தவிர்க்க வேண்டும்:

பொது வெளியில் கிடைக்கும் அதாவது ஓட்டல், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றில் கிடைக்கும் இலவச டேட்டாக்களை பெரும்பாலும் தவிர்த்து விடுங்கள். இதனை பயன்படுத்தும்போது ஹேக்கர்கள் உள்ளே புகுந்துவிட அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல் பொது இடத்தில் சார்ஜ் செய்யும்போதும் கவனமாக இருக்க வேண்டும்

கண் எதிரெ வைக்க வேண்டும்:

கண் எதிரெ வைக்க வேண்டும்:

பொது இடத்தில் உங்கள் ஸ்மார்ட்போனை உங்கள் எதிரிலேயே வைத்து கொள்ளவும். ஸ்மார்ட்போனை தனியாக வைத்து விட்டு வெளியே செல்ல வேண்டாம். திருடர்கள் பயம் மட்டுமின்றி ஹேக்கர்களுக்கு இது வசதியாகிவிடும்

எச்சரிக்கையாக இருங்கள்:

எச்சரிக்கையாக இருங்கள்:

புதிய மொபைல் அச்சுறுத்தல்கள் எல்லா நேரத்திலும் உருவாகின்றன. சமீபத்திய மோசடிகள் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகளை கவனத்துடன் தெரிந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Tips to Protect Your smart phone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X