மேக்ரோ போட்டோகிராபி துவங்குவதற்கான அசத்தல் டிப்ஸ்.!

|

சிறிய அளவிலான பொருட்களை பெரிதாக காட்டுவதற்காக எடுக்கப்படும் புகைப்பட முறை மேக்ரோ போட்டோகிராபி எனப்படும். இம்முறையில் புகைப்படங்கள் மிகவும் நெருக்கமாக இருந்து(Close up) எடுக்கப்படும். காம்பேக்ட் அல்லது 35மில்லிமீட்டர் வசதியுள்ள பெரும்பாலான கேமராக்களில் மேக்ரோ போட்டோகிராபி சாத்தியமாகும். 35மில்லிமீட்டர் கேமராக்களில் 50மில்லிமீட்டர் லென்ஸ் பயன்படுத்துவதன் மூலம் மேக்ரோ போட்டோகிராபி எடுக்க முடியும்.

மேக்ரோ போட்டோகிராபி துவங்குவதற்கான அசத்தல் டிப்ஸ்.!

பெரும்பாலான டிஜிட்டல் கேமராக்களில் உள்ள மேக்ரோ மோட் வசதியின் மூலம் நெருக்கமான புகைப்படங்களை எடுக்க முடியும். கேமரா டயல் செட்டிங்ஸ்-ல் உள்ள கேமரா மெனு செட்டிங்கில் உள்ள பூ ஐகானை பயன்படுத்தி இந்த வசதியை ஆக்டிவேட் செய்து புகைப்படங்கள் எடுக்கலாம். எனினும், மேக்ரோ போன்ற ப்ரீசெட் மோட்களை பயன்படுத்தும் போது ப்ளேஸ் போன்ற செட்டிங்களில் மேனுவல் கன்ட்ரோலை இழக்க நேரிடும்.

  கேமராவை நிலையாக வைத்தல்

கேமராவை நிலையாக வைத்தல்

மேக்ரோ போட்டோகிராபியில் நீங்கள் காலடி எடுத்துவைக்கும் முன்பு, கேமராவில் நீங்கள் எடுக்கும் சாட்கள் துல்லியமாக நிலையானதாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.பெரும்பாலான டிஜிட்டல் கேமராக்களில் தானாகவே புகைப்படங்களை நிலைப்படுத்தும் வசதி இருந்தாலும், மேக்ரோ இமேஜ்களை எடுக்கும் போது அதை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது. சிறந்த மேக்ரோ இமேஜ்களை எடுப்பதற்கு ஏதுவாக, உங்கள் கேமராவை ட்ரைபாட்-ல் மவுண்ட் செய்ய வேண்டும். உங்கள் கேமராவில் குறைந்தபட்சம் 2நிமிட இடைவெளியில் ஷட்டரை தானாக இயக்குவதற்கான டைமர் உள்ளதா என்பதையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.ரிமோட் டிரிக்கர் வசதி இருந்தால் இது இன்னும் சிறப்பாக செயல்படும்.

ஆட்டோ vs மேனுவல் ஃபோகஸ்

ஆட்டோ vs மேனுவல் ஃபோகஸ்

மேக்ரோ போட்டோகிராபியில் சாட் எடுக்கும் போது சந்திக்கும் முக்கியப் பிரச்சனை ஃபோகஸ். புகைப்படம் எடுக்கும் பொருளுக்கு மிகவும் நெருக்கமாக லென்ஸ் இருக்கும் போது, ஃபோகஸ் செய்வதற்கு லென்ஸ் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். கேமராவை சிறிது பின்நோக்கி நகர்த்தியோ அல்லது ஜூம் இன் /அவுட் செய்தோ ஃபோகஸ் செய்ய முயற்சி செய்யலாம்.அப்போதும் செயல்படவில்லை என்றால் மேனுவலாக ஃபோகஸ் செய்ய முயற்சிக்கலாம். புகைப்படம் எடுக்கவேண்டிய பொருளுக்கு ஒளி வேறுபாடு (Contrast) குறைவாக இருந்தால், லென்ஸை பொருளின் முனையில் நிலைநிறுத்தி பின்புலத்தை ஒளி வேறுபாட்டை பெறலாம். ஃபோகஸை பெற்றவுடன் சாட்-ஐ மறுபடியும் மாற்றிக்கொள்ளலாம்.

நீங்கள் எடுத்த புகைப்படங்களை கேமரா எல்.சி.டி திரையில் ரீவியூ செய்து கொள்ளலாம். எல்.சி.டி திரையில் படங்கள் கூர்மையாக தெரிந்தாலும், அவை ஃபோகஸில் உள்ளதா இல்லையா என்பதை புரித்துகொள்ள முடியும்.

குறைவான ஐ.எஸ்.ஓ மற்றும் விசாலமான அபெர்சர்

குறைவான ஐ.எஸ்.ஓ மற்றும் விசாலமான அபெர்சர்

உங்களிடம் நிலையான ட்ரைபாட் வசதி இருந்து, நல்ல வசதியான செட்டிங்ஸ்-ல் புகைப்படங்கள் எடுக்கிறீர்கள் என்றால், டிஜிட்டல் சத்தத்தை குறைக்கும் வகையில், அதிக ஷட்டர் வேகத்தை தவிர்க்க வேண்டும். எனவே ஐ.எஸ்.ஓ 100 அல்லது 200ல் சூட் செய்யும் போது இவற்றை தவிர்க்க முடியும். நன்றாக சுற்றுபுறத்தை அமைக்க, கேமராவை f/2.8 என்ற வகையில் பொறுத்த வேண்டும். இதன் மூலம் பின்புலத்தை தவிர்த்து, பொருளில் மட்டுமே ஃபோகஸ் செய்ய முடியும்.

மழை புகைப்படங்கள் மற்றும் பூக்கள் அமைப்புகள்(Rain Shots and Floral Arrangements)

மழை புகைப்படங்கள் மற்றும் பூக்கள் அமைப்புகள்(Rain Shots and Floral Arrangements)

உங்களிடம் பூங்கொத்து கிடைத்தால், அதைப் பயன்படுத்தி உங்களின் மைக்ரோ போட்டோகிராபி திறனை பரிசோதித்துக்கொள்ளலாம். பூக்களை திறந்த ஜன்னலின் அருகில் வைத்து, கேமராவின் வெளிப்புற ஃப்ளேசை பயன்படுத்தி அதன் மீது ஒளியை தருவிக்கலாம். மழை காலங்களில் மழைத்துளியை பயன்படுத்தியும் கூட சிறப்பான புகைப்படங்களை எடுக்கலாம். ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீரை நிரப்பி பூக்களின் மீது அதை தெளித்து மழைத்துளியின் அமைப்பை வரவழைத்து புகைப்படம் எடுக்கலாம்.

போஸ்ட் ப்ராசஸ்சிங்

போஸ்ட் ப்ராசஸ்சிங்

உங்களின் அனைத்து டிஜிட்டல் புகைப்படங்களைப் போலவே, மேக்ரோ இமேஜ்களையும் போட்டோஷாப் அல்லது அதே போன்ற பிற எடிட்டர்கள் மூலம் ஒளி வேறுபாட்டை அதிகரிப்பது, நிறங்களை மாற்றியமைப்பது, துல்லியத்தன்மையை அதிகரிப்பது போன்ற மாறுபாடுகளை செய்யலாம். புகைப்படங்களை க்ராப் செய்வதன் மூலமும் அவற்றின் ஒட்டுமொத்த அமைப்பையும் மாற்ற முடியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tips to start with macro photography: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X