சாம்சங் பயனர்களா நீங்கள்- பாதுகாப்பாக ஆண்ட்ராய்டு ஆப்ஸை லாக் செய்வது எப்படி?

|

ஸ்மார்ட்போன்கள் பல்வேறு தேவைகளுக்கும் பிரதானமாக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல்வேறு அம்சங்களோடு பல்வேறு விலைப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட மேம்பட்ட ஸ்மார்ட்போன்களில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதரவு

ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதரவு

சாம்சங் நிறுவனம் தற்போது தனது சாதனங்களை ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. நிறுவனத்தின் சாதனங்கள் பட்ஜெட் மற்றும் ப்ரீமியம் சாதனங்களை ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதரவோடு அறிமுகம் செய்து வருகிறது. சாம்சங் தனிப்பயனாக்கப்பட்ட ஒன் யூஐ ஸ்கின் அடுக்குடன் வருகிறது. இதில் நிறுவனத்தின் சொந்த தனிப்பயனாக்கப்பட்ட சாதனங்களில் இணைக்கிறது.

பாதுகாப்புடன் கையாள வேண்டும்

பாதுகாப்புடன் கையாள வேண்டும்

ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு எளிதாக இருந்தாலும் அதை பாதுகாப்புடன் கையாள வேண்டும் என்பது மிக அவசியம். அனைத்து ஸ்மார்ட்போன்களும் தங்கள் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது அதேபோல் சாம்சங் நிறுவனமும் தங்களது பயனர் பாதுகாப்பை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது. கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் சாம்சங் ஆப் ஸ்டோர் மூலம் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்யக் கூடிய ஏராள பயன்பாடுகள் இருக்கின்றன. அதில் செயலிகளை லாக் செய்யும் பயன்பாடும் ஒன்றாகும். பல்வேறு வகையில் சாதனத்தை லாக் செய்யக்கூடிய பயன்பாடுகள் இருக்கின்றன.

பாதுகாப்பான லாக் அம்சம்

பாதுகாப்பான லாக் அம்சம்

சாம்சங் ஸ்மார்ட்போன்கள் பயனர்களாக இருந்தால், குறிப்பிட்ட முறையில் சாதனங்களை லாக் செய்ய முடியும். சாம்சங் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு செயலிகளை எவ்வாறு பூட்டுவது என்பது குறித்து பார்க்கலாம். செயலி பூட்டுதல்களை மேற்கொள்ள நீங்கள் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை பதிவிறக்க தேவையில்லை. சாம்சங் ஸ்மார்ட்போன்களில் உள்ள அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் எஸ் செக்யூர் ஆப் கையாளுகிறது. பயன்பாடுகளை தனித்தனியாக பூட்டுவதற்கும் எஸ் பாதுகாப்பு அம்சம் பயன்படுகிறது.

பூட்டுதல் அம்சத்துக்கான வழிமுறைகள்

பூட்டுதல் அம்சத்துக்கான வழிமுறைகள்

ஸ்டெப் 1: சாம்சங் ஆப் ஸ்டோருக்கு சென்று எஸ் பாதுகாப்பு பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவும்

ஸ்டெப் 2: செயலியை பதிவிறக்கம் செய்து அதை இன்ஸ்டால் செய்யவும்.

ஸ்டெப் 3: தற்போது சாம்சங் ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் மெனுவுக்கு செல்ல வேண்டும்.

ஸ்டெப் 4: இதில் மேம்பட்ட அம்சங்கள் என்ற விருப்பத்தை தேடி உள்ளே நுழைய வேண்டும்.

ஸ்டெப் 5: தற்போது லாக் அண்ட் மாஸ்க் ஆப்ஸ் விருப்பத்தை கண்டறியவும்.

ஸ்டெப் 6: தற்போது லாக் விருப்பத்தை மாற்ற வேண்டும்

ஸ்டெப் 7: இதில் கடவுச்சொல், பேட்டர்ன் போன்ற பயன்பாடுகள் மூலம் நீங்கள் பூட்டுதல் வகை விருப்பத்தை தேர்ந்தெடுக்கலாம்.

ஸ்டெல் 8: இந்த வகையை தேர்ந்தெடுத்த உடன் பூட்ட வேண்டிய பயன்பாடுகள் தேர்ந்தெடுக்க வேண்டும், அதேபோல் மாஸ்க் செய்ய வேண்டிய பயன்பாடுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் மூன்று விருப்பங்கள் பெறுவீர்கள். இதன் மூலம் நீங்கள் பாதுகாக்க விரும்பும் பயன்பாடுகளை பூட்டி வைத்துக் கொள்ளலாம்.

செல்போன் திருட்டு என்பது மோஷமான விஷயம்

கண் இமைக்கும் நேரத்தில் செல்போன் திருட்டு சம்பவம் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டே வருகிறது. அதுவும் கூட்டம் அதிகமாக கூடும் இடத்தில் செல்போன் திருட்டு தவிர்க்க முடியாத ஒன்றாக தற்போது மாறி வருகிறது.

பணம், நகை திருட்டு என்பதை விட செல்போன் திருட்டு என்பது மோஷமான விஷயம், செல்போன் தானே திருடப்பட்டுள்ளது என்ற சிறு மனஉளைச்சலோடு வேறு செல்போன் வாங்குவதற்கு நாம் சென்று விடுகிறோம்.

சர்வ சாதாரணமாக கடக்கமுடியாத விஷயம்

செல்போன் திருட்டு என்பது சர்வ சாதாரணமாக கடந்துவிட முடியாது. நமது மொத்த தகவலும் புகைப்படம் என அனைத்தும் உட்பட வங்கி கணக்கு முதல் செல்போனில் தான் இருக்கிறது. செல்போன் திருட்டு என்பது பணத்திற்காக மட்டும் நடக்கவில்லை. அதை தாண்டி பல்வேறு உள்நோக்கத்துடன் அரங்கேறுகிறது. ஸ்மார்ட்போன்களை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதும் அதை பாதுகாப்பாக கையாள வேண்டும் என்பதும் மிக மிக முக்கியமான விஷயம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Tips for Samsung users: How to lock Android apps securely

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X