Home
How to

டிக்டாக் மூலம் எளிமையாக பணம் சம்பாதிப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!

சோஷியல் மீடியாவில் கொடி கட்டி பறந்துக் கொண்டிருக்கும் டிக் டாக் ஆப் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது,குறிப்பாக டிக் டாக் ஆப் பற்றி சொல்வே வேண்டாம். எல்லோருக்குமே தெரியும். ஆடல், பாடல், டப்மேஷ் என் இன்றைய இளைஞர்கள் காலை முதல் இரவு வரை அதிலே தவம் இருக்கிறார்கள்.
எந்த பக்கம் திரும்பினாலும் டப் மேஷ் வீடியோக்கள் தான்.

அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது

அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது

டிக்டாக் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர், பேஸ்புக், டிவிட்டர்,வாட்ஸ்ஆப் போன்ற நிறுவனங்கள் வெற்றிபெற நிறைய நாட்களை எடுத்துக்கொண்டது, ஆனால் டிக்டாக் செயலி உடனே குறுகிய காலகட்டத்தில் அதிக வெற்றிபெற்று அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

டைம்-லைனில் அதிக வீடியோக்களை கொண்டுவரும்

டைம்-லைனில் அதிக வீடியோக்களை கொண்டுவரும்

டிக்டாக் செயலி வெற்றிபெற முக்கியமான காரணம் என்னவென்றால், பேஸ்புக், டிவிட்டர் போல ஃபாலோவர்ஸ் அதிகம் இருந்தால் தான் வீடியோ போஸ்ட், புகைப்படங்கள் போன்றவை அதிகமாக வரும். ஆனால் இந்த டிக்டாக் செயலி
அப்படி இல்லை, தொடர்ந்து உங்கள் டைம்-லைனில் அதிக வீடியோக்களை கொண்டுவரும்.

 75மொழிகள் பயன்படுத்துகின்றனர்

75மொழிகள் பயன்படுத்துகின்றனர்

இந்த டிக்டாக் செயலி 175நாடுகளில் 75மொழிகள் பயன்படுத்துகின்றனர். முதலில் இந்த டிக்டாக் செயலியில் விளம்பரங்கள் தொல்லை இல்லை, இப்போது வாடிக்கையாளர்கள் அதிகமானதால் விளம்பரங்கள் அதிகமாக கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு அதிக வருமானம் கிடைக்கிறது.

விளையாட்டு, சமையல், பயணம்

விளையாட்டு, சமையல், பயணம்

மேலும் டிக்டாக் செயலி மூலம் நாம் எப்படி சம்பாதிக்கலாம் என்று பார்க்கலாம், ஆரம்பத்தில் டப்ஸ்மேஷ் மட்டுமே செயல்படுத்த முடியும் என்று இருந்த இந்த தளத்தில் படிப்படியாக டெக்,விளையாட்டு, சமையல், பயணம், சிரிப்பு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் வெளிவந்தது.

ஃபாலோவர்ஸ்  அதிகமாவர்கள்

ஃபாலோவர்ஸ் அதிகமாவர்கள்

மேலே கொடுக்கப்பட்டுள்ள விளையாட்டு, டெக், சமையல்,பயணம் சிரிப்பு உள்ளிட்ட அம்சங்களில் உங்களது திறமையான வீடியோவை டிக்டாக் செயலியில் அப்லோட் செய்தால்,உங்களுக்கு ஃபாலோவர்ஸ் அதிகமாவர்கள், இதன் மூலம் உங்கள் வருமானம் மற்றும் வாய்ப்பும் கிடைக்கும்.

 கமிஷன் கிடைக்கும்

கமிஷன் கிடைக்கும்

உதரணமாக ஒருவர் யூடியூப் -ல் டெக் சம்பந்தமாக நிறைய வீடியோக்களை அப்லோட் செய்கிறார் என்றால், அந்த வீடியோவில் அமேசான் லிங்க் இருக்கும. அந்த லிங்க்-ஐ வேறு ஒரு பயனர் கிளிக் செய்து நுழைந்தார் என்றால், பயனர் எந்த பொருள் வாங்கினாலும் அமேசானில் இருந்து அந்த டெக் வீடியோ பதிவிட்டவருக்கு ஒரு கமிஷன் கிடைக்கும்.

சப்ஸ்கிரைபர் அதிகரிக்கும்

சப்ஸ்கிரைபர் அதிகரிக்கும்

இதுபோல உங்கள் டிக்டாக் பக்கம் அதிக பிரபலமாக இருந்தால் நீங்களும் ஒரு யூடியூப் சேனல் உருவாக்கலாம், அந்த யூடியூப் சேனலின் லிங்க்-ஐ டிக்டாக் செயலியின் profile பக்கத்தில் இணைக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் யூடியூப் சப்ஸ்கிரைபர் அதிகரிக்கும், பின்பு வீடியோ வியூ அதிகிரிக்கும், இதன் மூலம் எளிமையாக பணம் சம்பாதிக்க முடியும். விரைவில் டிக்டாக் செயலியில் நேரடியாக வருமான பகிர்வு வசதி கொண்டுவரப்படும் என எதிரிப்பார்க்கப்படுகிறது.

டிக்டாக் செயலில்...

டிக்டாக் செயலில்...

பொதுவாக யூடியூப் சேனலில் வரும் வருமானம் பாதி நிறுவனமும்,பாதி சேனல்உரிமையாளருக்கும் கிடைக்கும், விரைவில் இதேபோல டிக்டாக் செயலில் வரும் வருமானம் பாதி நிறுவனமும், பாதி சேனல் உரிமையாளருக்கும்கிடைக்க வாய்ப்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to Make Money on TikTok : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X