க்ரிப்டோகரென்சி பற்றிய மூன்று பகீர் தகவல்கள்.!

Bitcoin, Cryptocurrency, Dark Web, Cyber Threat, smartphone , Technology, News, India, பிட்காயின், க்ரிப்டோகரென்சி, ஸ்மார்ட்போன், தொழில்நுட்பம், செய்திகள், இந்தியா

|

இண்டர்நெட் உலகில் சிலவகையான பண பரிமாற்றங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் கரென்சிக்களை தான் க்ரிப்டோகரென்சி என அழைக்கப்படுகிறது. க்ரிப்டோகரென்சிக்களில் அதிக பிரபலமானதாக பிட்காயின் இருக்கிறது.

க்ரிப்டோகரென்சி பற்றிய மூன்று பகீர் தகவல்கள்.!

உலகம் முழுக்க பிட்காயின்கள் பல்வேறு பெயர்களையும், பயன்பாடுகளையும் கொண்டுள்ளது. சில அரசாங்கங்கள் பிட்காயின்களுக்கு விர்ச்சுவல் கரென்சி என்ற தரத்தை வழங்குகின்ற நிலையில் மற்ற அரசாங்கங்கள் தங்களது மக்களை இவற்றை பயன்படுத்த வேண்டாம் என்கிறது. பிட்காயின் பண பரிமாற்றங்கள் பல்வேறு குற்ற செயல்களை ஊக்குவிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதால் இவை அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகின்றன.

வியாபாரம்

வியாபாரம்

நாம் ஏன் பிட்காயின்களை பயன்படுத்த போகிறோம் என்ற எண்ணம், நம்மில் பலருக்கும் இருக்கும். சிலர் பிட்காயினை வைத்து என்ன செய்ய போகிறோம் என்ற எண்ணம் இருக்கும். வொர்ல்டு வைடு வெப் துவக்க காலத்தை போன்று பிட்காயின்களும் சட்டவிரோத போதை மருந்து வியாபாரம் அல்லது இதர சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்கவிப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இண்டர்நெட்

இண்டர்நெட்

இது பெரும்பாலும் உண்மை தான் என்றாலும் பிட்காயின் கரென்சிக்களுக்கு சமூகத்தை முழுமையான டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு வழிவகை செய்வதோடு அனைவரும் இவற்றை எவ்வித சிக்கல்களும் இன்றி பயன்படுத்த முடியும்.
வங்கிகள், பேமென்ட் மற்றும் வணிக சேவை வழங்குவோரை பெரும்பாலானோர் அணுக முடியாதவைகளாகவே இருக்கின்றன. இவ்வாறானோர் இண்டர்நெட் செயல்படுத்தியிருக்கும் டிஜிட்டல் பொருளாதாரத்தை பயன்படுத்த முடியும் என்றாலும் இவற்றில் அவர்களால் நேரடியாக பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 சவால் விடும் திறன்

சவால் விடும் திறன்

பிட்காயின் மூலம் அவர்களுக்கு பணத்தை பரிமாற்றம் செய்வது மற்றவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பும் அளவு வசதியானதாக இருக்கிறது. இந்த சேவையை பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள குடும்பத்தாருக்கு பணம் அனுப்பவும், ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ஊதியம் மற்றும் விரும்பும் பொருட்களின் அதிக சேமிப்பை வழங்கும் பிரான்டுகளை தேர்வு செய்ய முடியும்.

எதார்த்தமாக பார்த்தால் பிட்காயின்களால் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு சவால் விடும் திறன் உள்ளது. இது மற்ற வகை பண பரிமாற்றங்களை விட முற்றிலும் வித்தியாசமானது என்பதே இதற்கு முக்கிய காரணமாக கூற வேண்டும்.

 பண பரிமாற்றங்களை சென்சார் செய்ய முடியாது

பண பரிமாற்றங்களை சென்சார் செய்ய முடியாது

பிட்காயின்களை மற்றவர்களுக்கு அனுப்பும் போது யாராலும், பரிமாற்றத்தை தடுக்க முடியாது. யாருடன் பண பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும். இதனால் நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பும் பணத்தை யாராலும் பாதியில் எடுத்து கொள்ள முடியாது.

பிட்காயின்களை பறிமுதல் செய்ய முடியாது

பிட்காயின்களை பறிமுதல் செய்ய முடியாது

கார்ப்பரேஷன்கள் மற்றும் அரசாங்கங்களால் உங்களது சேமிப்பை எவ்வித காரணத்திற்காகவும் பறிமுதல் செய்ய முடியாது. வங்கிகள் மற்றும் சேவிங் அக்கவுன்ட்களை போன்றே தேசிய அவசர நிலை, பொருளாதார சிக்கல் அல்லது வங்கி திவாலாவது என எவ்வித சூழ்நிலையிலும் உங்களது சேமிப்பை யாராலும் அபகரிக்க முடியாது.

அந்த வகையில் உங்களது கணக்குகளை முடக்கவோ அல்லது சேமிப்புகளை எடுக்க முடியாது. எனினும் திருடர்கள் மற்றும் காவல் துறை சார்பில் உங்ளது சாதனங்களை ஹேக் செய்து, பேக்கப் கோட்களை திருடவோ அல்லது உங்களது பிட்காயின் சேமிப்பை உங்களை கட்டாயப்படுத்தி பரிமாற்றம் செய்ய வைக்கலாம்.

பிட்காயின் தரத்தை குறைக்க முடியாது

பிட்காயின் தரத்தை குறைக்க முடியாது

உலகின் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார சிக்கல் அதன் குடிமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. உங்களது சேமிப்புகள் திடீரென மாயமாவது அல்லது இதர அச்சுறுத்தல்களுக்கு வாய்ப்பே ஏற்படாது. பிட்காயின்களின் தந்திரமும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. மொத்தத்தில் 2.1 கோடி பிட்காயின்கள் மட்டும் பரிமாற்றத்திற்கு விடப்படும், இதனை யாராலும் உயர்த்தவும் முடியாது மாற்றியமைக்கவும் முடியாது.

மேலும் பொருளாதாரத்திற்கு பாதுகாப்பு மிகவும் முக்கியம். நாம் வைத்திருக்கும் பண மதிப்பை வெளி நபர்களுக்கு ஒருபோதும் தெரிவிக்க விரும்ப மாட்டோம். இதேபோன்று வியாபார உலகில் நம் பொருளாதார தகவல்களை போட்டியாளர்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்ள வேண்டும். வழக்கமான வங்கி சேவைகளுடன் ஒப்பிடும் போது பிட்காயின்கள் அதிக பாதுகாப்புடன் இருக்கின்றன. பிட்காயின் சிஸ்டங்கள் பண விஷயத்தில் நிலைப்பாடு மற்றும் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் நமக்கு சவால்விடும் வகையில் உள்ளது.

இத்துடன் நமது பொருளாதாரத்தை எவ்வாறு சேமிக்க வேண்டும் என்பதை ஒவ்வொருத்தரும் முடிவு செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Three things you need to know about Bitcoin and cryptocurrencies; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X