கரப்ட் ஆன எஸ்டி கார்டிலிருந்து உங்கள் பெர்சனல் தரவுகளை மீட்பது எப்படி.?

|

உங்கள் எஸ்டி அட்டை கர்ப்ட் ஆகி கொண்டிருக்கிறது அல்லது ஆகிவிட்டது என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்துவிடலாம். உங்கள் கேமராவில் ஒரு கருப்பு திரை தோன்றி "எஸ்டி அட்டை இணைக்கப்படவில்லை" என்ற எரர் மெஸேஜ் தெரிவிக்கும் அல்லது கோப்பு அல்லது புகைப்படங்களை அணுக முடியாது அல்லது உங்கள் எஸ்டி கார்டில் பெரும்பாலான புகைப்படங்கள் காணமல் போயிருக்கும் அல்லது உங்கள் எஸ்டி அட்டை உங்கள் கணினியில் அங்கீகரிக்கப்படும் ஆனால் அதில் சேமிக்கப்பட்டுள்ள எதையும் உங்களால் (புகைப்படம் அல்லது வீடியோ) பார்க்க முடியவில்லை என்றால் உங்கள் எஸ்டி கார்ட் கரப்ட் நிலையை எட்டிவிட்டது என்று அர்த்தம்.

அப்படியாக கரப்ட் ஆகிய உங்களின் எஸ்டி அட்டையில் மிக முக்கியமான ஆவணங்கள் அல்லது புகைப்படங்கள் உள்ளது அதை மீட்க ஏதாவது வலி உள்ளதா என்று கேடடால் - நிச்சயமா உள்ளது, அதை நிகழ்த்த பின் தொகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

வழிமுறை #01

வழிமுறை #01

எஸ்டி வகை முதலில் உங்கள் கார்டில் எவ்வளவு ஸ்டோர் செய்து வைக்க முடியும் என்பதை பாருங்கள். அதாவது அதன் ஸ்டோரேஜ் கேபாசிட்டி எப்படி உள்ளது என்பதை அறிய வேண்டும். உங்கள் எஸ்டி கார்டு சாதாரண வகை அல்லது உயர் கேபாசிட்டி அடங்கியதா என்று பார்க்க வேண்டும். மெமரி அல்லோகேஷன் என்பது ஒவ்வொரு கார்டுக்கும் மாறு பட்டிருக்கும்.

வழிமுறை #02

வழிமுறை #02

உங்கள் தரவுகள் எஸ்டிஎச்சி கார்டில் இருந்தால் உங்களுக்கு ரீட் செய்வதற்கு எஸ்டிஎச்சி டிவைஸ் தேவை. சில டிவைஸ்களில் மென்பொருள் டவுன்லோட்ஸ் இருக்கும். இவற்றை பயன்படுத்தி டிவைஸை அப்கிரேட் செய்து கார்ட்களை ரீட் செய்யலாம். ஆகையால் கார்டின் உற்பத்தியாளர்கள் அளிக்கும் வெப்சைட்டுக்கு சென்று அதை பற்றி படியுங்கள்

வழிமுறை #03

வழிமுறை #03

டிரைவ் லெட்டர் கணினியில் பொருத்தப்படவில்லை என்றால் கணினி ரீட் செய்யாது. சிலவற்றில் ஒரு டிரைவ் லெட்டரை ரீடர் நியமித்திருக்கும். நீங்கள் அதன் மீது கிலிக் செய்தால் உங்களுக்கு இன்சர்ட் டிஸ்க் டூ ட்ரைவ் இ தகவல் கிடைக்கும். அப்படியென்றால் இதனால் கார்டை ரீட் பண்ண முடியவில்லை என்று அர்த்தம்.

வழிமுறை #04

வழிமுறை #04

உங்கள் ரீடர் சில கோப்புகளை மட்டும் படித்து மற்றவற்றை விட்டுவிட்டால் ஒரு சில கோப்புகள் மட்டும்தான் பாழாகி உள்ளது என்று அர்த்தம். அதற்கு ஃபைல் ரிக்கவரி ப்ரோகிராம்களை இணையத்தில் தேடி பிரச்சனையை முடியுங்கள்.

வழிமுறை #05

வழிமுறை #05

சில நேரத்தில் கார்டை ஸ்கேன் செய்வதால் பிரச்சனையை தீர்க்க முடியும். இது கரப்ட் ஆன கோப்பை சரி செய்ய வேண்டும் என்று இல்லை. மை கம்ப்யூட்டர் அல்லது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் கார்டை தேடி எடுத்து அதன் மீது ரைட் க்ளிக் செய்யவும். பாப் அப் மெனுவிலிருந்து ப்ராப்பர்டீஸ் மீது கிலிக் செய்யவும். இப்பொழுது டூல்ஸ் டேபை தேர்வு செய்து எரர் செக்கிங் பட்டன் மீது கிளிக் செய்யவும். செக் பாக்ஸை கிளிக் செய்து கோப்பின் தவறுகளை சரி செய்யவும்.

வழிமுறை #06

வழிமுறை #06

கோப்பின் பெயர்களை டைரக்ட்ரி பட்டியளிடும். அதன் பின்பும் சரி செய்ய முடியவில்லையென்றால் டிரைவ் லெட்டர் மீது ரைட் கிலிக் செய்து ப்ராப்பர்டீஸை தேர்வு செய்யவும். எல்லா காலி இடத்தையும் இது காண்பித்தால் ஒன்று ஃபைல் டெலீட் ஆகியிருக்கலாம் அல்லது டைரக்ட்ரீ நீங்கி இருக்கலாம். இந்த சமயத்தில் ஃபைல் ரிக்கவரி அல்லது அன்டெலீட் ப்ரோகிராம் ஃபன்க்ஷன் உங்களுக்கு உதவும்.

வழிமுறை #07

வழிமுறை #07

உங்கள் கார்ட் ஓகே என்று ரீட் செய்தும் ஃபைலை சேமிக்க முடியவில்லை என்றால் உங்கள் கார்ட் ரைட் ப்ரொடக்டட் ஆக இருக்கலாம். இதற்கு கார்டின் ஓரத்தில் உள்ள லாக் செல்லவும். இந்த சுவிட்ச் நழுவி இருந்தால் இதை லாக்டு ஆர் ரைட் ப்ரொடக்டட் என்று உறுதி படுத்தி கொள்ளுங்கள். சுவிட்ச் மூடபடாத நிலையில் இருக்கும் பொழுது இதை சேவ் செய்யவும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஆண்ட்ராய்டில் ஒட்டுமொத்த தரவுகளையும் மொத்தமாய் அழிக்க முடியும்.!

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Tips to recover your personal data from a corrupt SD card. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X